தமிழறிவோம்:
தேன்
(ப.அருளியாரின் வேரும் விரிவும் நூலிலிருந்து சிறு பகுதியை இங்கே எழுதியுள்ளேன்)
துய்- வெண்மைக் கருத்து வேர்
(வெண்மை=ஒளி)
துய்தூய்தூய்மை
துய்துய்ல்துல்=வெண்மை, ஒளி
துல்+அக்கு=துலக்கு (வெண்மையாக்கு, தூய்மையாக்கு)
துலக்கு+அம்~துலக்கம்=வெளிச்சம்,வெண்மை,தெளிவு
துல்தொல்தெல்~தெள்
தெள்+இ= தெளி
தெளி+உ=தெளிவு=துலக்கம்
தெல்~தென்=(ஒளி)அழகு
("மதனன்றன் தென்னீர் உருவமழிய" தேவா:1155:4)
தென்~தேன்=தெள்ளியது, மண்டி படியப் படிய துலக்கமாய் தோன்றும் தெளிவான இன்நீர்மம், தேன்
"தெல்" என்ற சொல்லிலிருந்தே (தெல்+து) தெற்று என்னும் சொல் பிறக்கும்.
தெற்று+என= தெற்றென (தெளிவாக)
("யானும் தெற்றென உணரேன்" அகம்:58.
"தெற்றென்க மன்னவன் கண்" குறள்:581)
தெற்றுதெறுதேறு~தேறல்=
1. தெளிவு
2.தெளிந்த சாறு ("கரும்பின் இன்தேறலை" திருவா:5:38)
3.தெளிந்ததாகிய தேன் (தேவா:94:3)
4.தெளிந்த கள் ("தேக்கட்டேறல்" புறம்:115)
தேனிறாலாகிய தேன் கூட்டினின்று பிழிந்தெடுக்கப்பட்ட நெய்யப்பொருள்- ஈ,எறும்பு முதலான பல்வேறு உயிரிகளின் உடற்பிழிவுகளையும் சேர்ந்த நிலையிலாக கசடு திரைந்து கிடக்கும் நிலையானது- சில நாட்கள் பொறுத்து, அக்கசடு பெய்து வைக்கப்படிருக்கும் கலப்பொருட்கு அடியுறத் தங்கி மண்டி உறைவெய்தியப்பின் , பயன்பாட்டுக்கு உகந்த நிலையிலாக தெளிவாகத்துலங்கிய வடிவுநோக்கியே, இத் "தேன்" எனும் சொல் தமிழில் தோற்றப்பெற்றுள்ளது என்னும் உண்மையை, நாம் உணர்தல் வேண்டும்.
அறிஞர் சாம்பசிவம் அவர்களின் கூற்றுப்படி, தேனின் வகைகள்:
1.கொம்புத்தேன்
2.கொசுத்தேன்
3.பாகுத்தேன்
4.கதண்டுத்தேன்
5.மலைத்தேன்
6.மரப்பொந்துத்தேன்
7.மனைத்தேன்
8.இறால்தேன்
9.குறிஞ்சித்தேன்
10. சிறுதேன்
11. பெருந்தேன்
12. நறுந்தேன்
மேலும் படிக்க, காண்க:
நூல்: வேரும் விரிவும்.
ஆசிரியர்: ப. அருளி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக