நான் முகநூலில் திரு.செ.இரா.செல்வகுமார் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். அது இதுதான்.
"சீனர்கள் தங்கள் தாய்நாட்டை எவ்வாறு அழைக்கிறார்கள், சீனா என்றா, இல்லை சைனா என்றா? "
அதற்கு திரு.ஆழி செந்தில்நாதன் அவர்களின் பதில் இது.
சீனா, சைனா என்பவை புறப்பெயர்கள் (exonyms). சீனாவின் இயற்பெயர் Zhōnghuá அவர்களுடைய ச்சின் வம்ச காலத்தில்தான் சின் நாடுஎன்ற பொருளில் சீனா என்ற பெயர் சீனாவுக்கு வெளியே பயன்படுத்தப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை ட்சோங் குவா என்று தான் தங்கள் நாட்டை அழைப்பர். யப்பானியர்கள் நிப்போன் என்று தங்கள் நாட்டை அழைப்பார்கள்.
திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு யூட்டியூப் இணைப்பை கொடுத்திருந்தார். இது கீழே:
https://www.youtube.com/watch?v=f_2mTJnRW-k
இறுதியாக திரு. செ.இரா.செல்வக்குமார் அவர்கள் பதிலளித்தார். அது இதுதான்.
நான் விடை தருவதற்கு முன்பே வேல்முருகனும் ஆழி செந்தில்நாதனும் விடை தந்துல்ளனர். முதலாவது நான் பலகாலமாகச் சொல்லிவரும் இந்தப் புறப்பெயர் மரபை நம் மக்களில் மிகப்பலரும் உணர்வதில்லை. பிற நாடு, மக்கள், இடம் (ஏரி, மாய், ஆறு) பொருள் முதலான அனைத்தையும் ஆவ்வப்பகுதியில் சொல்லும் படியாகவே ஒலிக்கவேண்டுமென்பதில்லை. உள்வாங்கும் மொழி, தன் இயல்புக்கும் மரபுக்கும் ஏற்ப பெயரிட்டு அழைக்கலாம். அவ்வாறு அழைப்பது நெடுவழக்கு.
சீன நாட்டின் பெயர் 中国 என்று எழுதுகின்றார்கள். இதனைச் (ச்)சோங் கு'அ (நாம் தமிழில் சோங்குஅ
என்றால் ஏறத்தாழ சரியான ஒலிப்பாக இருக்கும்).
இதில் இரண்டு படவெழுத்துகள் உள்ளன. முதல் படவெழுத்து 中 இதுதான் சோங் என்னும் ஒலிப்பு தருவது. இதன் பொருள் 'நடு' 'நடுவே' என்பது. படவெழுத்தைப் பாருங்க்கள். ஒரு நீள்கட்டத்தின் நடுவே ஒரு கோடு இட்டு அது நடு என்று காட்டுகின்றார்கள். இரண்டாவது படவெழுத்து 国 இது
கு'அ என்றொலிக்கின்றார்கள். இதன் பொருள் "நாடு"
எனவே நடு நாடு. கருவாய நடு நாடு = கருநாடு என்பதுபோன்ற பொருள். தமிழில் நாடு என்றாலே நடுப்பகுதி என்னும் பொருள் உண்டு. எப்புறமும் சாயா, சுற்றுப்புறம் அறிந்து தேர்ந்த நடு என்று பொருள். நாடுதல் என்றால் சாய்வின்றி உள்> உண்மை அறிதல் நோய் நாடி, நோய் முதல் நாடி என்னும் குறளைப் பாருங்கள். உங்களை நாடி வந்தேன் எனில், பலரையும் அறிந்திருந்தாலும் நீங்களே சிறந்தவர் என்று உங்களைத் தேர்ந்து வந்தேன் என்று பொருள். நடு > நாடு. சீன மொழியின் முதல் படவெழுத்தாகிய 中 என்பதே தமிழின் பொருளாகிய நாடு என்பதை (பொருளளவில்) குறிக்கும்.
எனவே சோங்குஅ (中国) என்றால் சீன நாடு > சீனா.
Aazhi Senthil Nathan, சொன்னது போன்று (ச்)சின் என்றொரு அரசக்கொடிவழி சீனாவை ஆண்டது. இதனை உரோமன் எழுத்தில் Chin என்றும் Qin என்றும் குறிப்பார்கள். Q என்பது 'Ch' என்பது போல ஒலிக்கவேண்டும்.
ஆனால் சீனாவின் பெயரில் உள்ள (ச்)சோங் 中 என்பது அதிலிருந்து வரவில்லை. வெளி நாட்டவர் சின் என்னும் அரசவழியினரின் பெயரால் அவர்கள் நாட்டைக் குறித்ததால் .இந்தச் சின் அரசவழித்தோன்றல்கள் முற்கால சீன நாட்டை ஒன்றிணைத்ததால், அவர்களின் பெயரால் சின் > சினா > சீனா என்று வழங்கப்பெறுகின்றது.
இப்படிக்கு,
பெஞ்சமின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக