தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது.
பழம்
பல்>பள்>பளு>பழு>பழு+அம்>பழம்
பழம்= கனி, பழைய
பல்= பெருக்கம், மிகுதி, பல
பல் = பலவாகவுள்ள, மெல்லும் வாயுள் உறுப்பு (பல், பின்னரே கூர்மைக் கருத்தில் படர்ந்தது)
பல்>பன்>பன்+மை>பன்மை = பல, ஒருமைக்கு எதிர்ச்சொல்
பன்+ஐ= பருத்த மரம், நெடிய மரம்
"நீளிரும் பனமிசை" (பரிபா:2:42)
சிறுமைக்கு தினையையும், பெருமைக்கு பனையையும் கூறும் கழகக் கால வழக்கு இங்கு கருதத்தக்கதாகும்.
(காண்க- குறள்: 1282 & 104)
பல்>பல்+கு>பல்கு = மிகு, பெருகு, விரிவுறு
பல்>பல்+ஆ>பலா = பருத்த பழம் கொண்ட மரம்
(பல்+அவு= பலவு)
"கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம்" (மலைபடு:511)
"சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு" (குறுந்:18)
பல்>பள்>பளு = மிகுதி, எடை, பெருமை
தெலுங்கில், இப்பழந் தமிழ்ச்சொல் "Baluvu" என்றவாறு வழங்குகின்றது.
பளு என்னும் சொல்லுக்கு, பளுவு என்னும் தெலுங்குச் சொல்லே எனச் சுட்டும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் குறிப்பு, இங்கு கருதுதற்கு உரியதாகும்.
பல்>பள்>பண்+பு>பண்பு = பெருந்தன்மை, பெருங்குணம், பெருமை, பாடறிந்து ஒழுகும் நற்குணம்.
"பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்" (கலி: 133)
பள்>பண்>பண்+அவு>பணவு>பணவு+ஐ>பணவை = மிகப் பெரிய பரண், நெட்டுயரத்தில் அமைந்த பரண்.
"விலங்கல் மீமிசை பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்"
(மலைபடு: 298)
[நச்.உரை: விலங்கல் மீமிசைப் பணவை = மலையில் மேலிட்ட பரண்]
"விண்நோய் பணவை மிசை"
(குறிஞ்சி: 225)
பண்+அம்>பணம்= திரு, ஆக்கம், பெருஞ்செல்வம், செல்வம்.
பணம் என்ற சொல்லுக்கு பருமை என்றே சதுரகாதி பொருள் கூறும்.
பெருஞ்செல்வம் 'பணம்' எனப்பெற்றது.
1."கேடும் பெருக்கமும் இல்லல்ல" (குறள்: 115)
2. பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்" (குறள்: 170)
3. "பெருக்கம் பெருமித நீர்த்து"
(குறள்: 431)
4. "பெருக்கத்து வேண்டும் பணிதல்"
(குறள்:963)
எனவரும் குறள்களின் "பெருக்கம்" என்னும் சொல் குறிப்பாகவும், சிறப்பாகவும் செல்வத்தையே சுட்டி நிற்பதை, இங்கு கருதுதல் வேண்டும்.
ஒ.நோ: ஆகு = வளர்
ஆகு> ஆக்கு= வளர்த்து, பெருக்கு
ஆக்கு+அம்= ஆக்கம்= வளர்ச்சி, பெருக்கம்
திரு= திரண்ட செல்வம்
ஆக்கம், பெருக்கம், திரு எனவரும் செல்வத்தை குறித்த சொற்கள், பெருக்கக் கருத்தின் அடிப்படையில் அமைந்திருப்பது ஒப்பு நோக்கத்திற்குரியது. அவ்வகையிலேயே,
பண்>பண்+அம்>பணம் என்றவாறு செல்வத்தைக் குறிக்க, சொல் தோன்றியுள்ளது.
"பணம்" என்ற சொல், முதற்கண் பெருஞ்செல்வத்தேயே குறித்தது. தூய பொன்னை அளவு அளவான வடிவத்தில் வார்த்து, மாற்று முறைக்கு அதனைப் பயன்படுத்திய போது, சிறக்கவும், துறக்கவும் அப் பொன்துண்டம் (பொற்காசு) "பணம்"
என்ற சொல்லாலேயே குறிக்கப் பெற்றது.
பொன்னானது, அரிதால் உயர்ந்த, ஒண்மைச் சிறப்புடைய ஒன்றாதலின், தகுதியும் தாளுமையும் நோக்கிப் "பணம்" என்ற சொல்லேயே பொற்காசைக் குறிக்க கையாண்டனர்.
(பாடுபட்டு தேடிப் பணத்தைப் புதைத்து- ஔவை)
பணம் = பொற்காசு (சூடா.நிகண்டு)
பணம்>(கன்னடம்) hana
பணம் >(சமற்கிருதம்) pana
பள்>பண்>பணை = பரு, பெரிதாகு, வளர்ச்சியுறு
பணைத்த = பருத்த
1. "பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" (நாலடி: 241)
2. "பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற" (மது.காஞ்: 601)
"பணையெருத்து" (புறம்:15:7)
உரை: பெரிய கழுத்து
பணை = பெரிய முரசம்
" மாகால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நல்பணை அறைவனர் நுவல" (மது.காஞ்:361-2)
நல்பணை = நன்றாகிய முரசு
பண்+அவு>பணவு+அம்>பணவம் = தம்பட்டம் (திவா.)
பணவை>(சமற்கிருதம்) panava= drum
பணவை>(சமற்கிருதம்) pranava
Pali: Panava
Prakrit: Panava
Sinhalese: Pana
பணை = பருத்த மூங்கில்
"நெடும்பணைத் திரள்தோள் மடந்தை" (பெரும்பாண்: 12)
கழகக் காலத்தில் மிகப் பரவலாக வழக்கு பெற்றிருந்த இச்சொல்லின் மூலப்பொருள், 'பருமை' என்பதே. அதாவது பெருக்கம்.
இதனைத் தனது இலக்கணநூலின் உரியியல் பகுதியில், "பணையே.... பெருப்புமாகும்" என்றார் தொல்காப்பியர்.
பணை+அம்>பணையம் = ஈடாக வைக்கும் பெருமைக்குரிய பொருள்.
"நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனனன்று 'இக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்"
(புறம்: 319: 5-7)
உரை: நேற்று தன்பால் வந்த விருந்தினரை ஓம்பும் பொருட்டு, தனது பக்கத்தேயிருக்கும் பழைய வாளை ஈடுவைத்தனன். ஈது, உண்மையென்றற்கு இக்கரிய கோட்டுடைய யாழைப் பணயமாக வைக்கின்றோம்.
பணையம்>(சமற்கிருத) panaya
பணையம்>(Skt) Pana= wager
Panate= barters
Panati = bargains, bets
Prakrit: Pana =bet
Assamese: Pan = wager
Bengali: Pan = dowry
Sinhalese: Pana = bet
பள்>பண்>பண்+து> பண்டு= பெருமை, பழமை, முன்மை, மேன்மை
1. "பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே" (தொல்.சொல்:87)
2. "பண்டு நற்கு அரியா புலம்பெயர் புதுவிர்" (மலைபடு:392)
பண்டு= முற்காலம்
பண்டு = இதன் முன்னும் (நற்:55:6)
பண்டிலும் = முன்னைக் காட்டிலும் (நற்:177:7)
(மலையாளம்) பண்டு= பழமை
(குடகு) Pandi = Antiquity, former time
பண்டு+ஐ>பண்டை+ஓர்>பண்டையோர் = முன்னோர், மூத்தோர், பழையோர்
"பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை" (சிலம்பு: 28:209)
பண்டு+அம்>பண்டம்
விளைவை அறுத்து, அவ்விளையுளில் முற்றிய கூலங்களை முதிரக் காயப்போட்டு, செப்பப்படுத்திய பின்னரே, அது வணிகப் பொருளாக பயன்படுத்தற்கு ஏற்றதாயிருந்துது. அப்பண்டுப் பொருளே, "பண்டம்" என்னப் பெற்றது. இதை உரையாசிரியர் "சரக்கு" என்ற சொல்லாலும் குறிப்பர்.
சருகக் காய்ந்த கூலமும், பிற விளை பொருள்களும் "சரக்கு" என்ற சொல்லால் குறிக்கப்பெற்றன.
சுருகு>சுருங்கு
சுருகு>சருகு>சரகு>சரக்கு = முற்றக் காய்ந்த கூலப்பொருள்.
மிக வற்றக் காய்ந்த மிளகாயை (சருகு மிளகாய்) நாட்டுப்புறங்களில், "சரக்கு மிளகாய்" என்று, இன்னும் பரவலாக வழங்கிவருவது மிகவும் கவனிக்கத்தக்கது. கூலங்களைச் "கருஞ்சரக்கு" என்று சிலப்பதிகார உரையில் அரும்பதவுரையாசிரியர் குறிப்பார்.
"பொன் மலிந்த விழுப்பண்டம் நாடுஆர" (மது.காஞ் : 81-82)
(நச்.உரை: பொன் மிகுதற்குக் காரணமாகிய சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படியாக.....)
[பண்ணியம்: "காமர் உருவிற் றாம்வேண்டும் பண்ணியம்" (மது.காஞ்: 422)]
பண்ணப் பெற்ற பொருள்களை மட்டுமே முதற்கண் குறித்த "பண்ணியம்" என்னும் சொல், நாளடைவில் "பொருள்" என்னும் பொதுப்பொருளை குறிக்கத் தொடங்கியது போன்று, பண்டையில் சரக்குப் பொருள்களைக் குறித்து நின்ற பண்டம் என்னும் சொல் "பொருள்" என்னும் பொருளிலேயே, பின்னர் வழங்கத் தலைப்படுவதாயிற்று.
ஒ.நோ: "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்" (குறள்:475)
"பண்டு" என்னும் பழைமை, முதிர்வு, முன்மை ஆகிய கருத்துச் செறிவுச் சொல், கனிவதும், பழுப்பதும், முதிர்வதுமாகிய பழத்தைக் குறித்ததற்குப் பயன்படுத்தப் பெற்றது.
அதன் செப்பவடிவம், சற்றும் மாற்றமுறாது, வடுகத்தமிழாகிய தெலுங்கில், "பண்டு" என்றே வழங்குகின்றது.
"ஓல்கு தீம் பண்டம் பெய்தொழுகும் பண்டி" சீவகசிந்தாமணி (62) நூலில் பழம் என்னும் பொருளுக்குத் "தீம்பண்டம்" என்னும் சொல்லைப் பெய்துள்ளார், திருத்தக்கத் தேவர்.
பண்டு என்ற பழத்தைக் குறித்த சொல், பிற தமிழிய மொழிகளில்,
Telugu:. Pandu - to ripen
Kolami : Pand - to become ripe
Naiki : Pand - to become ripe
Gadba : Panrtal - ripe
Kodagu : Panni - Fruit
Kannada: Pannu - ripe, Fruit
பள்>பளு>பழு= முற்று, முதிர், பெரிதாகு, காயினின்று முதிர்
பழு>பழுனு = முற்று, முதிர்
ஒ.நோ: கொள்>கொள்ளு>கொள்ளுநன்>கொளுநன்>கொழுநன் = கொண்டவன், கணவன்
1. "பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி" (புறம்: 113:3)
2. "நிலம்புதை பழுனிய மட்டின் தேறல்" (புறம்: 120: 12)
பழு>பழு+ஐ>பழை
பழை+மை>பழைமை>பழமை = பழைய தன்மை, முதிர்வு, முந்தய நிலை
பண்டு என்னுஞ்சொல் முந்தைக் காலத்தையும், பழத்தையும் குறித்தலும், "பழம்" என்னுஞ்சொல் பழைய என்னும் பொருளையும் பழத்தையும் குறித்தலும், இவ்விடத்தில் ஒப்புநோக்குக.
பண்டைக்காலம் = பழங்காலம்
"பண்டைப் பழ அணி யுள்ளப் படுமால்" (91:7-8) எனவரும் அகநானூற்று வரியுள் " ஒரு பொருளிரு மொழி அடுக்கு" இருப்பது காண்க.
காயின் முதிர்நிலையானது, முற்று, முதிர், பெரிதாகு என்னும் சாறக் கருத்துக்களை உள்ளடக்கிய "பழு" என்னும் சொல் வடிவிலிருந்து, அம்மீறு கூட்டி,
பழு+அம்>பழம் எனப்பெற்றது.
பழம் என்னும் சொல்லுக்கு முதிர்வுக் கருத்தே அடிக்களனாக உள்ளது.
ஒ.நோ: "வள்கோள் பலவின் சுளை 'விளை' தீம்பழம்" (மலைபடு: 337)
(நச்.உரை: வளவிய குலைகளையுடைய பலாவினது முற்றின இனிய பழத்தின் சுவையை)
இவ்விடத்தில் பழத்தைக் குறித்த "கனி" என்னும் சொல்லையும் ஓர் ஒப்பீட்டுக்கென காண்க.
கன்>கன்+அம>கனம்= எடை, பாரம்
கனத்தல்= எடையாயிருக்கை, முதிர்கை
கன்>கன்னு= முதிர், முற்று
கன்னுதல்= பழுத்தல் (பழம் கன்னிவிட்டது)
கள்+இ>கனி = முற்றுப் பெறு, முதிர், நிறையப்பெறு
" நெய் கனிந்து இருளிய கதுப்பின்" (சிறுபாண்: 14)
(எண்ணெயிலே முற்றுப்பெற்று இருண்ட மயிரினையும்....)
கன்>கன்னு = பழு, முதிர், சமைவாகு
கன்+(ன்)+ இ>கன்னி = சமைந்தவள், முதிர்ந்தவள்
கனி = முதிர்ந்த பழம்
பழு, பழம், பழைமை ஆகிய தூய தமிழ்ச்சொற்களின் திரிபுகள், பிற தமிழிய மொழிகளில்,
Malayalam : Para = old
Kannada: Para, Pare = old, ancient
Kodagu: Pale = old
Tulu: Para - old, Palu- ripening
Telugu: Palaku - to yield fruit
பல்>பள்>பளு>பழு>பழம்
பழம் >(Skt) phala
Pali : phala - fruit
Prakrit : phala - fruit
Panjabi: Phal- Fruit
Gujarati: Paal
Maithili: Phar
Sinhalese: Pala
பின்னிணை:
பண்டம் = சரக்கு
பண்டம்+ ஆரம்= பண்டாரம்
பண்டாரம் = சரக்கு அறை, பொக்கசகம் (பொக்கசம்+அகம்)
கருவூலம், பண்டம் சேமித்து வைக்கும் காப்பறை
ஒ.நோ: "கண்டார்க்கு தாக்கணங்கு, இக்காரிகை காண்மின்"
பண்டாரம், காமன்படை, உவள்கண்;காண்மின்
(பரிபா:11:123)
பண்டாரம் = சரக்கு அறை
இது போன்று, அறிவு பொருட் சாறம் நிரம்பிய ஒள்ளியரான முனிவரும், பண்டாரம் என்றே குறிப்பிடப் பெற்றனர்.
பண்டாரம் என்ற முனிவர்கள் தங்கியிருந்த ஒரு வடநாட்டூர் "பண்டாரம்" எனப்பெற்றது.
[புரை என்னும் உயர்ச்சிக் கருத்துச் சொல்லினின்று (ஒ.நோ: "புரை உயர்பாகும்" தொல்.உரி) தோன்றிய "புரம்" என்னும் சொல், உயரிய கோயிலைக் குறித்தாதகும். எ.டு: காஞ்சிபுரம், தருமபுரம்]
பண்டாரம்>பண்டார்பூர்>பண்டர்பூர் (பண்டரிபுரம்) என்றவாறு வடபால் மொழிகளில் திரிந்துள்ளது.
உயரிய கல்வி மகவோர்க்குரிய பட்டப் பெயராக (Doctor - என்பதற்கு) பண்டாரம்+அகர்>பண்டாரகர் என்ற ஓர் அரிய திணுக்க நுணுக்கச் சொல்லை, பாவாணர் ஆக்கியளித்தமையும் ஈண்டு நினையத் தக்கதாகும்.
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
01 மேழம் 2051
[०௧/०௪/௨०௫௧]
(14-04-2020)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக