தமிழர் இழந்த நிலம்-7
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
தேனியிலிருந்து சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,குமுளி, பீர்மேடு வழியாக கோட்டயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 183 ல் நீங்கள் பயணம் செய்தால்,,, பல இடங்களில் கொட்டாரக்கரா எத்தனை கிலோமீட்டர்கள் என்று பதிவிடப்பட்ட அளவை கற்களை காணமுடியும்.
எங்கோ கொல்லம் மாவட்டத்தில் வரும் கொட்டாரக்கரையை சுட்டுவதற்கு, எதற்காக கம்பத்தில் அடையாளக் கற்களை நடவேண்டும்.
திண்டுக்கல்லில் இருந்து கோட்டயம் செல்லும் அந்த தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் நீங்கள் பார்க்கும் கொட்டாரக்கரை அளவைக் கற்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.
இந்தக் கதையை எதற்காக கூறுகிறேன் என்றால்...
பாண்டிய மரபைச் சார்ந்த பூஞ்ஞார் சமஸ்தானத்தின் எல்லை எதிலிருந்து எதுவரை இருந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்...
இன்றைக்கு கொல்லம் மாவட்டத்தில் உள்ளடங்கி இருக்கும் கொட்டாரக்கரைதான், பூஞ்சார் சமஸ்தானத்தின் தெற்கு எல்லை...அதனால்தான் அன்றைக்குப் பூஞ்சார் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லையாக இருந்த உத்தமபாளையத்தில் இருந்து, அதனுடைய தெற்கு எல்லையான கொட்டாரக்கரையை குறிப்பதற்கான கல்வெட்டுகள் இருந்திருக்கிறது.
அந்தப் பாரம்பரியத்தை தொடரும் விதமாகவே இன்றைக்கும் தேனி மாவட்டத்திலிருந்து குமுளி வழியாக கோட்டயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் கொட்டாரக்கரை என்கிற பெயரை நீங்கள் காணமுடியும்...
தெற்கு எல்லை கொட்டாரக்கரை என்றால், வடக்கு எல்லை எங்கே இருக்கிறது என்று தேடினோமானால்,இன்றைக்கு கோதமங்கலம் தாலுகாவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நேரியமங்கலம் முல்லை ஆற்றுப்பாலம் தான் அதனுடைய வடக்கு எல்கை.
கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நேரியமங்கலம் பாலத்திற்கு கீழேதான் முல்லைப் பெரியாறு எர்ணாகுளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாலத்தின் தெற்கு முனையில் இன்றும் பூஞ்சார் சமஸ்தானத்தின் அடையாளங்களை நம்மால் காணமுடியும். அதுபோல் வடக்கு முனையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மறைந்த கே, எம், மாணியின் சொந்த தொகுதியான பாலா, தொடுபுழா வழியாக நேரியமங்கலத்தை வந்தடைய நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் 157 கிலோமீட்டர்கள்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் கொட்டாரக்கரையிலிருந்து, 38 கிலோமீட்டர் கிழக்கு நோக்கி பயணித்தால், பழைய செங்கோட்டை தாலுகாவினுடைய எல்லையான தென்மலை வந்துவிடும்...இது இன்றைக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 744 என்று பெயர் சூட்டப்பட்டு, மதுரை மாவட்டத்தின் திருமங்கலத்தையும்- கொல்லத்தையும் ராஜபாளையம், செங்கோட்டை வழியாக இணைக்கிறது.
ஆக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்கை, கொட்டாரக்கரையிலிருந்து, புனலூர், தென்மலை வரையிலான 37 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஊடுருவி நிற்கிறது.
இத்தனை பெரிய பூஞ்ஞார் சாம்ராஜ்ஜியத்தினுடைய வரலாறுகளை தந்தைபெரியாரும், காமராஜரும் படிக்காமலா போயிருப்பார்கள்...
எத்தனை பெரிய பரப்பு
எத்தனை பெரிய வரம்
எத்தனை பெரிய ஆறுகள்
எத்தனை எத்தனை மலைகள்...
அத்தனையையும் கணப்பொழுதில் தமிழர் கண்களைவிட்டு மறையச் செய்த கண்கட்டி வித்தைக்கு சொந்தக்காரரான தந்தைபெரியார்,,,,
தேவிகுளம் பீர்மேட்டுகாக சண்டை போட்டார் என்று சொல்வதுதான் இரண்டு நூற்றாண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதில், தந்தை பெரியாரை அடித்துக்கொள்ள ஆசிய துணைக்கண்ட வரலாற்றில் எவரும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.
இந்தப் பட்டியலில் தந்தை பெரியாரோடு நாம் கம்யூனிஸ்டுகளையும் கண்டிப்பாக வரவு வைக்கவேண்டும். அவர்களுடைய துரோகம் இதனினும் மகத்தானது.
தேவிகுளம் -பீர்மேடு தமிழகத்தோடு சேர வேண்டும் என்பது குறித்தான விவாதம், தமிழக சட்டமன்றத்தில் 21 -11-1955 முதல் 24 -11-1955 வரை காரசாரமாக நடந்தது.
அன்றைக்கு தமிழக நிதியமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சி.சுப்பிரமணியம் அவர்கள், பல்வேறு சான்றுகளின் அடிப்படையில், தேவிகுளம் -பீர்மேடு தமிழகத்திற்கே சொந்தம் என்று வாதாடினார்.ஆளுங்கட்சியின் நிதி அமைச்சரே தேவிகுளம் -பீர்மேட்டை தமிழ்நாட்டோடு சேர்க்கவேண்டும் என்று வாதாடிவிட்டதால்,,, தமிழகத்தோடுதான் அவையிரண்டும் சேரும் என்று நம்பியவர்கள் பலர்.
இந்த விடயத்தில் நிதி அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய மிக முக்கியமான ஆளுமை,,, சுவாமி ஸ்ரீ சித்பவானந்தர் அவர்கள். ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான இந்த சித்பவானந்தர், மாண்புமிகு நிதியமைச்சர் சி சுப்பிரமணியம் அவர்களின் தந்தையின் உடன் பிறந்தவர் ஆவார்.
பின்னாட்களில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில், காவிரிக் கரையையொட்டி, திருப்பராய்த்துறை எனுமிடத்தில் ராமகிருஷ்ண தபோவனம் எனும் தலைமை மடத்தை உருவாக்கிய இந்த சித்பவானந்தர், தன்னுடைய ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளிலேயே தேவிகுளம் பீர்மேடு பற்றி குறிப்பிடுகிறார்.
இறுதியில் விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தேவிகுளம் -பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டுமென்று 122 வாக்குகளும்,சேரக்கூடாது என்று 18 வாக்குகள் எதிராகவும் விழுந்தது. இதில் பெரும்பாலானவை, தூக்குத் தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்கிய பின்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளுடைய வாக்குகள்.
தமிழக கம்யூனிஸ்டுகளான,
காமராஜரின் செல்லப்பிள்ளைகள், ஜீவா
கு.ராமமூர்த்தி கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 13 பேர், நடுநிலைமை வகித்து தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொண்டார்கள்.
ஒருவழியாக தமிழக சட்டமன்றத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அது நடந்துவிடும் என்றே நம்பினார்கள் தமிழ் நிலத்து அப்பாவிகள்.
ஆனால் மலையாள நெருக்கடி முற்றிய காரணத்தால்,மாமா நேரு அவர்கள்,25-11-1955 அன்று நாடாளுமன்றத்தில், பசல் அலி கமிஷனின் பரிந்துரைகளை விவாதத்திற்கு வைத்தார்.
மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தமிழகத்தின் எம்.பிக்கள் எவ்வளவோ போராடியும், மலையாள மாஃபியாக்கள் தாங்கள் எடுத்த காரியத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
இதோ கிளர்ச்சி, அதோ கிளர்ச்சி என்று விடுதலையில் வேதம் ஓதிய தந்தை பெரியார், நாடாளுமன்றத்தில் தேவிகுளம்- பீர்மேடு உள்ளிட்ட தமிழர் பகுதிகள், கேரளாவோடு சேர வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியை அறிந்தும், கடைசிவரை கிளர்ச்சிக்கு தயாராகவே இல்லை.
நாடாளுமன்றத்தில் தேவிகுளம்- பீர்மேடு கேரளாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை அவ்வளவு எளிதாக அன்றைக்கு டெல்லியில் கொடி நாட்டியிருந்த கிருஷ்ணமேனன் போன்ற மலையாளிகளால் கடந்து செல்ல முடியவில்லை...
பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து, தமிழக முதல்வர் காமராஜர் அவர்களும், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களும்... டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதின் விளைவு, மறுபடியும் தமிழக சட்டமன்றத்தில் 23- 03 -1956 முதல்,31-03-1956 வரை பெயருக்கு ஒரு விவாதம் நடந்தது.
அன்றிலிருந்து இன்று வரை தமிழகத்திற்கு இரண்டகம் மட்டுமே செய்து பழகிய, காங்கிரஸ் கட்சி நடுநிலைமை வகித்தது. மானங்கெட்ட கம்யூனிஸ்டுகள் கொக்கரித்து சிரித்தார்கள்...
கடைசியில் தேவிகுளம் பீர்மேட்டுக்காக, சான்றுகளை காட்டி, எந்த சி சுப்பிரமணியம் வாதாடினாரோ, அவரே தேவிகுளம்- பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி
தன்னுடைய ராஜ விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.
அந்த தீர்மானத்தின் மீதும், குளமாவது மேடாவது என்கிற பதம் காமராஜரால் பயன்படுத்தப்பட்டது...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மலையாளியான
கிருஷ்ணய்யர் போன்ற துரோகிகள், பக்கம் பக்கமாக எழுதி தீர்த்தார்கள்... தமிழகத்து கம்யூனிஸ்ட்களுக்கோ நமட்டுச் சிரிப்பு வந்து வந்து போனது...
எந்தக் கட்சிகள் தமிழகத்தினுடைய வளம் பொருந்திய நிலம் பறி போவதற்குக் காரணமாக இருந்ததோ...அந்தக் கட்சிகள் இன்னமும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான், தமிழ் நிலத்திற்கான பெருத்த அவமானம்...
வரலாறு நீளும்....
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.