தமிழர் இழந்த நிலம்-5
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
மார்ஷல் நேசமணி யோடு தந்தை பெரியாருக்கு சீரான உறவு இருந்திருக்கும் என்றால்... கே எம் பணிக்கர் எப்படி தமிழகத்திற்குள் நுழைந்து இருக்க முடியும்...?
குளமாவது மேடாவது என்கிற காமராஜரின் வார்த்தை,தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டு காமராஜரால் வழிமொழியப்பட்டது என்பதே சத்தியமான உண்மை. இதை மறுக்கிறவர்கள் மறுத்துப் பாருங்கள் பார்க்கலாம்.
ஒரு புறத்தில் மார்ஷல் நேசமணியோடும் நட்பு... இன்னொரு புறத்தில் கே.எம். பணிக்கருடனும் நட்பு...
பல வரலாற்றுக் கதாபாத்திரங்களை தன்னுடைய நாவல்களில் உலவ விட்ட ஷேக்ஸ்பியரின் கற்பனைக்குக் கூட எட்டாத ஒரு கதாபாத்திரம் தந்தைபெரியாருடைய கதாபாத்திரம்.
அவ்வளவு எளிதில் அவரது உள்ளக் கிடக்கையில் என்ன இருக்கிறது என்பதை எவராலும் கணித்து விட முடியாது. தனித்த சக்தியாக வெகுண்டெழுந்து நின்ற தந்தை பெரியாருடைய தயவு, அன்று காமராஜருக்கு இல்லை என்று சொன்னால், ராஜாஜி போன்ற ராஜதந்திரிகள் நிறைந்த நாட்டில், ஒன்பதரை ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக... அவரால் காலம் தள்ளி இருக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
பச்சைத் தமிழன் என்று காமராஜருக்கு, தந்தை பெரியார் கொடுத்த ஒரே அடைமொழிக்காக, பச்சைத் தமிழகத்தின் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் ஆந்திராவிற்கும், கருநாடகத்திற்கும், கேரளாவிற்கும் தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.
10-10-1955 அன்று மொழிவழி பிரிவினை குழுவின், அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மார்ஷல் நேசமணிக்கு தந்தை பெரியார் நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற கூற்று உண்மையானால்...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு சொந்தம் என்று அறிவித்த மொழிவழி பிரிவினை குழுவை எதிர்த்து,அவரது வாயும், கையும் சும்மா இருந்திருக்குமா என்ன. மலையாளப் பணிக்கருக்கு எதிராக
"விடுதலை" அனலை கக்கி இருக்கும். ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை.
ஒருவேளை என் கண்களுக்குத் தெரியாமல் பணிக்கருக்கு எதிராக விடுதலையில் எங்கேனும்,பெரியார் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பாரானால்,ஆயிரம் முறை தூக்கு மாட்டி செத்தாலும் பணிக்கரின் ஆன்மா சாந்தியடையாது.
தாம் செய்யும் செயல்களுக்கு மறுப்புத் தெரிவிக்க தாய்த் தமிழர் நிலத்தில், எவனும் பிறக்க மாட்டான் என்று கூட தந்தை பெரியார் நம்பி இருக்கக்கூடும், அந்தோ பரிதாபம். திரும்பும் திசையெல்லாம் மொபைலும் கையுமாக இளைஞர் பட்டாளம் தந்தை பெரியாரை இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆனையிரங்கல்
சின்னக்கானல்
பெரியகானல்
ராஜகுமாரி
ராஜாக்காடு
பூப்பாறை
கோவிலூர்
சூரியநல்லி
மூணாறு
பெரிய பாறை
தென்மலை
குண்டுமலை
ராஜமலை
கன்னிமலை
பனையூர்
அஞ்சு நாடு
பட்டிக்காடு
இரவிகுளம்
இடமலைக்குடி
பள்ளிவாசல்
பண்ணையாறு
நல்லதண்ணி
நடையாறு
எல்லப்பட்டி
உடுமஞ்சோலை
வண்டிதாண்டாபெரியாறு,
பின்னாளில் குமுளி என்றழைக்கப்பட்ட நீர்க்குமிழி மேடு,..
என அழகு செழித்த தமிழ்ப் பெயர்களை தாங்கி நின்ற ஊர்களை எல்லாம்...
பணிக்கரும்
பட்டம் தாணுபிள்ளையும் பற்றிக் கொண்டு போக காரணமாக இருந்தது எவராக இருந்தாலும்,அது எத்தனை பெரிய பிம்பமாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் உடைந்து நொறுங்கத்தான் செய்யும்.
அடிமையாகப் போனவன், அடிமையாகத்தான் வாழ வேண்டும் என்கிறதா வரலாறு...
ஒரு தேயிலைத் தோட்டத்தில்,அங்குள்ள கங்காணிகளாலும், முதலாளிகளாலும் அப்பாவி தொழிலாளிகளுக்கு என்ன நடக்கும் என்பது... பன்முக சிந்தனை படைத்த பெரியாருக்கு தெரியாமல் போனதுதான் விந்தை.
அதே கேரளாவில் வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவு போராட்டத்திற்காக சென்று, தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்ட பெரியார் அவர்கள்...
1954 முதல் 1956 வரை
தேவிகுளத்திலும், பீர் மேட்டிலும்...அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக, மலையாள அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளுக்கு எதிராக, பெரியார் செய்த பெருந்தொண்டு என்ன...?
கடந்த நூற்றாண்டின் மத்தியக்காலம் என்பது பெரியார் வலுவாக தமிழ் நிலத்தில் ஆளுமை செலுத்திய காலம்.அன்றைக்கு காந்திஜிக்கு எதிர்முனையில் நின்ற அம்பேத்கரே அளவளாவும் அளவிற்கு சக்தி பெற்ற
பெரியார், தேவிகுளம் பீர்மேடு வாழ் தமிழர்களுக்காக, செய்த அரும்பணி என்ன...?
தமிழ் வட்டெழுத்துக்கள் 28 மட்டும் இல்லாதிருந்தால் மலையாள மொழி என்றொரு மொழியே இன்று கிடையாது... தமிழிலிருந்து இரவல் வாங்கி தங்களுடைய மொழியை செப்பனிட்டுக் கொண்டவர்கள், நிலத்தையும் அபகடமாய் பறித்தார்கள் என்பது, செவிட்டு காதுகளுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்... உறைக்கும் காதுகளுக்கு அது உவப்பான செய்தி அல்ல.
சோசலிசம் என்கிற தத்துவத்தை தாங்கிநின்ற பட்டம் தாணுபிள்ளையும்...
பகுத்தறிவு என்கிற பரந்துபட்ட சிந்தனையின் பிதாமகர்களில் ஒருவரென பீற்றிக்கொண்ட தந்தை பெரியாரும்...
மேலைநாடுகள் நம்மை அடிமைப் படுத்தியது ஏன் என்பது குறித்து அக்கறை கொண்டு அலைந்து திரிந்த பணிக்கரும்...
பச்சைத் தமிழர் என்று இன்றளவும் நம்மால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் கருமவீரர் காமராஜரும்...
பெயர் சொல்ல விரும்பாத சில கத்துக்குட்டிகளும் தான்,,,
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள், தமிழர் நிலத்திலிருந்து அந்நியப்பட காரணமானவர்கள்...
வரலாறு நீளும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக