ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

யார் தமிழ்த்தாத்தா...?

      திரு. சுந்தர் வாசுதேவன்  அவர்களின்  பதிவு இது


யார் தமிழ்த்தாத்தா...?
=========================
#அறிக: உவேசா இல்லாவிட்டாலும், சுவடிகள் கிடைத்திருக்கும்! அவருக்கு முன்பே பலரும் திரட்டியது தான்! சிவைதா, உவேசா-வை விட நிறையவே திரட்டினார்! ஆனால் தமிழ்த்தாத்தா என்று  ஒருவரை மட்டுமே ஊதிப் பரப்பி அதே தொண்டு புரிந்த இன்னொருவரை மறைத்து விட்டார்கள். மாயையில் விழாதீர்கள்! மெய்த்தமிழ் அறிக!

தமிழ்த் தாத்தா, உ.வே. சா என்று பரப்பிப் பரப்பிக் "கொண்டாடும்" தமிழ்ப் பண்டிதாள்..அதே தொண்டு, ஈழத் தமிழர், தமிழ்த் தாத்தா "சிவைதா" வை  கண்டுகொள்ளவில்லையே  ஏன்?

உவேசா-வுக்கு முன்பே சுவடி திரட்டியவர்கள்:


*குறள்= வீரமாமுனிவர்
*நாலடியார்= GU போப்
*இன்னிலை= வஉசி
*முருகாற்றுப்படை= ஆறுமுகநாவலர்
*தமிழ் இலக்கணம் முழுதும்= சி.வை.தா!

2500 ஆண்டுகளாகத் தமிழின் திசைகாட்டி தொல்காப்பியம்! அதைச் சுவடி தேடி மீட்ட ஈழத் திருமகன் சிவைதா அவர்களே சுவாமிநாதய்யர் அல்ல. தமிழின் இலக்கண நூல்கள்!

*ஆதித் தொல்காப்பியம்
*நன்னூல்
*முத்துவீரியம்

மற்றும் பலப்பல ஓலைச்சுவடிகளை பதிப்பில் கொண்டுவந்தவர் சிவைதா.

சுவாமிநாதையர் திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து எடுத்துச் சென்ற எத்தனை தமிழ் ஏட்டுச்சுவடிகள் உண்மையில் நூல்களாக வெளிவந்தன எத்தனை விறகாகின என்பது அந்தச் சிவனுக்கே வெளிச்சம்.

சி. வை. தா தான் சுவாமிநாதையர் பதிப்பிக்காமல் பதுக்கி வைத்திருந்த தொல்காப்பிய ஏடுகளை அச்சுவாகனமேற்றிய உண்மையான #தமிழ்த்தாத்தா - யாழ்ப்பாணம்
 சி. வை. தாமோதரம்பிள்ளை..#சிவைதா ❤️❤️


- சுந்தர் வாசுதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக