ப.அருளியாரின் அயற்சொல் அகராதி (பாகம் 1) நூலிலிருந்து,
1. அக்கப்போர் (உருது) = வம்புப் பேச்சு,
2. அக்கிரமி = நயன்தவறி ,
3. அக்னிபிரவேசம் = தீப்புகல்
4. அக்னிநட்சத்திரம் = அனலுடு
5. அகங்காரம் = யான்மையம்
6. அகண்டம் = பகுப்பிலி,
அனைத்துறு, நிறைவூறு
7. அகத்தியன் = ஆக்கத்தன்
8.அகந்தை = செருக்கு
9. அகலிகை = உழுவுறாமாள், கன்னி
10. அகிலம் = உலகம், முழுவதும்
11. அங்கபிரதட்சணம் = மெய்வலமரல்
12. அங்கி = நெட்டுடை
13. அச்சா (உருது) = நன்று, நல்லது
14. அசட்டை = கவனமின்மை
15. அசடு = பேதைமை
16. அசதி (a-sati)= கற்பிலி
17. அசல் (உருது)=மூலம்
18. அசலம்(a-cala)=அசைவற்றது,மலை
19. அசனம்= உணவு, சோறு,பசி
20. அஞ்சலி = கைகூப்புகை, தொழுகை
21. அஞ்சலி = உழக்கு
22.அஞ்ஞானம் = அறியாமை (ஞானம்
தமிழ்ச்சொல்லே)
23.அட்டவணை (மராத்தி) = பட்டி
24.அடாவடி(அரபி)= பகைமை,வெறுப்பு
25.அண்டபுளுகன்= பெரும்புளுகன்
26.அணு: anu (சமஸ்)= மந்திரம்
27. அணுகன் = வல்லுனன், எளியன்
28. அணுத்துவம் (anutva)= நுண்மை
29. அத்தாட்சி = மெய்ச்சான்று
30. அஸ்தி = எலும்பு
31.அத்வைதம்(a-dvaita)=இரண்டன்
32.அதர்வணம் = தீமறை
33. அதாலத் (அரபி)= நயன்மன்றம்
34. அதிகப்பிரசங்கம்(தமிழ்+சமஸ்)=
35. அதிசயம் = சிறப்பு, வியப்பு
36. அதிதி = விருந்தினர்
37. அதிதி= வையம், நிலனுலகு, சிவை
38.அதிபதி=தலைவர், அரசன்
(அதி-தமிழ், பதி-தமிழ்)
39.அதிமதுரம்=அதியினிமை
40.அதிர்ஷ்டகாரன்(a-drsta)=ஆகூ
41.அதிருப்தி= மனக்குறை
42.அதிவிருத்தம்=வரம்புமீறல்
43.அந்தம்(andha)= குருடு,அறிவின்மை
44.அந்தம்(anta)=ஈறு,நிச்சயம்,
நாசம்,உறுப்பு,அண்மை,இயல்பு
45.அந்தம்(antas)=கமுக்கம்
46.அந்தம்(andha)=இருட்டு
47.அந்தரங்கத்தியானி=ஆமை
அந்தரங்கம்=கமுக்கம்,உள்ளம்,உட்
48.அந்தாதி=கடைமுதல்
49.அந்திமகாலம்=இறப்புவேளை
50.அநாதி(a-jnati)=பழமை
51.அநாதை=ஏதிலி
52.அநீதி=நயனின்மை,கேடு
53.அப்பாயிண்ட்மெண்ட்(ஆங்)=அமர்
54.அப்பாவி=பேதை
55.அப்பிராணி=பேதை,வலிவிலி
56=அப்போஸ்தலர்(கிரேக்)=முற்செ
லுனர்,விடையூழியர்
57.அப்ரூவர்(ஆங்)=ஏற்பாளர்
58.அபத்தம்=பொய்ப்பழி,வழு
59.அபராதம்=தண்டம்,குற்றம்
60.அபலை=பெண்,பேதை,வலிவிலி
61.அபாண்டம்(மராத்)=தீப்பழி,இடு
62.அபிராமி=கவரெழிலி,ஈர்ப்பழகி
63.அபிவிருத்தி=மேம்பெருக்கம்
64.அபின்(பாரசீ)=கசமத்த பிசின்
65.அபிஷேகம்=திருமுழுக்கு
66.அபேட்சை=வேட்பு,வேட்கை,விரு
67.அம்சம்(hamsa)=அன்னம்,எகினம்
68.அம்சம்(amsa)=கூறு,பிரிவு,
69 அம்சம்(amsha)=மதிப்பெண்
70.அம்பட்டன்=முடிதிருத்துநன்
71.அம்பரம்=வானம்,ஆடை,மேழவுடு
72.அம்பரம்=மஞ்சள்,பாவம்,உதடு
73.அம்பா=அம்மை,தாய்
74.அம்பாரம்=நெற்குவியல்
75.அமம்=நோய்
76.அமலம்(சமஸ்)=காக்கைப்பொன்,
77.அமலர்=நெல்லிமுள்ளி
78.அமலன்=மாசில்லான்,இறைவன்
79.அமலை=மாசிலி
80.அமாவாசை=காருவா
81.அமிஞ்சி(தெலுங்)=கட்டாயப்பணி
82.அமிர்தம்=அழிவின்மை,தேவருணவு
அமுதம்,இனிமை,சோறு,
இரவாமற்கிடைக்கும் ஊண்,துறக்கம்
83.அமிர்தயோகம்=அமுதவோகம்
84.அமிலம்=புளிப்பு,புளிகம்
85.அமீர்(உருது)=தலைவன்,
86.அமீன்(உருது)=தண்டலன், அறமன்ற
கட்டளை நிறைவேற்றாளன்
87.அமீன்(உருது)=கமுக்க அலுவலன்
88.அமீனா(உருது)=நயனக கட்டளையர்
89.அமுதசுரபி= அமுதகலம்,
90.அமுல்(உருது) = நடைமுறை,
நிறைவேற்றம், மேல் உசாவல்
91.அயர்ன் பாக்ஸ் (ஆங்கி) =
தேய்ப்பை, வழப்பம்
92. அயனம் = வழி, பாதியாண்டு ,
93. அயனம் = பிறப்பு, இல்லம், புகல்,
கதிரவனின் தென்-வடல் செலவு
94. அ(ய)சனம்= உணவு
95. அ(ய)ஜனம் = மறை, நான்மறை
96. அர்த்தம் (artha)= பொருள்
97.அர்த்தம்(ardha)= பாதி, பகுதி, அரை
98.அர்த்தராத்திரி=நடுஇரவு,அரை
99.அர்த்தால்(ஆங்கி)=கடையடைப்பு
100.அர்ப்பணம் = படையல், ஈவு
101.அர்ஜண்ட்(ஆங்கி)= சடுத்தம்,
102. அரக்கு (உருது) = எரிநறா
103. அரவிந்தம் = தாமரை
104. அரிக்கேன் (ஆங்கி)=
காற்கணையான், அணையாவிளக்கு,
105. அரிட்டம் = மோர், மிளகு, வெப்பு,
பிறவிற் குற்றம், சாக்குறி, இறப்புக்குறி,
பேற்று அறை,நன்மை,காட்டு முருங்கை
106. அரியர்ஸ் (ஆங்கி)= நிலுவை
107. அரிஹரன் = அரியரன்
108.அருகம்(arha) = தக்கது,
109. அருகம் (arhat)=தகைஞன் மதம்,
110.அருகன்= தகைஞன்
111. அருச்சகன் = பூசனையன்,
பூசைசெய்குநன்
112. அருச்சுனம் (arjuna) = பந்து,
அறுகரிசி-வாழ்த்து, பொன்,
113. அருச்சுனம் = வெண்மை, மருது
114. அருணம்(aruna)= அரனம், சிவப்பு,
செந்தூளம், செம்மறியாடு
115. அருணம் = செவ்வானம்,
பொன்மை, செங்குட்ட நோய்,
116. அ(ஹ)ருணம்(harina)=வெண்மை,
117. அருணம்(arnas)= நீர்
118. அருணன்= செங்கதிரோன், அரன்,
119. அருந்ததி = விடுதலையள்,
120. அருந்ததீயர் = பறம்பர், புறம்பர்
121. அரேக்(arrack) (ஆங்கி)= சாறாயம்,
122. அல்லா (அரபி)= பேரிறை,
எல்லோன்,எல்லிறை
123. அல்லியம்(halya)= கலப்பை
224. அல்லேலூயா(எபிரே)= இறைவா
125. அல்வா(அரபி)= இன்களி,
126. அல்ஜீப்ரா (ஆங்கி)=
127. அலக்கு (உருது)= தனிமை,
128. அலங்கரித்தல்= புனைதல்,
அணிப்பெற புனைதல்
129. அலட்சியம் = கவனமின்மை,
பொறுப்பின்மை, மதியாமை,
130. அலியாஸ் (ஆங்கி)= அல்லது
131. அலுமினியம்(ஆங்கி)=அளமியம்
132. ஆலெப்பீ(Aleppe) (ஆங்கி)=
பரப்பாறு, அகலப்புழை
133. அலோபதி(ஆங்கி)=
எதிர்முறையம், எதிர்வியம்
134. அவகாசம் = சமையம், அமையம்,
காலம், காலநீட்டிப்பு, இடம்
135. அவகாசம்= சொத்துரிமை,
136. அவசியம் = கட்டாயம், உறுதி,
இன்றியமையாமை, கட்டாயத்தேவை
137. அவதாரம் = தோற்றரவு,
இறங்குகை, கீழிறங்குகை,
138.அவதாரம் = துய்ய நீர்த்துறை,
139. அவதானம் = கவனம்,
நினைவுத்திறச்செயல்,
140 .அவதானம்= பலபொருள்_
ஒருநேரக்கவனகம், கவனகம்
141. அவதானம்= மனவொருமைப்பாடு
142. அவதானம் = முடிவு
143. அவதி= துன்பம், துயர்
144. அவதி= இடுதிரை
145. அவதி= எல்லை, ஐந்தாம்
வேற்றுமை எல்லைப்பொருள்,
தவணை, அளவு, கணக்கு
146. அவதி= துணுக்கு, பிரிவு, காலம்,
குழி, விடுமுறை, தள்ளிவைப்பு
147. அவனி = நிலம்
148. அவஸ்தை = துன்பம், துயர்
149. அவா = இறங்குகை
150.அவார்டு(ஆங்கி)=தீர்ப்பு,
151. அவிசாரி-பரத்தை, விலைமகள்
152.அவினாசி-அழிவிலான்,கடவுள்
153.அற்பம்-சிறுமை,எண்மை,இழிவு,
கீழ்மை, எடைக்குறை
154.அற்பாயுசு-குறையாயுள்,
சிறுவாணாள்,சிறுநேரவாழ்வு
155.அற்புதம்- அயிரங்கோடி,
ஆயிரங்கோடி
156.அற்புதம் - வியப்பு, புதுமை,அழகு
157.அற்புதம்-வெறுமை,ஒன்றுமின்
158.அற்புதம்- தசைக்கணு,
தசைக்கட்டியெழுச்சி
159.அன்னக்காவடி- சோற்றுக்காவடி,
சோற்று இரவலன்
160.அன்னச்சத்திரம்-
ஊண்கொடையகம், ஊட்டுப்புரை
161.அன்னதானம்-ஊண்தானம்,
162.அன்னபானம்-சோறும் நீரும்
163.அன்னபோஸ்ட்(ஆங்கி)-எதிர்வி
164.அன்னாசி(போர்த்)-செந்தாழை
165.அன்னாபிஷேகம்-ஊண்முழுக்கு
166.அன்னியன்-அயலவன்,
புறம்பானவன்,உறவிலான்
167.அன்னியோன்யம்-ஒருமை,
ஒன்றிப்பு, ஒற்றுமை
168.அனந்தம்- அளவின்மை,
169.அனந்தம்- அழிவின்மை
170.அனவரதம்-எப்போதும், தொடர்ந்து
171.அனாதை-போக்கிலி,வழியிலி,
காப்பிலி,வறியவன்
172.அனாமத்து(உருது)-தனி,
தனிநிலை, தனிச்சிறப்பு,
வேற்றுநிலை
173.அனாவசியம்- தேவையின்மை,
174.அனிருதம்- பொய்
175.அனிருதம்-உழவு, நிலையற்றது
176.அனீமியா- குருதிச் சோகை
177.அனுக்கிரகம் - அருள், அருளுதல்,
178. அனுசரணை - சார்ந்தொழுகுகை
179.அனுசரிப்பு- பின்பற்றுகை,
180.அனுசுயா -காழ்ப்பிலி,
181. அனுபவம் - பட்டறிவு, வினையறிவு
நுகர்ச்சி, துய்ப்பு, இன்பத்துய்ப்பு,
182. அனுபூதி - பட்டறிவு
183. அனுபோகம் - இன்பநுகர்ச்சி,
பழக்கம், கையாளுகை,
பயன்கொள்ளுகை
184. அனுமதி - இசைவு, ஏற்பு,
உடன்பாடு, ஒப்பம்
185. அனுமானம்- கருதுகை,
கருதலளவை, உன்னிப்பு, ஐயுறவு
186. அனுயோகம் - வினா
187. அனுராகம் - அன்பு, காமப்பற்று
188.அனுவிருத்தி- தொடர்ச்சி,
189. அனேகம் - பல, பெரும்பான்மை
190. அனேகம் - காலம்
191. அஃபிடவிட் - உறுதியாவணம்
192. அஃபெக்ட் - ஆட்படு, தாக்கம்பெறு
193. அஜாக்கிரதை-
எச்சரிக்கையின்மை, கவனமின்மை
194.அஜாதசத்ரு- இணைப்பகையிலி,
பகையிலி, எதிரியிலி
195. அஜினோமோட்டோ - சுவையீனி
196. அஜெண்டா - முற்குறிப்பு
197. அஷ்டமி - எட்டாம் மதிநாள்
198. அஷ்டாங்கம் - எண்ணுறுப்பு,
எண்ணுறுப்பு தோய்வு கிடைவணக்கம்
199. அஷ்டாவதானி- எண்கவனகர்
200. அஸ்ட்ராலாஜி- கணியம்
201.அஸ்தமனம் - மறை, சாவு
202. அஸ்தி - எலும்பு
203. அஸ்தி - தும்பி, யானை
204. அஸ்திவாரம் - கடைக்கால்,
205. அஹம் - நான்
206. அஹம்பாவம் - தற்செருக்கு
207. அஹிம்சை - வருத்தாமை,
208. அக்ஷ்யம்- அழிவின்மை,
209. ஆக்கர்(ஆங்கி) auger- துரப்பணம்
210. ஆக்கிரமிப்பு - வன்கவர்பு
211 ஆக்கினை - கட்டளை , ஆணை
212. ஆக்கினை - கட்டைவிரல்
213. ஆக்சிடென்ட் (ஆங்கி)- நேர்ச்சி
214. ஆக்ட் (ஆங்கி)- செயல், சட்டம்
215.ஆக்சன்(ஆங்கி)auction-
216. ஆகம சாஸ்திரம் - மறைப்பனுவல்,
தோன்றிய நூல், தோன்றியம்
217. ஆகமம் - வருகை
218. ஆகமம் - தோன்றியம்
219. ஆகவம் - வேள்வி
220. ஆகவனம் - பலி
221. ஆகஸ்தியம்(Agastya)- தமிழ்
222. ஆகாசத்தாமரை - வானத்தாமரை,
223. ஆகாஷம் - காயம், வான், வானம்
224. ஆகாயவிமானம் - வானூர்தி
225. ஆகாரம் - உருவம் , உடம்பு
226. ஆகாரம் - உணவு, உணா, இரை
227. ஆகாரம் - குறிப்பு
228. ஆச்சரியம் - வியப்பு
229. ஆசம்(hasa) - சிரிப்பு
230. ஆசனம் - இருக்கை, அமரணை
231. ஆசாபாசம் - ஆசைப்பாசம்
232. ஆசாமி(உருது)- ஆள், தனியாள்
233. ஆசாரக்கோவை-
நன்னொழுக்கக்கோவை
234. ஆச்சாரம் - நன்னடை,
235. ஆசாரம்- பெருமழை
236. ஆசாரம் - காட்சி
237. ஆசாரி - மாலியப்பார்ப்பான்,
238. ஆச்சார்யா - குரு, ஆசான்,
ஆசிரியர், சமையத்தலைவன்
239.ஆசிய(hasya)நாடகம்- நகைநாடகம்
240. ஆசிரமம் -பாழி, முனிவரகம்,
241. ஆசிர் - வாழ்த்து
242. ஆசிர்வாதம்- வாழ்த்து
243. ஆசீவகன் - தகைஞத் தவத்தவன்
244. ஆசுவாசம் - இளைப்பாறுகை
245. ஆட்சேபம் - குற்றம்
246. ஆட்டோ(ஆங்கி) - தானி
247. ஆட்டோகிராப் (ஆங்கி)-
248. ஆட்டோசர்வீஸ்(ஆங்கி)-
249. ஆட்டோமெட்டிக் (ஆங்கி)-
250. ஆட்டோரிக்ஸா(ஆங்கி) -
251. ஆட்டோலைனிங் (ஆங்கி) -
252.ஆட்டோ ஸ்பேர் (ஆங்கி) -
253.ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் (ஆங்கி) -
தானி உதிரியுறுப்புகள்,
தானி உதிரிப் பாகங்கள்
254. ஆட்சேபம் - தடை, முரண், எதிர்ப்பு
255. ஆடம்பரம் - பகட்டுத் தோற்றம்,
256. ஆடி - நாரை
257. ஆடிட்டர் - கண்காணிப்பாளர்
258. ஆடிட்டோரியம் - கேட்பகம்,
259. ஆடியன்ஸ் - அவையோர்
260. ஆடியோ - கேட்பொலி
261. ஆணவம் - செருக்கு
262. ஆணி- எல்லை
263. ஆத்திரக்காரன் - விரைவு
வினையன் , விரைவு சினத்தன்
264. ஆத்திரம் - பரபரப்பு, சினம்,
265. ஆத்ம சக்தி - ஆதன்திறன்,
266.ஆத்மசினேகிதன் -உயிர்த்தோழன்
267. ஆத்ம சுத்தி - ஆதன் தூய்மை
268. ஆத்மஞானி - தனையறிந்த
ஞானி, தனையறிந்தோன்
269. ஆத்மஹத்தி - தற்கொலை
270. ஆத்மா - ஆதன் , உயிரி
271. ஆத்மார்த்தம் - தன்பொருட்டு,
272. ஆதங்கம் - மனப்பொருமல்,
ஆற்றாமை, மனவேக்காடு,
273. ஆதங்கம் - துன்பம், முரசினோசை
274. ஆதரவு - தாங்கல், துணைதரவு,
உதவி, அன்பு, தேற்றுகை
275. ஆதரித்தல் - துணை தருதல்,
உதவுதல், பேணுதல், காத்தல்
276. ஆதவன் - கதிரவன், ஞாயிறு
277. ஆதவன் - மறையவன், பார்ப்பான்,
278. ஆதாம் (ஹீப்ரு) - ஆதன்,
ஆதியன், முதன் மாந்தன்
279.ஆதாயம் - வரவு, ஊதியம்,வரும்படி
280. ஆதாரம்- சான்று, மூலம், உடல்,
அடிப்படை, அடிமனை,
281. ஆதி(adhi) - மனநோய்
282. ஆதி (ati)- நாரை
283. ஆதி (adhi)- ஒற்றி
284. ஆதிக்கம் - தலைமை,
மேலாண்மை, உரிமை
285. ஆதிசேஷன்- அயிரத்தலை நாகன்
286. ஆதித்தர் - தேவர்
287. ஆதித்தன் - ஞாயிறு, கதிரவன்
288. ஆதித்தியன் (aditya)- ஞாயிறு
289. ஆதித்தியன் (atithya)-
290. ஆதி திராவிடன் - ஆதித்தமிழன்
291. ஆதிநாதன் - ஆதி நம்பி, கடவுள்
292. ஆதியாகமம் - பழந் தோன்றியகம்,
தொல்- தோன்றியம்
293. ஆதிரை - ஆறாமுடு
294.ஆதீனகர்த்தா- சிவனிய
295. ஆதீனம் - உரிமை, வயம்,
296. ஆந்திரம் - வடுகநாடு
297. ஆந்திரன் - வடுகன்
298. ஆப்டிகல்ஸ் (ஆங்கி) -
. கண்ணாடியகம்
299. ஆப்ரேஷன்(ஆங்கி) - செயற்பாடு, அறுவை
300. ஆப்பிள் (ஆங்கி) - அரத்தி
301.ஆப்ரஹாம் - தந்தை, இறை
302. ஆப்ஸண்ட் - வராத, இராத,
303. ஆபத்து - நேர்ச்சி, பேரிடர்,
304. ஆபரணம் - அணிகலம், நகை
305. ஆபரணம் - புனைவு, சுவடிப்பு,
306. ஆபாசம் - அருவருப்பு,
தூய்மைக்கேடு, கீழ்மைத்தோற்றம்,
மாசு, தெறிப்புரு, எதிருரு
307. ஆபாசம் - முறைத்தவறு,
இழித்துரை, அவதூறு,
308. ஆஃப் (ஆங்கி) - அணை, நிறுத்து
309. ஆஃப்செட் பிரஸ் (ஆங்கி) -
மறுதோன்றி அச்சகம்
310. ஆம்பரியம் (அரபி) - மின்சாரம்
311. ஆம்பளிஃபயர் (ஆங்கி) - பெருக்கி
312. ஆம்புலன்ஸ் (ஆங்கி) - திரிவூர்தி
313. ஆம்லட்(ஆங்கி) - முட்டையடை
314. ஆமாத்தியன் - மந்திரி
315. ஆமென்(எபிரே) -அப்படியே ஆகுக
316. ஆமோதித்தல் -
உடன்பாடறிவித்தல்,
உடம்பாடுகூறல், ஒப்புதல்,
317. ஆயத்தம் (a-yatta) -
அணியப்பாடு, அணியம்
318. ஆயத்தம்(ayasta) - கூர்மை, சினம்,
319. ஆயா (போர்த்)- செவிலி,
மகளிரகப் பணிப்பெண்
320. ஆயாசம் - களைப்பு, சோர்வு,
இளைப்பு, மனவருத்தம்
321. ஆயிலியம் - கட்செவி (தொண்டாம்
உடு), அரவின் நாள், அரவு நாள்
322. ஆயுசு- ஆயுள், வாணாள், அகவை
323. ஆயுதபாணி - கருவிக்கையன்
324. ஆயுதபூஜை - ஆய்தப்பூசை,
325. ஆயுதம் - படைக்கலம்,
படைக்கருவி, ஆய்தம், கருவி
326. ஆயுர்வேதம் - ஆயுள்மறை,
ஆயுள் நல மருத்துவம்
327. ஆயுள்வேதர் - ஆயுள் மருத்துவர்
328. ஆர்க்யூமண்ட் (ஆங்கி) - நிறுவுரை
329. ஆர்க்கெஸ்ட்ரா (ஆங்கி)- பல்லியம்
330. ஆர்கனைசேஷன்(ஆங்கி)-
அமைப்பகம், அமைப்பாயம்
331. ஆர்ச்சனம் (arjana)- ஈட்டம், தேட்டம்
332. ஆர்ச்சனம் (arcana)-வழிபடுகை,
வேண்டல், போற்றுதல்
333. ஆர்த்தி (arti)- துயரம், துன்பம்
334. ஆர்த்தி (artti)- விற்குதை, ஆர்வம்
335. ஆர்ட் சர்வீஸ் (ஆங்கி)-
கலைப்பணியகம்
336. ஆர்ட் பிரிண்டர்ஸ் (ஆங்கி) - கலை
337. ஆர்டர் (ஆங்கி) - ஏவம், ஆணை
338. ஆர்டர்லி (ஆங்கி) - ஏவல்
பணிஞன், ஏவலன்
339. ஆர்டினரி (ஆங்கி)- பொதுவான,
340. ஆர்மி (ஆங்கி) -படை
341. ஆர்மோனியம் (ஆங்கி) -
342. ஆர்ஜிதம் - நிலப்பறிப்பு,
கையகப்படுத்தம், ஈட்டம்,
சொத்தீட்டம், கவர்ந்தீட்டுகை
343. ஆரஞ்சு (ஆங்கி) - இன்னரந்தை
[நரந்தம்(தமிழ்)~narang(பாரசீ)~
344. ஆரணம் - அரணமறை
345. ஆரணி - அரணி, காடுகிழாள்,
346. ஆரணியம் - அரணம், காடு
347. ஆரம்பம்(a-rambha)- தொடக்கம்,
348. ஆரம்பம் (aramba)-பெருமிதம்,
பதற்றம், கொலை
349. ஆராதகர் - பூசகர்
350. ஆராதனை - பூசை
351.ஆராதித்தல் - பூசனை பண்ணுதல்,
352. ஆரியம் - வடமொழி,கலப்பு மொழி
353. ஆரூடம்- கணிக்கம், குறிநூல்,
354. ஆரொட்டிமா (ஆங்கி)- அம்புக்
கிழங்கு மா, கூவைக் கிழங்கு மா,
கணைவேரி மா
355.ஆரோக்கியம் - நோயின்மை,
356. ஆரோகணம் (a-rohana)-
எடுப்பியம், எடுப்பிசை, ஏற்றம்,
357. ஆரோகணம் (arohana)-
வெளிப்போகை, வெளியேறுதல்,
358. ஆல்கஹால் (ஆங்கி) - எரிநறா
359. ஆல்ட்டரேஷன் (ஆங்கி) -
மாற்றியமைப்பு, திருத்திடு
360. ஆல்பம்(ஆங்கி)- வெள்ளேடு,
வெள்ளேட்டுத் தொகுப்பம்
361. ஆல்ரைட் (ஆங்கி)-
அனைத்துஞ்சரி, எல்லாஞ்சரி, சரி
362. ஆலயம்(a-laya)- கோயில்,
தங்குமிடம்
[யானைக்கூடம் என்ற பொருளில்
வழங்கும் ஆலையம் என்னும்
சொல் தூய தமிழ்ச் சொல்லே]
363. ஆலாபம் - கலந்துரையாடல்,
364. ஆலால சுந்தரன் - பாற்கடல்,
நஞ்செழிலன், நஞ்சுண்டழகன்
365. ஆலிகை(a-halya) - உழா மாள்
366. ஆலிங்கனம்- தழுவுகை
367. ஆலேபனம் - பூசுகை
368. ஆலோசனை(a-locana)- சிந்தனை,
சுற்றாய்வு, தீராய்வு,
சூழ்ந்தாராய்கை, ஆழ்ந்தாராய்கை
369. ஆலோசனை (alocana) - பார்வை
370. ஆலோசித்தல் - சிந்தித்தல்,
சூழ்ந்தாராய்தல், ஆழ்ந்தாராய்தல்
371. ஆலோலம் - நடுக்கம்,
விரைந்தசைகை, நடுங்குதுயர்
372. ஆவணி - மடங்கல்
373. ஆவர்த்தனம் (a-vartana)- தடவை,
374. ஆவரணம் - சுற்றுமதில்,
375. ஆவளி(a-vali) - வரிசை
376. ஆவளி(avali)-கைவரை, கைக்குறி
377. ஆவேசம் - வெளியேற்றம்,
திடுஞ்சினம், சினப் பரபரப்பு
378. ஆன்மா - உயிர், ஆதன், ஆவி,
முயற்சி, அறிவு, மனம், பரமாதன்,
இயல்பு, கதிரோன், தீ, வளி, உடல்
[Greek: Anima(soul, mind) ~
Sanskrit: Atma]
379. ஆனந்தம் - பேரின்பம், உவப்பு
380. ஆனந்தவிகடன் - உவகைப்
381. ஆனந்தன் - மகிழ்நன், மகிணன்,
பேரின்பன், உவகையன்
382. ஆனந்தி - மகிணள், மலை மகள்
383. ஆஜர் (உருது) - நேர்வரவல்,
384. ஆஜானுபாகு (a-janu-bahu)-
கணுக்கால் வரைக் கையன்,
நெடியோன், நீணெடியோன்
385. ஆஷ்டிரே(ஆங்கி)- சாம்பர்க்கலம்,
386.ஆஸ்தி-சொத்து,செல்வம், பொருள்
387. ஆஸ்திகம்- நம்புமதம், மதநம்பகம்,
இறைப்பற்று, மெய்க்கோள்
388. ஆஸ்திகன்- மதநம்பகன்,
389.ஆஸ்துமா (கிரேக்) - ஈளை,
390. ஆஸ்பெஸ்டாஸ்(ஆங்கி) - கல்நாரி,
391. ஆக்ஷேபனை - தடை, மறுப்பு,
மறுப்புரைப்பு, கருத்தெதிர்ப்பு
392. இகம் (iha)- இவ்வுலகம், இம்மை
393.இகலோகம் - இவ்வுலகம்
394. இங்க் (ஆங்கி) - மை
395. இங்க் பேட் (ஆங்கி) - மைப்பட்டை
396. இங்கிதம் - சூழலறிந்து நடக்கை,
குறிப்பு, சூழ்நிலையறிவு,
கருத்து, இனிமை
397. இங்கிதம் - போதல், போகை,
செல்லுகை, புணர்ச்சி
398.இங்கிரிமெண்ட் (ஆங்கி) -
399. இச்சை- விருப்பம், விழைவு,
உள்ளவா, காதலுணர்ச்சி
400. இஞ்சின் (ஆங்கி) - எந்திரம்
401.இஞ்சினீர்- பொறிஞர்,
402. இடைச்சங்கம் - இடைக்கழகம்
403. இடோலி,Doli(இந்தி) - சிவிகை
404. இன்ட்ரஸ்ட்(ஆங்கி)- விழைவு,
விருப்பம், அக்கறை, வட்டி
405. இத்யாதி(iti-adi)- என்ற இவை
406. இதம் (hrdaya)- நெஞ்சாங்குலை
407. இதம் (idam)- இது
408. இதம் (hita)- இன்பம், இனிமை,
409. இதம் (ita)- அறிவு, ஞானம்
410. இதர- வேறு, பிற, மற்றைய, பகை
411. இதிகாசம்- தொல்வரலாறு
412. இ(கீ)தோபதேசம்(hita-upa desa)-
413. இந்தியன் - நாவலந்தீவகன்
414. இந்தியா - நாவலந்தீவகம்
[சிந்து (தமிழ்)~ இந்தியா( லத்தீ)]
415. இந்திர சாபம் - வானவில்
[சாய்வம்~சாவம்~சாபம்=வில்]
416. இந்திரஜாலம் - மாயவலை,
417. இந்திர சுகந்தம் (indra su gandha) -
நன்னாறி (நன்னாரி)
418. இந்திர தரு - மருது
419. இந்திர தனு - வானவில்
420. இந்திர திசை - கிழக்கு
421. இந்திரலோகம் - தேவருலகம்,
422. இந்திர வாசம் - நெய்தல்
423. இந்திர வாமம் - நெய்தல்
424.இந்திரன் -தேவர்கோன், தலைவன்
425. இந்திரி(aindri)- கிழக்கு
426.இந்திரியம் - புலனுறுப்பு, விந்து
427.இந்திரியஸ்கலிதம்-விந்தொழு
428. இந்து(பாரசீ)- சிந்து ஆறு, சிந்து
[சிந்து (தமிழ்)~ hindu (பாரசீ)]
429. இந்து (indu)- நிலவு
430. இந்துப்பு - சிந்துப்பு
431. இந்துஸ்தான் - சிந்தகம்
432. இப்தார் (அரபி)- நோன்பறுதியூண்
433. இம்சை - தீங்கு, துன்பம், வலி
434. இம்ப்ரூவ்மெண்ட் (ஆங்கி)-
435. இம்மானுவேல் (எபிரே)-
இறையுறையவன், இறை நம்மோடு
436. இமகிரி (himagiri)- இமயமலை
437. இமசலம் - பனிநீர்
438.இமம்(hima)- பனி,சந்தனம்,குளிச்சி
439. இமாம் (அரபி)- தொழுகை நடத்தி
440. இமிடேஷன் (ஆங்கி)- போலி,
441. இயந்திரம் - எந்திரம்
442. இயந்திரம் - கலன், கண்ணிவலை
443. இயமம் (yama)- தடை
444. இயமன்- எமன், யாமன்
445. இயேசு (கிரேக்)- இயவிசையர்
[ yeshua (Hebrew)- iesous (Greek)]
446. இரசவாழை- பேயன் வாழை
447. இரஜனி (rajani)- இரவு, மஞ்சள்,
448. இரசனை (racana)- அணிவகை,
மலர்மாலை தொடுக்கை
449. இரசனை (rasana)- பதினாறு
கோவை - அரைப்பட்டி, காஞ்சி
450 இரசாயனம் - நிலைநல மருந்து
451. இரசம் - சாறு, அரிசிச்சாறு, சுவை,
இனிமை, வாயுறுநீர், வண்டு,
இதளியம், இதளிய இலங்கம்,
452. இரஞ்சனி - கடவுள், தாடை,
நீலிச்செடி,
கம்பில்லம் (புதல் வகை)
453. இரஞ்சிதம் - இன்பமானது,
வண்ணோவியம் ஆக்கப்பெற்றது,
454. இரட்சை - காப்பு
455. இரணம்(rna) - கடன்
456. இரணம் (rana)- போர்
457. இரணம் (vrana) - புண்
458. இரணம் (hirana)- பொன், விந்து,
459. இரணவைத்தியம்(vrana-vaidya)-
460. இரணியம் - பொன், பணம்
461. இரணியன் - பொன்னன்
462. இரணியன் - வியாழன்
463. இரத்த பந்தனம் - குருதியுறவு
464. இரதி - விருப்பம், புணர்ச்சி,
465. இரவி- கதிரவன், மலை
466. இரக்ஷண்யம் - முத்தி
467. இரக்ஷணை - முத்திப்பேறு
468. இராகவன்-எல்லியமரபன்,அழகன்
469. இராகினி- வெற்றிலை
470. இராசதானி- தலைநகர், மாநிலம்
471. இராசராசன்- மன்னர் மன்னன்
472. இராசன்-அரசன்,நிலவு, தலைவன்
473.இராசன்- தேவர்கோன், ஆலத்தன்
474.இராசி- கூட்டம், குவியல், இனம்,
ஆகூழ்,இயல்பு, பொருத்தம்
475.இராஜி (உருது)razi- அமைவு,
அமைதி, ஒப்புரவு
476. இராஜினாமா( உருது)-
உடன்படிக்கையாவணம்,
பதவி விலகல் ஆவணம்
477. இரகசியம்(rahasya)- மறைவு,
478.இராசேந்திரன்- அரசத்தேவர்க்
479. இராட்சசன்- அரக்கன்
480. இராட்சசி- அரக்கி
481. இராஷ்டிரம்- தேசம், நகர மக்கள்
482. இராணி- அரசி
483. இராணுவம் - படை
484. இராமச்சந்திரன்- எழில் நிலவன்
485. இராமா- அழகு, விரும்பத்தக்கது
486. இராமேஸ்வரம் (rama- isvara)-
487. இராவணா- அழுகை
488. இரிக்- மறைமந்திரம், மறை
489. இருதயம்- நெஞ்சாங்குலை
490. இரேகை- வரி, கைவரை,
கால்வரை, முகவரை
491. இரேகை- இடையறா ஒழுங்கு,
492. இரேணு- துகள்
493. இரேணு- காய்ச்சற்புல்
494. இரேணுகா - நுண்ணி, நுண்ணை,
495.இரேணுகா - தவிடு
496. இரௌத்ரம்- பெருஞ்சினம்
497. இலக்குமணன்- நற்குறியன்
498. இலக்குமி- திருமகள்
499. இலச்சினை - இலக்கனை,
முத்திரை, முத்திரை மோதிரம்
500. இலஜ்ஜை- கூச்சம், வெட்கம்
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக