ப.அருளியாரின் நான் முன்னுரைத்த முன்னுரைகள் (பாகம் 2) நூலிலிருந்து,
அச்சம்
வலிய உயிரொன்று எளிய உயிரொன்றை தாக்க முற்படும்போது, தாக்குதலை நேர்கொள்ள முடியாத எளிய உயிரி, தன்னை பாதுகாக்க வளைவது அல்லது சுருள்வது இயற்கை வினை. அதற்கும் முன்னரே தன் உள்ளங்கொள்ளுவதாகிய வளைவு உணர்ச்சியே, அதாவது மனவளைவே, அச்சம் என்னும் பெயரால் தமிழமாந்தனால் சுட்டப்பெற்றது.
இவ்வுணர்ச்சியைக் குறித்து தமிழர் வழங்கிய சொற்கள் மொத்தம் 32. அவை,
1. அஞ்சு
2. அச்சு
3. அச்சம்
4. அச்சலிப்பு
5. வெருவு (வெரூஉ)
6. வெருட்சி
7.உட்கு
8.சூர்
9.கொன்
10. நடுக்கம்
11. அதிர்ப்பு
12.விதிர்ப்பு
13.விதர்ப்பு
14.பனிப்பு
15.உரு
16.உரும்
17.உரும்பு
18.பலம்பு
19.கவலை
20.கலங்கள்
21.கலக்கு
22.கலக்கம்
23.பேம்
24.அணங்கு
25.அடுப்பு
26.விறப்பு
27.பிறப்பு
28.வெறி
29.வெறுப்பு
30.வெடி
31.நாம்
32.நாமம்
என்பனவாம். இச்சொற்களின் உள்ளீடுகளில் உள்ள பொருண்மைகளில், அச்சவுணர்ச்சியின் அகலிய வரலாறே ஆர கிடக்கின்றது.
அஞ்சு-----அச்சு-----அச்சம்
உய்=வளைவுக் கருத்து வேர்
உய்+அல்>உயல்=வளைவு
உயலுதல்=வளைதல், அசைதல்
உயல்>உழல் (ய>ழ)
உழல்>சுழல் (மின்மிகை)
உய்>ஊய்>ஊழ் (ய>ழ)= (வளைவு),
முறை
உய்>அய்
அய்>அயை>அசை=வளை, சூழ்
அசைத்தல்=சுற்றல்
அய்>ஆய்=வளைவுறு, வருந்து
ஆய்>சாய் (முன்மிகை) = வளை
சாய்தல்=வளைதல்
அய்>அய்கு>அகு
[ ஒ.நோ: வெய்>வெய்கு>வெகு ]
அகு>அகை=வளை
அகைதல் =வளைதல். (கயா.நிக:348)
அகு>அக்கு=வளைவு, வளை, சங்கு, சங்குமணி
"அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகி
துக்கத் தொழுநோய் எழுபவே"
(நாலடி 123 -1-2)
அக்குமணி>சங்குமணி
அகு>அங்கு= வளை, வளைவு
(மே.கா: அங்கு>சங்கு=வளை)
அங்கு+அணம்=அங்கணம்= வளைவு, முற்றம்
அங்கு+அதம்=அங்கதம்= ஒன்றிருக்க -வேறொன்றாக வளைத்து மொழியும் வசையுரை அல்லது நசையுரை
(காண்க: தொல்.செய்யுள் :8:125)
அங்கு>அஞ்சு= வளை, அச்சங்கொள், அச்சம்
(ஒ.நோ:1. தங்கு>தஞ்சு>தஞ்சம்
2.வங்கு>வஞ்சு>வஞ்சி)
அங்கு>அஞ்சு>அச்சம்
"அஞ்சுவந்த போர்க் களத்தான்" (மதுரைக் காஞ்சி:28)
"அஞ்சுவரத் தட்கும்" (மதுரைக் காஞ்சி: 140)
அஞ்சு>அச்சு= அச்சம்
"அச்சற்று" (பதிற்றுப் 90:2)
"நகையச்சாக" (பரிபா 3:33)
அச்சு+அம்=அச்சம்=அஞ்சுகை
"அச்சத்தின் அகறல்" (தொல் பொருள் '267)
அச்சு+உறு=அச்சுறு=அச்சம்பெறு
அச்சுறுதல்=அச்சமடைதல்
1.இவ்வுல கெல்லாம் அச்சுற (கலி 134:19)
2. அச்சுகின்றது என் ஆவது ஆகுமால் (கந்தபு 4:10:19)
அச்சு+உறுத்தல்= அச்சுறுத்தல்
"அஞ்சியச்சுறுத்தலும்" (தொல். பொருள் 112:12)
அச்சு+உறுக்கை=அச்சுறுக்கை
அச்சுறுக்கை>எச்சறுக்கை>எச்சரிக்கை
அஞ்சு+அல் ("அல்" -ஈற்றுத் தொழிற்பெயர்> அஞ்சல்=அச்சம்
"அஞ்சலில் தானைவேந்தே"(சூளா:531)
அச்சு>அச்சல்>அச்சலி
அச்சலிப்பு=அச்சம்
"அரிகரியைக் கண்டவிடத்து அச்சலிப்பாய் ஓட" (நக்கீ. ஈங்:4)
வெருவு-----வெரூஉ-------வெருட்சி
வர்= வளைவுக் கருத்து வேர்
வர்+இ=வரி= வளைவு, கோடு
(ஒ.நோ:கோடு=வளைவு)
வர்+ஐ=வரை=கோடு
வர்>வரு>வருந்து=வளை
வருத்து= வளைவுறுத்து, வளையச் செய்
"வருத்த வளை வேய் அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்" (நீதிவெண்பா: 7:1-2)
வருத்து+அம்>வருத்தம்= வளைவு, உள்ளவளைவு, உள்ளத்தின் வாட்டம்
வரு+அவு= வரவு= வளைகை, வணங்குகை
[ஒ.நோ:வணங்குதல்=வளைதல்]
"புரையின்று, மாற்றாளை மாற்றாள் வரவு" (பரிபாட 20:72-73)
வரு+வு= வருவு>வெருவு=வளை, வளையுறு, அஞ்சு
வெருவு=அச்சம் "வெருவின் கண்ணும்" [தொல். பொருள்: 111]
வெருவு>வெரூஉ= அச்சம்
"வெரூஉப் பறை" [பொருந: 171]
வெருவு>வெரு=அச்சம்
"வெருவரு நோன்றாள்" [பொருந:147]
வெரு+கொள்ளுதல்>வெருக்கொள்ளுதல்=அச்சங்கொள்ளுதல்
வெருக்கோள்=அச்சங்கொள்ளுகை
[பெரியபு. தடுத்தாண் :114]
வெருவு>வெருகு= அச்சுறுத்தும் கொடிய நோக்கினையுடைய காட்டுப் பூனை
"மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு" [தொல். மரபு: 6:1]
வெருகு>வெருக்கு=வெருகு
"வெருக்கு விடையன்ன வெகுள் நோக்கு" [புறம் :324:1]
வெரு+உள்=வெருள்=அஞ்சு
வெருள்+சி>வெருட்சி=அச்சம்
[செ.ப.க:3787]
வெருட்டு>வெரட்டு>விரட்டு=அச்சுறுத்தி ஓடச்செய்
வெருட்டு>வெரட்டு>மெரட்டு>மிரட்டு= அச்சுறுத்து
[ மருள்+து=மருட்டு. மருட்டுதல்= மருளச்செய்தல். மருட்டுதல் வேறு, மிரட்டுதல் வேறு ]
வேற்று மொழியில் இச்சொல் எவ்வாறு புகுந்துள்ளது என தற்போது காணலாம்.
வெரு (தமிழ் )>Veror (இலத்)=
1. to be afraid, to fear
2. to have respect for, to reverve
(French) re-verer>(English) reverve= to have respect for
(English) reverent= feeling or showing reverence
Example: reverent father.
உட்கு
உல்: வளைவுக் கருத்து வேர்
உல்+அவு>உலவு=சுற்று
உலவு>சுலவு=சுற்று
உல்+ஐ=உலை
உலைவு=அலைவு, நடுக்கம்
உல்+அம்=உலம்
உலம்+வரல்>உலமரல்=சுழற்சி, உழலுதல்
உலமரல்>அலமரல்=சுழற்சி
"அலமரல் .........சுழற்சி"(தொல்:உரி:13)
உல்>உள்>உள்+அம்பு>உளம்பு
உளம்புதல்=அலைத்தல் (
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
25 சுறவம் 2051
(08-02-2020):23)
உள்>உளு>உளுக்கு=நெளிவு (கம்பரா:கார்முக:10)
உளுக்கு>சுளுக்கு
உள்>உளை=மடிந்து தொங்குவதாகிய பிடரிமயிர் (ஒ.நோ: மடங்கல்)
உளைமான்=அரிமா (அகம்:102:1-2)
உள்>உளை=வருத்தத்தால் ஆகிய நடுக்கம் (பரி:10.65-66)
உளை+வு>உளைவு= வருத்தம்
உள்+கு>உட்கு=வளை
உட்குதல்=வளைதல்
1. அஞ்சுதல். 2. நாணுதல்
உட்குதல்=அஞ்சுதல் "நண்ணாரும் உட்கும் என் பீடு" (குறள்:1088)
உட்கு=அச்சம். "நாணும் உட்கும் உடைதர" (குறிஞ்சி :184)
"உரு உஞ்காகும்" (தொல். உரி:4)
சூர்
உர்: வளைவுக் கருத்து வேர்
உர்+உள்>உருள்=சுழல், சுழன்றோடு
உருள்+இ>உருளி= சக்கரம் (பதிற்றுப் 27:11)
உருள்+ஐ>உருளை=சக்கரம்
உருள்+ஆயம்>உருளாயம்=உருட்டும் கவறாட்டத்தினால் ஆகும் வருவாய்
உருள்>சுருள்=வளை, உருளு
சுருள்=சுருண்டபொருள்
உர்>உரி=வளை
உரி>சுரி=சுழற்சி, சுழி, சுருள்
சுரித்தல்=வளைதல், வளைவாய்க் கிடத்தல்
சுரிந்து=நீர்ச்சுழி
சுரிகுழல்= சுருண்ட கூந்தல்
சுரி+அல்=சுரியல்=வளைவு
"சுரியற் றாடி" (மணி:3:116)
சுரியாணி=முறுக்காணி
சுருள்+து>சுருட்டு=சுருளச் செய்
சுருள்>சுருண்>சுருணை=சுருட்டி வைத்த பொருள்
சுர்>சுர்+உம்பு>சுரும்பு=வட்டமிடுவதாகிய வண்டு
[ஒ.நோ:வள்>வளை. வள்>வண்+து>வண்டு]
உர்>சுர்>சூர்
சூர்+அல்>சூரல்=வளைந்து அடிக்கை,
சுழித்தடிக்கை
"சூரலங் கடுவளி யெடுப்ப" (அகம்:357:1-2)
சூரல்=1. வளைவுறுந் தன்மையுடையதாகிய பிரம்பு (அகம் :357:1-2)
2. வளைவுற்ற இலைகளையுடைய சூரை என்னும் நிலத்திணை
("வேரல் சூரல்" (குறிஞ்சி:71)
சூர்>சூரை=சூரல். (மணி:6:81)
சூர்>சூரை>சூறை=சுழற்காற்று
சூர்>சூரு>சூறு=சூழ்
சூறுதல்=சூழ்தல் (பாரத. காண்டவ:31)
சூறை=சூழ அடர்ந்து பறிக்கும் கொள்ளை
சூறை=கொள்ளை (திவா.)
சூர்+(ப்)+பு>சூர்ப்பு=1.வளைவு (அகம்:142:16-17)
2.சுழற்சி (சங்.அக)
3. கைவளை, கைக்கடகம். (புறம்:153:3)
சூர்த்தல்=சுழலுதல். (அக.நி)
சூர்=வளை, வளைப்பு, நடுக்கம், அச்சம்
சூர்=அச்சம், அச்சத்தை உருவாக்கும் பெண் தெய்வம்
"சூர் மகள்" (அகம்:198:11-17)
"சூர் அரமகள்" (அகம் :32:5-9)
சூர்=நடுக்கத்தோடு கூடிய அச்சம்
"யாறே, சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய" (அகம்:72:7-8)
கொன்
குல்:வளைவுக் கருத்து வேர்
குல்+அவு>குலவு=வளை
"குலவுச் சினைப் பூக்கொய்து" (புறம்:11:4)
குலவு=வளைவு. "குலவுக் கொடுஞ்சிலை" (பு.வெ:1-10)
குல்>குலு>>குலுக்கு
குல்+கு>குலுகு>குலுங்கு=நடுங்கு
குலுங்குதல்=நடுங்குதல் (பிங்)
குல்>குள்>குள்+இர்>குளிர்=நடுக்கம்
குல்>கொல்>கொள்>கொளு>கொளுவு>கொளுவி=கொக்கி
கொள்+கு=கொட்கு=வளை, சுழல்
கொட்கு+இ>கொட்கி>கொக்கி
கொல்>கொன்:(வளைவு>)நடுக்கம், அச்சம்
கொன்=அச்சம் (தொல்.இடை:6)
நடுக்கம்
உய்: வளைவுக் கருத்து வேர்
உய்>அய்>ஞய்
ஞய்>ஞய்ல்>ஞல்
ஞல்>ஞெல்>ஞெலி=வளைவு
ஞெலிகோல்=தீக்கடைகோல் (அகம்:169:5)
ஞெலி=வளைதல் (புறம்:331:4)
ஞெலி>நெலி>நெளி=வளை
ஞெல்>ஞெள்>ஞெண்>ஞெண்+து=ஞெண்டு
ஞெண்டு= (வளை தோண்டும் உயிரியாகிய) நண்டு
(அகம்:20:4, 176:8)
ஞல்>ஞள்>நள்
நள்+(ள்)+இ>நள்ளி=நண்டு
(திவ்.திருவாய்:9,10:12)
நள்+இர்>நளிர்=குளிர்ச்சி (பிங்)
நளிர்=குளிர் காய்ச்சல்
நளிர்வித்தல்=நடுங்கச் செய்தல்
நளுக்குதல்=நடுக்குதல் (நாஞ்சில் வழக்கு)
நள்+து>நட்டு
[நட்டுக் கொள்ளுதல்= வளைந்து கொள்ளுதல்]
நட்டு>நடு
நடு+கு>நடுகு>நடுங்கு =வளை, வளைவுறு, அஞ்சு
நடுங்கு>நடுக்கு=நடுக்கம்
"நடுக்கின்றி" (புறம்:2:20)
[நடுங்கு+அல்>நடுங்கல்
உள்+நடுங்கல்=உண்ணடுங்கல்] (குறள்:680)
அதிர்ப்பு
உ: முன்மைச் சுட்டு, மேன்மைச் சுட்டு (உயர்ச்சிச் சுட்டு)
பொருள் விரிவாக்க வழி: உயர்ச்சிக் கருத்து>பெருக்கக் கருத்து
[சான்று:விரிவுறுதற் கருத்தினின்று (பெருக்கக் கருத்தினின்று) விரைவுக் கருத்து தோற்றம்
காண்க: "விய்"=விரிவுக் கருத்து
விய்>விய்+அல்>வியல்=விரிவு, அகலம்
"வியலென் கிளவி அகலப் பொருட்டே" [தொல்.உரி:66]
விய்>வெய்>வெய்கு>வெகு
வெகுத்தல=மிகுதல் [யாழ்.அக],
வெகுமதி, வெகுமானம்
வெகுவாய்=மிகுதியாய்
வெகு>வேகு>வேகு+அம்>வேகம்= விரைவு
உ>உது=உது+ஐ>உதை=மேலெழுமாறு காலால் ஏற்று
உது+இ>உதி=மேலெழு, தோன்று
உதியன்=தோன்றல், அண்ணல், பெரியோன்
உது>அது
அது+ஐ>அதை=வீங்கு
அதைப்பு= வீக்கம், பெருக்கம்
அது>அதி=மிகுதி
அதிநுட்பம்= மிகுநுட்பம்
அது+இர்=அதிர்=விரைந்து நடுக்கமுறு,
மனம் நடுங்கு
அதிர்+(ச்)+சி>அதிர்ச்சி= நடுக்கம்
அதிர்+(ப்)+பு> அதிர்ப்பு=நடுக்கம்
அதிர்+வு>அதிர்வு=நடுக்கம்
"அதிர்வும் ............நடுக்கம் செய்யும்"
(தொல்.உரி:18)
விதிர்ப்பு-----விதர்ப்பு-------விதப்பு
விய்:விரிவுக் கருத்து வேர்
விய்+அல்=வியல்
வியல்=விரிவு, அகலம், பெருக்கம்
விய்>விய்து>விது
விது+அப்பு>விதப்பு=மிகுதி (திவா.)
விது+உம்பு= விதும்பு
விதும்புதல் = விரைதல்
"அவர்வயின் விதும்புதல்" [குறள்:அதி:127]
விதும்புதல்=(விரைதல்>)நடுங்குதல்
விதும்பு> விதுப்பு=விரைவு
"ஆன்றோர் விதுப்பொடு விருந்தெதிர் கொளற்கே" (புறம்:213)
விதுப்பு=(விரைவு>பரபரப்பு>)நடுக்கம்
"பெருவிதுப்புற்றாள்" (கலி:99)
விதுப்பு=பரபரப்பு
"விதுப்புறு நடுக்கமொடு"
(பெருங். உஞ்சைக்:36:61)
விது+அல்>விதல்>விதல்+ஐ=விதலை=நடுக்கம்
"பனிப்படு பைதல் விதலைப் பருவத்து" (பரிபா:11:75)
விது+இர்>விதிர்
விதிர்தல்=நடுங்குதல்
விதிர்+(ப்)+பு>விதிர்ப்பு=நடுக்கம்
"என்போற் பெருவிதிர்ப்புறுக" (புறம்:255:3)
விதிர்ப்பு=(நடுக்கம்>)அச்சம் (திவா)
"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்" (தொல். உரி:18)
விதிர்>விதிரு>விதிறு>விதறு> விதறுதல்=நடுங்குதல், பதறுதல்
விதறு=நடுக்கம்
"விதறுபடாவண்ணம் வேறிருந்தாய்ந்து" (திருமந்:2948)
விதிர்ப்பு>விதர்ப்பு=அச்சம் (யாழ்.அக), (பிங்), (சூடா)
விது>விது+அப்பு=விதப்பு=மிகுதி, விரைவு (நாமதீப)
விதப்பு= நடுக்கம் (பிங்)
பனிப்பு
பல்:வெண்மைக் கருத்து வேர்
பல்=எயிறு
பல்>பன்>பன்+(ன்)+அல்>பன்னல்= வெள்ளியபருத்தி
பன்>பன்னு>பன்னு+அல்>பன்னுவல்> பனுவல்=வெண்பஞ்சு
பல்>பன்>பன்+இ>பனி= வெள்ளியாக விழும் குளிர்ந்து துளி
பனி=குளிர்
பனி=குளிர்
குளிர்ச்சி>குளிர்ச்சியால் ஏற்படும் நடுக்கம்
பனித்தல்= குளிர்ச்சியால் நடுங்குதல்
"மயில் பனிக்கும் என்றருளிப் படாஅம் ஈத்த" (புறம்:145:1-2)
பனிப்பு=நடுக்கம்
"தேவர் மெய்ப்பனிப்புற" (கல்லாடம்:முரு:துதி)
பனிப்பு=(நடுக்கம்>)அச்சம் (பிங்)
பனிப்பு= நடுக்கத்தோடு கூடிய அச்சம்
உரு------உரும்---------உரும்பு
உர்: கடுமையான ஒலியீடு
உர்>உர்+அப்பு>உரப்பு
உரப்பு=அடரொலி, திரட்டோசை (பிங்:1443)
உரப்பல்- ஒலித்தல் (பிங்:2111), அடரொலி (பிங்:2119)
உர்+ஐ>உரை=பேரொலி, முழக்கம்
(பிங்:2107) & (பரிபா:8:33-35)
உர்>உரர்>உரரு>உரறு=ஒலியீடு
உரற்றல்= ஒலித்தல் (பிங்:2111)
உரறு= பேரொலி செய்தல், முழ்ஙகுதல்
(புறம்:197:5)
உரறு>அரறு>அரற்று= பேரொலியிடு, கதறு
அரற்று+அல்>அரற்றல்= ஆரவாரம்
(பிங்: 2114)
உர்>உரவு=ஒலி
உரவுநீர்= பேரொலியிடும் கடல்
உரவு>அரவு>அரவம்=ஒலி (தொல்.சொல்:51:2)
உர்>உர்+உம்>உரும் (பரிபா:7:82)
உரும்= இடி (புறம்:37:3)
உரும் உருமு = இடி (பதிற்றுப் :30:42)
உருமுதல்= உரறுதல்
உருமுக்குரல்= இடியோசை
உர்>உரு = பேரொலி கேட்டு அஞ்சும் அச்சம்
(தொல்.சொல்:8:7), (திருமுரு:51)
உர்+உம்>உரும்= அச்சம் (தொல்.சொல்: 8:67)
உரும்>உரும்+பு>உரும்பு= அச்சம்
(நற்:112:3-4)
புலம்பு
புல்: ஒலிப்புக் குறியீடு
புல்+அம்பு > புலம்பு = ஒலியிட்டு அழு
புலம்பல்= பிதற்றல்
புலம்பு= அச்சம் (பிங்) (சூடா)
கவலை
கவ்வு: பற்றுகைக் கருத்து முதனிலை
கவ்வுதல்= வாயாற் பற்றுதல் (பொருந: 184)
கவ்வல்>கவல்= துயரம் பற்று (திருக்காளத்தி புராணம் 18:27)
கவ்வு+ஐ>கவ்வை= துன்பம்
கவ்வை>கௌவை
கவ்வல்>கவல்>கவல்+வு>கவல்வு> கவல்பு= கவலை (பொருந:95)
கவலை= பற்றிய ஏக்கம்
கவலை= மனத்துயராய்ந்த அச்சம் (திவா;சூடா;பிங்)
கலங்கல்--------கலக்கு--------கலக்கம்
குல்: பொருந்துகைக் கருத்து வேர்
குல்+அவு>குலவு=கூடு, சேர்
குல்+அம்>குலம்= கூட்டம்
குல்+ஐ>குலை=கொத்து
குல்+அவு>குலவு>கலவு=கூடு
கலவு+இ>கலவி=புணர்ச்சி
கல>கலகு>கலங்கு= கூடு, குழம்பு
கலங்கு= குழம்பு, மனங்குழம்பு
கலங்குதல்= மனங்குழம்புதல்
(நாலடி:59) (குறள்:485)
கலங்கு+அல்>கலங்கல் =அச்சம் (வின்சிலோ) (புறம் 41:16)
கலக்கம் = மனக்குழப்பம், துன்பம்
(குறள்:627), (திருவா:10:6)
(கந்தபு.தாரக:2)
விறப்பு-------------பிறப்பு
வில்:பிரிவுக்கருத்து கிளைவேர்
வில்>வில்+து>விற்று>விறு
விறு>வீறு=பிரிவு
"வீறு வீறியங்கும்" (புறம்:173)
வீறு>வேறு (ஈ>ஏ)= பிரிந்தது, தனிப்பட்டது
வீறுதல்=பிரித்தல், வெட்டுதல்
வீறு>வீறு+அல்>வீறல்=பிளவு, வெடிப்பு
வீறு>பீறு= வெட்டுதல், கிழித்தல்
(பீறு>பூறு. கொச்சை வழக்கு)
வீற்று வீற்று =வெவ்வேறு (களவழி:29)
வீற்று ஆதல்= பிரிவுபடுதல்
வீற்று+இருத்தல்>வீற்றிருந்தல்= வேறுபாடு தெரியுமாறு அமர்ந்திருத்தல்
விற்று=பிரிகை, விள்ளுகை (அரு.நி)
விறு+அகு>விறகு=வெட்டப்பட்ட மரத்துண்டு
விறு+அல்>விறல்=1. தனிச் சிறந்த மேம்பாடு (புறம்:42:12), (தொல்.பொருள்:249.உரை)
விறல்+இ>விறலி= உள்ளக் குறிப்பு புறத்தில் சிறக்க வெளிப்படுமாறு ஆடும் மகள் (தொல். பொருள்:91)
விறு+அப்பு>விறப்பு= நெஞ்சம் துணுக்குற்றாற்போன்று நேரும் அச்சம் (தொல்.சொல்:348)
விறப்பு>பிறப்பு (வகர பகர த் திரிபு)
வெறி----------வெறுப்பு
விறு>வெறு= பிரிவுறு (>பகைகொள்)
(ஒ.நோ: பகு=பிரி. பகு+ஐ>பகை=பிரிவு, மாறுபாடு
வெறு+(த்)+தல்> வெறுத்தல் =பற்றுவிடுதல். (தேவா:310,10)
அறவெறுப்பு>(கடுந்திரிபு>)அருவருப்பு = முற்றவும் பற்றறுத்து எதிராகக் கருதுகை
வெறு+(க்)+கை>வெறுக்கை= 1. அறவெறுப்பு 2. வெறுப்பு
(ஐங்குறு:93)
வெறுத்தல்=பகைத்தல்
வெறுப்பு=-பகைமை
வெறுப்பு =விருப்பமின்மை (குறள்:696)
வெறு+இ>வெறி= நெஞ்சம் துணுக்குறலாகிய அச்சவுணர்ச்சி
வெறித்தல்=அஞ்சுதல், வெருவுதல்
(கலித்:143)
வெறி>வெறி(ப்)>வெறிப்பு
வெறிப்பு>வெறுப்பு=அச்சம் (பிங்)
வெடி
வில்: பிரிவுக்கருத்துக் கிளைவேர்
வில்+அகு>விலகு=பிரி, நீங்கு
வில்>விள்
விள்+அவு>விளவு= நிலம் முதலியவற்றில் விளப்பு (பிங்)
விள்>விள்+இ>விளி=விரிவு
விளிதல்=பிரிதல், இறத்தல்(குறள்:143)
விள்>விள்ளு விள்ளுதல்= பிரிதல், விளத்தல்
விள்+கை> விள்கை= விட்டு அகலுகை
(திவ்.திருவாய்:1:6-5)
விள்+து>விட்டு
விட்டு>விடு= பிரி
விடுதல் = பிரிதல்
விட்டு>வெட்டு (இ>எ)=பிரி, கூறாக்கு
வெட்டு= துண்டு, துண்டிப்பு
வெட்டு>வெடு>வெடு+இ>வெடி=பிளவு
(ஐந்:ஐம்:36:3)
வெடி=(பிளவு>)நெஞ்சம் துணுக்குற நேரும் அச்சவுணர்ச்சி
வெடி=அச்சம் (பிங்), (சூடா)
நாம்------------நாமம்
யா: கருமைக்கருத்து வேர்
யா>யாஅம்>யாம்>ஞாம்>நாம்=அச்சம்
நாம்=அச்சம்
"பேம், நாம் உருமென வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள" (தொல். உரி:69)
நாம்+அம்> நாமம்= அச்சம், பேரச்சம்
"நாம நல்லரா" (அகம்:72:14)
அணங்கு
உல்: வெம்மைக் கருத்து வேர்
உல்+ஐ>உலை
உல்+கு>உற்கு>உற்கு+ஐ>உற்கை=
1. கடைக்கொள்ளி,
2. விண்மீன் கொள்ளி
உற்கு+அம்>உற்கம்= பெரிய விண்வீழ் கொள்ளி
உற்குதல் = விண்ணினின்று எரிகொள்ளி விழுதல் (புறம்:41:4)
உல்+அர்>உலர்= வெப்பத்தினால் காய்வுறு, காய்வுறுகையால் வாடு
உலர்+(ச்)+சி>உலர்ச்சி= வாட்டம், உலர்த்துதல் = உலரச் செய்தல்
உல்>உள்>உண்>உண்+அகு>உணகு>உணங்கு = உலர்
உணங்கு+அல்> உணங்கல் = உலர்த்திய தவசம் (கூலம்) (திவ். திருவாய் :4,6,7)
உணங்கல்=உலர்த்திய வற்றல் (மணி: 16:67)
உணங்கல் = உலர்ந்த பூ (பிங்)
உணங்கு>உணக்கு = உலர்த்து
உணங்கு+அம்>உணக்கம் = வாட்டம்
உணங்கு> சுணங்கு = வாடு
உணங்கு = வாடு, வாட்டு, தாக்கு
உணங்கு> அணங்கு = தாக்கு, தாக்கி வருத்தும் தெய்வப் பெண்(குறள்:1081)
அணங்குதல்= வாட்டுதல் (தொல்.பொருள்:67)
அணங்கு= காமவழியால் தாக்கி ஆடவர் உயிரைக் கவரும் பெண்பேய்
அணங்கு= அணங்கு தாக்குகையால் ஏற்படும் அச்சம்
அடுப்பு
அடு: பொருந்துதற் கருத்து முதனிலை
அடு+இ>அடி
அடி+(ப்)+பு>அடிப்பு= தாக்கம்
அடித்தல் = தாக்குதல், புடைத்தல்
அடிப்பு>அடுப்பு= தாக்கத்தால் ஏற்படும் அச்சம் (சூடா), (பிங்)
பேம்
பேய்>(பேய்ம்)>பேம் = பேய் வழி ஏற்பட்ட அச்சம் (தொல். உரி:6)
பேம்>பேஎம்> = அச்சம் (திவா)
(பேய்து)>பேது= பேய் பிடித்ததால் ஏற்பட்ட மயக்கம் அல்லது வெறி
பேது= மயக்கம், பித்து, வருத்தம், அறியாமை
பேது+ஐ>பேதை= அறிவிலி
பேது>பேந்து = பேய்
பேந்துதல் = மருளுதல்
பேந்தான் = பேய்ப்பந்து -------(ஆட்டம்)
பேது>பேத்து = அச்சம், மயக்கம்
பேது>பீத்து>பித்து = பேய் பிடித்த நிலை
பித்து+அன்>பித்தன்
பித்து+இ>பித்தி
பித்து+அம்>பித்தம்=பித்துபிடித்த நிலை
பித்து>பிது>(பிது+உறு>பிதுறு>பிதறு)>பிதற்ற = பித்து பிடித்தாற் போன்று உளறு, உளறு
பிதற்றுதல் = அறிவின்றிக் குழறுகை (சூடா.நி)
பேஎம்>பேய்>பேய்ம்>பேயம் =fear
பயத்திற்கு அடிப்படை , மனத்திரிபினால் உருவாக்கப்பட்ட பேயே.....
'முற்றும்'
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
05 கும்பம் 2051
(17-02-2020)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக