தமிழர் இழந்த நிலம்-6
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
இன்றைக்கு துல்கர் சல்மான் என்கிற ஒரு கத்துக்குட்டி மலையாள நடிகன், தலைவர் பிரபாகரனை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தில் வைத்த பெயர்,எத்தனை பெரிய வேதனையை இந்தத் தமிழர் நெஞ்சங்களில் உருவாக்கி இருக்கிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
துல்கர் சல்மானுடைய எண்ணவோட்டத்தில் மட்டுமே இந்த வக்கிரம் இருக்கிறது என்று நினைத்தால்,,, நாம்தான் கத்துக்குட்டிகள். தமிழரை பழிப்பது என்றால், ஆனந்த களிநடனம் புரிபவர்கள் அவர்கள்.இன்னும் சொல்லப் போனால் பட்டம் தாணுப்பிள்ளை, கே.எம். பணிக்கரின் தொடர்ச்சி இந்த சல்மான்... அவர்கள் செயலில் காட்டியதை, இந்த கத்துக்குட்டி சொல்லில் காட்டுகிறது, அவ்வளவே.
"ஆயிரம் ஆண்டுகளாய் வண்டி இழுக்கின்றன தன் கொம்பை மறந்த மாடுகள்" எனம் காசி ஆனந்தனின் கவிதைவரிகள்... யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தன் பலம் என்னவென்றே தெரியாத இந்த தமிழினத்திற்கு கண்டிப்பாக பொருந்தும்.
1956 மொழிவழி பிரிவினை, நாடு முழுவதும் பெரும் கலகங்களை ஏற்படுத்திய நிலையில், கேரளாவோடு அநியாயமாக இணைக்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று கண்டனக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாயிற்று.
சிலம்புச் செல்வர் ம. பொ. சி இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
அன்றைக்கு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக இருந்த திரு பி.டி.ராஜன் தலைவராகவும்...
மா பொ சி அவர்கள் அமைப்புச் செயலாளராகவும்...
ஜீவா
என்.வி நடராஜன், அந்தோணிப்பிள்ளை, சுப்பிரமணி ஆகியோர் செயலாளர்களாகவும் முன்னெடுத்த அந்தக் கண்டனக் கூட்டம் 27- 01 -1956 அன்று நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
1950 காலகட்டங்களில் திராவிட எதிர்ப்பு மாநாட்டை தமிழகம் முழுவதும் நடத்திய சிலம்புச் செல்வர் ம பொ சி,,,இந்தப் பொதுப் பிரச்சினைக்காக சற்று கீழிறங்கி தந்தை பெரியாரை நேரில் சென்று சந்தித்து நிலைமையை விளக்கினார்.பெரியார் இல்லாமல்தான் அன்றைக்கு அணுவும் அசையாதே இந்த தமிழ் நிலத்தில்...
திமுக
தமிழரசு கழகம், சோசலிஸ்ட் கட்சி, திராவிட பார்லிமென்டரி கட்சி,
தாழ்த்தப்பட்டோர் கழகம்,
வடக்கு எல்லை பாதுகாப்பு கமிட்டி, திரு-கொச்சி இணைப்பு கமிட்டி, புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
நொடிக்கு நொடி என்ன நடக்கிறது என்கிற தகவல்கள் தந்தை பெரியாருக்கு பரிமாறப்பட்டதாகவே எழுதுகிறார் ம.பொ.சி.
இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் அதாவது 28-0 1- 1956 அன்று, ராஜாஜி தலைமையில் இன்னொரு கூட்டமும் நடக்கவிருந்தது.
ம. பொ. சி முன்னெடுத்த கூட்டத்தின் பிரதான கோரிக்கை தேவிகுளம் பீர்மேடு...
ராஜாஜி முன்னெடுத்த கூட்டத்தின் பிரதான கோரிக்கை, இந்தியா முழுவதும் ஆங்கிலமே அலுவல் மொழியாக வேண்டும் என்பதைக் குறித்தானது...
உண்மையிலேயே இரண்டு கூட்டங்களிலும் தந்தை பெரியார் கலந்து கொண்டு, உரையாற்றுவதாகத்தான் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ம.பொ.சி தலைமையிலான கூட்டத்தில்,தான் கலந்து கொள்ள வேண்டுமானால், வெறுமனே தேவிகுளம் பீர்மேடு பற்றி மட்டும் பேசக்கூடாது. கூடுதலாக இன்னும் நான்கு கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என்கிற முன் நிபந்தனையை விதிக்கிறார் தந்தை பெரியார்.
அதாவது
* ராணுவம், போக்குவரத்து, வெளிநாட்டு தொடர்பு தவிர்த்த மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும்...
* மதராஸ், சென்னை ராஜ்ஜியம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்துவது...
* தமிழ்நாடு- கேரளா- கர்நாடகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தட்சிணப்பிரதேசம் அமைப்பதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்வது...
* இந்தியை தடுத்து, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடரச் செய்ய வேண்டும் என்பது குறித்தானது...
ஆரம்ப நிலையில் ம.பொ.சி யால் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்றாலும்,,, நாட்கள் நெருங்க நெருங்க அவரை ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது.
தந்தை பெரியாரின் இன்னபிற கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் வைத்துப் போராட முடியும். எப்போதுமே எதிரும் புதிருமாக நிற்கும் இயக்கங்களும், தலைவர்களும் இனத்தின் தேவை கருதி ஒருங்கிணைந்திருக்கும் இந்த நிலையில்,பெரியாரின் கோரிக்கைகளையும் கூட்டத்தில் அஜெண்டாவாக வைத்தால், எங்கே தேவிகுளம், பீர்மேடு முக்கியத்துவம் பெறாது போய் விடுமோ என்று அஞ்சினார் ம.பொ.சி.
ஆனால் அதற்கு அடுத்த நாள், ராஜாஜி தலைமையில் நடக்க விருந்த கூட்டத்தில்,ம.பொ.சி யிடம் முன்வைத்த இந்த கோரிக்கைகளை, தந்தை பெரியார் முன் நிபந்தனைகளாக வைக்கவில்லை என்பது இன்றைய இளைஞர்களுக்கான செய்தி.
தேவிகுளம் பீர்மேட்டுக்கு முழு ஆதரவு என்று அடிக்கடி விடுதலையில் வியாக்கியானம் பேசிய தந்தை பெரியார்...ம.பொ.சி ஏற்றெடுத்த தேவிகுளம் பீர்மேட்டுக்கான கூட்டத்தை புறக்கணிப்பதற்கு இரண்டு காரணங்களை என்னால் அவதானிக்க முடிகிறது.
திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்திய ம. பொ சி யின் கீழ் நாம் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதா என்பது ஒன்று...
இரண்டாவதாக அறிஞர் அண்ணா அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால்,
தான் கலந்து கொள்ள முடியாது என்று சி பா ஆதித்தனாரிடம், தந்தை பெரியார் தெரிவித்ததாக, அண்ணாவே தன் தம்பிகளுக்கு எழுதிய கடிதம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.
முரண்படுவதில் வட கொரிய அதிபர், நகைச்சுவைத் திலகம் கிம் ஜோங் உன்னை தாண்டிய தந்தை பெரியார்,அன்றைக்கு பற்றி எரிந்துகொண்டிருந்த தேவிகுளம் -பீர்மேடு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,,, எதற்காக முன்நிபந்தனைகளாக நான்கு கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.
குளமாவது மேடாவது என்று பெருந்தலைவர் காமராஜரையே,தியாகி பி.எஸ். மணியிடம் சொல்ல வைத்த பெரியாரின் பேனா, சம்பந்தமே இல்லாமல் தட்சிணப் பிரதேசத் தை அமைக்கப் போகிறார்கள் என்று அங்கலாய்ப்பு செய்தது ஏன் என்பதுதான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
அன்றைக்கு பெரியார் வைத்த கோரிக்கைகள் இந்தியா முழுவதற்குமான கோரிக்கைகள்...
ஆனால் ம.பொ.சி முன்வைத்த தேவிகுளம் பீர்மேடு கோரிக்கை என்பது, அது தாய்த்தமிழகத்திற்கு உரிய தலையாய பிரச்சனை என்பதை பெரியார் கவனமாக கடந்து போய்விட்டார்.
தமிழ், தமிழர், தமிழகம் என்று தொடர்ந்து பேசி வரும் ம.பொ.சி யை குறிவைத்து தாக்குவதற்கு இதுவே தக்க தருணம் என்பது தான் பெரியாரின் எண்ணவோட்டம்.
ஆனால் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையை ம.பொ.சி யோடு இணைந்து முன்னெடுத்து கொண்டு செல்ல நினைத்த திரு பி.டி. ராஜனும், திரு என்.வி. நடராஜனும் யார் என்கிற கேள்வியை திராவிட இயக்க தோழர்கள் முன்வைக்கிறோம்.
ஆனால் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் சிரித்த முகத்துடன் சகஜமாக கலந்து கொண்ட தந்தை பெரியார், தேவிகுளம்- பீர்மேடு பிரச்சனையை எந்த நிலையிலும் கண்டுகொள்ளாத ராஜாஜியை வானளாவப் புகழ்ந்தார் என்கிறது வரலாறு.
யாரையெல்லாம் அதுநாள்வரை திட்டித் தீர்த்தாரோ, அவர்களில் முக்கியமானவர்களான கிருஷ்ணசாமி ஐயர், கே எஸ் ராமசாமி சாஸ்திரி, வெங்கட்ராம ஐயர் உள்ளிட்டவர்களெல்லாம் அந்தக் கூட்டத்தில் பெரியாரின் பேச்சை கேட்டு புளங்காகிதம் அடைந்து போனார்கள்.
மறந்தும்கூட அந்த கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை தந்தைப்பெரியார்.
இந்த இடத்தில்தான் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மீது நமக்கு சந்தேகம் வலுக்கிறது.
அந்த நிலையிலும் கூட தன்னை நியாயப்படுத்துவதற்காக பெரியார் 26-01- 1956- அன்று ம.பொ.சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்...
தட்சிணப் பிரதேசம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாகவும், அதற்கு எதிராக நாம் கிளர்ச்சி செய்யவேண்டும் என்பது குறித்தான அந்த கடிதத்தில், தந்தை பெரியார் கிளர்ச்சிக்கு கொடுத்த விளக்கத்தை கீழே தருகிறேன்...
"எனது கிளர்ச்சி திட்டம் பலாத்காரம், உயிர்சேதம், நாசவேலை, பொருள் நஷ்டம், பொதுசன அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு பெரிதும் இடமில்லாமல் இருக்கும்படியாக இருக்கும். எதிர்பாராமல் அவை நேரிடும் ஆனால் சமாளிக்கும்படி இருக்குமே தவிர ஓடும்படி இருக்காது"
இதுதான் பெரியார் கண்ட பெரும் கிளர்ச்சி.
தேவிகுளம் பீர்மேடு குறித்து
ம. பொ. சி க்கு கடிதம்...
விடுதலையில் குமுறல்...
அறிஞர்
அண்ணாவுக்கு எச்சரிக்கை...
மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை...
அடடா
அவதாரங்கள் புல்லரிக்கிறது...
தமிழ்நாடு கேரளா கருநாடகம் ஒன்றிணைந்த
தட்சிணப் பிரதேசம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இதே தந்தை பெரியார்தான்...
இவைகளோடு ஆந்திராவையும் ஒருங்கிணைத்த திராவிட நாடு வேண்டும் என்று மும்பைக்கு சென்று, பாகிஸ்தான் கேட்ட முகமது அலி ஜின்னா விடம் நீட்டி முழக்கி னார்.
பார்ப்பானும் மலையாளியும் ஒன்று என்கிற கருத்தை தட்சிணப்பிரதேச பிரச்சினையில் முன்வைத்த தந்தை பெரியார்,,,எந்த அடிப்படையில் அவர்களையும் உள்ளடக்கிய திராவிட நாடு வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டார் என்கிற கேள்வியோடும்... மன வேதனையோடு இன்றைய செய்தியை நிறைவு செய்கிறேன்.
வரலாறு கண்டிப்பாக நீளும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக