தமிழிசை மூவர்
,,,,,,,,,,,,,,,
http://viduthalai.periyar.org.in/20100815/news05.html
#சீர்காழியில் பிறந்து / வாழ்ந்து தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர் என்று அழைக்கப்படுபவர்கள் #முத்துதாண்டவர், #அருணாசலக்கவிராயர், #மாரிமுத்தா பிள்ளை ஆவர்.
#இவர்களுக்குப் பிறகுதான் வடமொழி மற்றும் தெலுங்கு மொழி சங்கீத மும்மூர்த்திகள் எனப்படும் #தியாகராசர்
, #முத்துசாமி தீட்சிதர் , #சியாமா சாஸ்திரி ஆகியோர் உருவாகினர். //
இவர்கள் முத்தமிழ் எனப்படும் பழைய "பண் இசையின் " '''இசைத்தமிழின்''' வழித் தோன்றல்களே .....
ஆனால் ,
#தமிழர் '''மரபுரிமை''' மறுக்கப்பட்டு , மறைக்கப்பட்டு போன தமிழிசைக் காவலர்தம்
கதை யை தமிழர் நாம் அறிய வேண்டும்.
மாரிமுத்தாப் பிள்ளை.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
#மாரிமுத்தாப்பிள்ளை சீர்காழியில் தோன்றிய இசை மேதையேயாவார். இவரும் தில்லை நடராசன்பால் பல கீர்த்தனங்களும் பதங்களும் பாடியவர் ஆவார்.
தில்லைவிடங்கன் என்னும் ஊரில் 1712 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பெயர் தெய்வப் பெருமாள்பிள்ளை. இவர்கள் சைவ வேளாளர் மரபினர்.
மாரிமுத்தாப் பிள்ளை சிவகங்காதர தேசிகர் என்பவரிடம் தமிழ்க் கல்வியும், சமயக் கல்வியும் கற்றார்.
புலியூர் வெண்பா (புலியூர் என்பது சிதம்பரத்தின் மற்றொரு பெயர்), சிதம்பரேசர் விரலி விடு தூது, தில்லைப் பள்ளு முதலிய கீர்த்தனைகளைப் பாடி னார். பிறகு மாரிமுத்தாப் பிள்ளை பல ஊர்களுக் கும் சென்று இலக்கியவாதியாய் விளங்கினார்.
தில்லைத் திருத்தலம் தொடர்பாகப் பல கீர்த்தனைகளும் பதங்களும் அமைத்தார். சிதம்பரேசர் அநீதி நாடகம், சித்திரக் கவிகள் முதலியன குறிப்பிடத் தக்கவை.
ஆனால்
இவரது தெளிவான கீர்த்தனைகள் 25-ம், புலியூர் வெண்பாவும், தில்லை விடங்கன் நொண்டி நாடகம் ஆகியன மட்டுமே கிடைத்துள்ளன.
இவர் பாடிய வருணாபுரிக் குறவஞ்சி என்பதில், 170 பாடல்கள் உள்ளன. ஆனால் கீர்த்தனை வடிவில் உள்ளவை 33 நூல்கள் மட்டும்தான். அநீதி நாடகம் அக்கால மக்கள் வாழ்வில் நாட்டில் ஏற்பட்டிருந்த அநீதிகளை ஒரு நாடகம் வாயிலாகச் சித்திரிப்பது ஆகும். ஆனால் அந்நூல் கிடைக்கவில்லை.
#மாரிமுத்தாப் பிள்ளை நூற்றுக்கு மேற்பட்ட கீர்த்தனங்கள் அதாவது இசைப்பாடல்கள் இயற்றினார் என்றாலும், கிட்டியவை 25 மட்டும்தான்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் முத்துத் தாண்டவர்
கீர்த்தனங்களை அச்சிட்ட இவர் , அவற்றோடு சேர்த்து (தன்)மாரி முத்தாப் பிள்ளை கீர்த்தனங்களையும் அச்சிட்ட தால்தான் இந்த 25 ஆவது கிடைத்தன.
~~யதுகுல காம்போஜியில் அமைந்த காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே,
~~ஆரபியில் அமைந்த உருகாய் சிவசிதம்பரம்,
~~சுராட்டியில் அமைந்த எதுக்கித்தனை மோடி ஆகியவை மாரிமுத்தாப் பிள்ளை பெயர் சொல்வன.
இவரது 25 கீர்த்தனங்களும் 17 ராகங்களில் அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஆனந்த பைரவி, புன்னாகவராளி, சவுராட்டிரம், தேவ காந் தாரி, மத்யமாவதி, மோகனம், ஆரபி, பைரவி ஆகிய வற்றிற்கு இரண்டு கீர்த்தனமும், பூரி, கல்யாணி, பியாகடை, செஞ்சுருட்டி, சாவேதி, காம்போதி, தோடி, சுரட்டி ஆகியவற்றிற்கு ஒவ்வொன்று வீதமும் அமைக்கப் பட்டுள்ளன. இன்றுவரை இவ ரது கீர்த்தனங்கள் இசையரங்குகளிலும், நாட்டியத் திலும் பயன்பட்டு வருகின்றன.
இவருடைய கீர்த்தனங்கள் இரண்டு -
1. சுரட்டி ராகம் .
2. தர்மவதி இராகம்.
முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மாரி முத்தாப் பிள்ளையின் பெயர் நின்று நிலை பெறுவதற்குக் காரணம் அவருடைய முத்து முத்தான கீர்த்தனங்கள்தாம். அதுவும் நடராசப் பெரு மாள் ஒருவரையே பாடும் கொள்கை உடையன. தில்லைத் திருக்கோயில் சாகித்ய கர்த்தா அதாவது இசைப் பாடல் படைப்பாளி மட்டுமல்லாது சிறிய பிரபந்தங்களும் இயற்றியவர்.
வடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மன் மீது பஞ்சரத்தினமொன்று பாடினார்.
தில்லை விடங்கன் ஊர் குறித்துப் பதிகங்களும், குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியனவும் இயற்றியிருக் கிறார்.
இவர் பாடிய புலியூர் வெண்பா 100 வெண்பாப்பாடல் கொண்ட நூல். முதல் இரண்டு அடிகளில் தலப் பெருமை கூறிப் பின்னர் தெய்வச் செயலைக் கூறுவதாக அமைந்துள்ளது.
நொண்டி நாடகம் 18 ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பாடப் பெற்ற பிரபந்த வகை நூலாகும்.
மாரிமுத்தாப் பிள்ளை 75 ஆண்டுகள் வாழ்ந்து இருந்து 1787 - இல் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக