தென்மொழி இதழில் (சுவடி 51 ஓலை 11) இருந்து ஏடுத்தது.
இதனை எழுதியவர்,
புலவர் குறளகன் , கருவூர்.
பேசி- 9600917161
'க' வரிசை
கதகதப்பு- வெப்பம் (இரட்டைக் கிளவி)
கதம்-சினம்
கதவண்டு- சினவண்டு
கதம்பம். - கலவை
கதலி - வாழை (சிறு பழங்கள் உடைய
வாழை). குதலை என்ற
சொல்லுடன் தொடர்புடையது.
கதவு - மறைவு
கதித்தல் - பருத்தல்
கதிரவன் - வெப்பக்கதிர்களை உடைய
கோள்
கதுவாய் - வடுப்படல் (நான்கு அடிகளையுடைய பாவடி ஒன்றில் இரண்டாம் சீரிலும் மூன்றாம் சீரிலும்
மோனை முதலிய தொடைகள் இல்லாமல் வடுப்பட்டிருப்பது. யாப்பியலில் கதுவாய் எனப்படுவது யாப்பியல் பயின்றோர்க்குத் தெரியும்)
கது - வடு
கதைத்தல் - கதை சொல்வதுபோல்
இல்லாததை சொல்லுதல்
கத்துதல் - வெட்டுதல் {கத்து~கத்தி,
(மண்) வெட்டு~ (மண்) வெட்டி}
கந்தன் - மணமுள்ளவன் (முருகு
என்றால் மணம், இளமை , அழகு
என்னும் பெருள்கள் உண்டு.
இம்மூன்று தன்மைகளும்
உடையவனே முருகன் என்று
திரு.வி.க அவர்கள் ஆய்ந்து
கூறியுள்ளார். அந்த முருகனே
கந்தன் எனப்படுகிறான்)
கந்தை - கந்தை (பீறல்)
கந்தாயம் - தவணை
கந்து - தூண்
கந்துகம் - பந்து
கந்துகவரி - மகளிர் பந்தாட்டப்பாட்டு
கமுகம் - பாக்கு மரம்
கம்மாய் - கண்மாய் (கண்-மதகு)
கம்மணாட்டி - கைம்பெண்டாட்டி (கைம்பெண்- கணவனை இழந்தவள். ஆட்டி - பெண்பாற் சொல், {ஆளன்- ஆண்பாற்சொல்} )
கபிலை - மாடு கட்டியிறக்கும் ஏற்றம்
கபிலை - மாடு
கமழ்தல் - மணத்தல்
கமுக்கம் - மறைவான
கம்பலை - அழுவொலி
கயத்தாறு - கயம்+அத்து+ஆறு
(குளமும் ஆறும் உடைய ஊர்)
கயம் - குளம், பெருமை
கரகரப்பு - தொண்டையரிப்பு
(இரட்டைகிளவி)
கரடி - கரிய நிற விலங்கான கரடி
கரட்டான் - ஓணான் (கரடுமுரடான
முதுகை உடையது)
கரணம் - வதுவை (திருமணம்)
கரணை - துண்டு (துண்டு துண்டாக
உள்ள நிலப்பகுதி)
கரத்தல் - மறைத்தல்
கரந்தை - கருந்திட்டைக்குடி .
கருமை+திட்டை+குடி (திட்டு~திட்டை)
கரப்பான் - பகல் நேரத்தில் மறைந்து
வாழும் ஒரு பூச்சி
கரம்பு - தரிசு (பைங்கால்) {மாடுகள்
மேய விடப்பட்ட பசுமையான
புல்லையுடைய நிலம்}
கரா - முதலை
கரியார் - கீழ்மக்கள்
கருக்காய் - பிஞ்சு நெல்
கருக்கு - கூர்மை
கருங்காணம் - கருங்கொள்(ளு)
{காணம் - கொள்(ளு)}
கரும்பு - கரும்புல் (மூங்கில், கரும்பு
போன்றவை புல்லினத்தை
சேர்ந்தவை. கருமையான புல்லே
கரும்பு ஆனது)
கரைகாரர் - நிலவுடைமையாளர்
(கொங்கு வட்டார வழக்கு)
கரைச்சல் - அழுதல் (குமரி வட்டார
வழக்கு)
ஒரு சொல் பல பொருள்கள்:
கயம் - நீர் அறாத மடு, அகழி, ஆழம், கீழ்மை, குளம், நீர், பெருமை, மேன்மை, யானை,கருமை, ஊற்று,அகழ், கீழ்மக்கள்,கரிக்குருவி, நீர்நிலை,கடல்,கீழ்க்குலம்,குறைவு, நீர் செறிந்த பள்ளம்,யானைக்கன்று
கரி - அடுப்புக்கரி, மரவைரம், கழுதை, மிளகு, சாட்சி கூறுவோன், விருந்தினன், காந்து, கருகு, தாளி, உப்புக்கரி, உறை, உறுத்து,வெறு,யானை,நஞ்சு,கரியென்னேவல்
கரு- சினை,பீள்,சூல்,கருப்பம்,
முட்டைக்கரு,பிறப்பு,குழந்தை,குட்டி,
உட்பொருள், அடிப்படை, இயற்கையறிவு, கருநிறம், பிறப்பிடம், பிறவி, வித்தின்கரு, கருப்பொருள், நடுநிறம்,
பிள்ளை, பெருமை, முட்டை, மேடு,மேன்மை,கருமை
பகிர்வது,
பெஞ்சமின்
18/11/2019.
இதனை எழுதியவர்,
புலவர் குறளகன் , கருவூர்.
பேசி- 9600917161
'க' வரிசை
கதகதப்பு- வெப்பம் (இரட்டைக் கிளவி)
கதம்-சினம்
கதவண்டு- சினவண்டு
கதம்பம். - கலவை
கதலி - வாழை (சிறு பழங்கள் உடைய
வாழை). குதலை என்ற
சொல்லுடன் தொடர்புடையது.
கதவு - மறைவு
கதித்தல் - பருத்தல்
கதிரவன் - வெப்பக்கதிர்களை உடைய
கோள்
கதுவாய் - வடுப்படல் (நான்கு அடிகளையுடைய பாவடி ஒன்றில் இரண்டாம் சீரிலும் மூன்றாம் சீரிலும்
மோனை முதலிய தொடைகள் இல்லாமல் வடுப்பட்டிருப்பது. யாப்பியலில் கதுவாய் எனப்படுவது யாப்பியல் பயின்றோர்க்குத் தெரியும்)
கது - வடு
கதைத்தல் - கதை சொல்வதுபோல்
இல்லாததை சொல்லுதல்
கத்துதல் - வெட்டுதல் {கத்து~கத்தி,
(மண்) வெட்டு~ (மண்) வெட்டி}
கந்தன் - மணமுள்ளவன் (முருகு
என்றால் மணம், இளமை , அழகு
என்னும் பெருள்கள் உண்டு.
இம்மூன்று தன்மைகளும்
உடையவனே முருகன் என்று
திரு.வி.க அவர்கள் ஆய்ந்து
கூறியுள்ளார். அந்த முருகனே
கந்தன் எனப்படுகிறான்)
கந்தை - கந்தை (பீறல்)
கந்தாயம் - தவணை
கந்து - தூண்
கந்துகம் - பந்து
கந்துகவரி - மகளிர் பந்தாட்டப்பாட்டு
கமுகம் - பாக்கு மரம்
கம்மாய் - கண்மாய் (கண்-மதகு)
கம்மணாட்டி - கைம்பெண்டாட்டி (கைம்பெண்- கணவனை இழந்தவள். ஆட்டி - பெண்பாற் சொல், {ஆளன்- ஆண்பாற்சொல்} )
கபிலை - மாடு கட்டியிறக்கும் ஏற்றம்
கபிலை - மாடு
கமழ்தல் - மணத்தல்
கமுக்கம் - மறைவான
கம்பலை - அழுவொலி
கயத்தாறு - கயம்+அத்து+ஆறு
(குளமும் ஆறும் உடைய ஊர்)
கயம் - குளம், பெருமை
கரகரப்பு - தொண்டையரிப்பு
(இரட்டைகிளவி)
கரடி - கரிய நிற விலங்கான கரடி
கரட்டான் - ஓணான் (கரடுமுரடான
முதுகை உடையது)
கரணம் - வதுவை (திருமணம்)
கரணை - துண்டு (துண்டு துண்டாக
உள்ள நிலப்பகுதி)
கரத்தல் - மறைத்தல்
கரந்தை - கருந்திட்டைக்குடி .
கருமை+திட்டை+குடி (திட்டு~திட்டை)
கரப்பான் - பகல் நேரத்தில் மறைந்து
வாழும் ஒரு பூச்சி
கரம்பு - தரிசு (பைங்கால்) {மாடுகள்
மேய விடப்பட்ட பசுமையான
புல்லையுடைய நிலம்}
கரா - முதலை
கரியார் - கீழ்மக்கள்
கருக்காய் - பிஞ்சு நெல்
கருக்கு - கூர்மை
கருங்காணம் - கருங்கொள்(ளு)
{காணம் - கொள்(ளு)}
கரும்பு - கரும்புல் (மூங்கில், கரும்பு
போன்றவை புல்லினத்தை
சேர்ந்தவை. கருமையான புல்லே
கரும்பு ஆனது)
கரைகாரர் - நிலவுடைமையாளர்
(கொங்கு வட்டார வழக்கு)
கரைச்சல் - அழுதல் (குமரி வட்டார
வழக்கு)
ஒரு சொல் பல பொருள்கள்:
கயம் - நீர் அறாத மடு, அகழி, ஆழம், கீழ்மை, குளம், நீர், பெருமை, மேன்மை, யானை,கருமை, ஊற்று,அகழ், கீழ்மக்கள்,கரிக்குருவி, நீர்நிலை,கடல்,கீழ்க்குலம்,குறைவு, நீர் செறிந்த பள்ளம்,யானைக்கன்று
கரி - அடுப்புக்கரி, மரவைரம், கழுதை, மிளகு, சாட்சி கூறுவோன், விருந்தினன், காந்து, கருகு, தாளி, உப்புக்கரி, உறை, உறுத்து,வெறு,யானை,நஞ்சு,கரியென்னேவல்
கரு- சினை,பீள்,சூல்,கருப்பம்,
முட்டைக்கரு,பிறப்பு,குழந்தை,குட்டி,
உட்பொருள், அடிப்படை, இயற்கையறிவு, கருநிறம், பிறப்பிடம், பிறவி, வித்தின்கரு, கருப்பொருள், நடுநிறம்,
பிள்ளை, பெருமை, முட்டை, மேடு,மேன்மை,கருமை
பகிர்வது,
பெஞ்சமின்
18/11/2019.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக