இன்று தொலைக்காட்சியில் ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேரிட்டது.
அப்பாடல் வரியானது கீழ்கண்டவாறு வரும்.
"எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்"
இதில் உள்ள சனம் என்ற சொல் சங்கத சொல்லாக அறியப்படுவதால், அப்பாடலை மாற்றி
" எனது மக்களினமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்" என்று அவர் பாடினார்.
உடனே எனது மனதுள், சனம் என்ற சொல் தமிழ்ச்சொல்லா இல்லை சங்கத்ச்சொல்லா, என்ற கேள்வி எழுந்தது.
அண்மைக்காலமாக ப. அருளியாரின் நூல்களை படித்து வருவதால், சங்கத்தில் புழங்கும் பல சொற்களின் வேர் தமிழில் உள்ளவையே என்ற தெளிவைப் பெற்றுள்ளேன்.
அதில் இந்த சனம் என்ற சொல்லும் அடக்கம் என்று எனது மனம் நம்பியது. உடனே அருளியாரின் "வேரும் விரிவும் " நூலை எடுத்து புரட்டினேன். இரண்டாம் தொகுதியில் எனது கேள்விக்கான விடை கிடைத்தது.
ஈனு>ஈன்>ஈனம்>இனம் என்ற தமிழ்ச்சொல்லே Genea என்று கிரேக்க மொழிக்குச் சென்றுள்ளது. பின் அது genos என்று திரிந்துள்ளது. இலத்தீன் மொழியில் genus என்று ஆனது. இதிலிருந்துதான் gene, gender, generation, general , genetic போன்ற ஆங்கில சொற்கள் கிளைத்துள்ளன.
கிரேக்க இனவழி வந்த பார்ப்பனர்கள், நாவலந்தீவில் நுழைந்தபோது, genos என்ற சொல்லின் திரிபாகிய Janas என்ற சொல்லை பலுக்கியுள்ளனர்.
இதிலிருந்தே Jana, Janana, Janman போன்ற சங்கதச் சொற்கள் உருவாகியுள்ளன.
அந்த Jana என்ற சொல் தமிழில் ஜனம் என்றவாறு புகுந்து, பின் சனம் என்று திரிந்துள்ளது.
நாம் அனைவரும் சங்கதம் என்று கருதுகிற இச்சொல், உண்மையில் நம்மிடமிருந்து கிரேக்க, இலத்தீன் போன்ற மேலை ஆரிய மொழிகளுக்குச் சென்று, பின் சங்கதம் என்னும் கீழை ஆரிய மொழிக்கு வந்து, பின் மீண்டும் தமிழுக்கே வந்துள்ளது.
இதனை கருதும் போது, வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது.
முன்பெல்லாம் நமது ஊரில் எவராவது ஒருவர் வெளிநாட்டில் (அரபு நாடுகளில்) வேலை பார்ப்பார். அவர் ஊருக்கு வரும்போது , தனது உறவினர்களுக்கு, பொருட்கள் வாங்கி வருவார். அதனை பெறுவதில் நம் மக்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். இது வெளிநாட்டு துணி, வெளிநாட்டு நறுமணத்தைலம், வெளிநாட்டு கண்ணாடி என்று அதிகம் பீற்றிக்கொள்வர். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான், வெளிநாட்டுச் சேலை என்பது. உள்ளூரில் வாங்கிய சேலையை உடுப்பதில் பெண்களுக்கு பெருமை இருக்காது. ஆனால் வெளிநாட்டு சேலையை உடுத்திச் செல்வதில், மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைவர்.
அரபு நாட்டில் எவரும் சேலை அணிவது இல்லை. பின் அங்கு யார் சேலையை உருவாக்குவார்? எல்லாம் நம்ம ஊரிலிருந்துதான் சேலைகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். அதனை அங்குள்ள நம்மூர் ஆட்கள் வாங்கி, இங்குள்ள தமது உறவுக்கார பெண்களுக்கு கொடுப்பர். அதனை நாம் பெருமையாக உடுத்துவோம்.
அதுபோலத்தான் நாம் இன்று பிறமொழிச்சொற்கள் என்று பெருமையாக நினைக்கும் பல சொற்கள், தமிழிலிருந்து கிளைத்தச் சொற்களே.
இங்கிருந்து வெளிநாடு போய் மீண்டும் தமிழ்நாட்டிற்கே வருகிறது. அவ்வளவுதான்.
(தமிழின் தொன்மையை உணர வைத்த பாவாணர், அருளியார் போன்ற அறிஞர்களுக்கு தமிழுலகம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக