முகநூலில் படித்தது;
கேள்வி:
முயற்சிக்கவும் என்று சொல்வது சரியா?
அல்லது முயற்சி செய்யவும் முயலவும் என்று தான் சொல்ல வேண்டும்?
அப்படி எனில் கீழுள்ள சொற்கள்?
அனுபவிக்கவும்
அருள் பாலிக்கவும்
அன்பே இறுக்கமாய் என்னை அணைக்கவும்
தருவிக்கவும்
எடையை குறைக்கவும்
செ.இரா.செல்வகுமார் அவர்களின் பதில்:
///முயற்சிக்கவும் என்று சொல்வது சரியா?///
தவறு.
முயல் என்பது வினை. முயல்கின்றேன், முயலவும் முயலவேண்டும் என்றெல்லாம் வரலாம்.
முயற்சி என்பது பெயர்ச்சொல். உணர்ச்சிக்கிறேன். வளர்ச்சிக்கிறேன் என்றெல்லாம் சொல்வதில்லை.
உணர், வளர் என்பன வினைச்சொற்கள்.
நீங்கள் தந்துள்ள சொற்கள் பல விதமானவை!!
அணைக்கவும் என்பது அணை > அணைக்க > அணைக்கவும்
தருவி என்பது பிறவினை. தா என்பது தன்வினை.
தருவிக்கவும் என்பது தருவி என்னும் பிறவினையில் இருந்து பிறந்தது. வெறும் -க்கவும் என்பதை மட்டும் பார்க்காதீர்கள். வினை என்ன வினைவடிவம் என்ன
என்று பாருங்கள்.
முயற்சி என்பது வினை அன்று. பெயர்ச்சொல்.
குறை என்பது வினையும் ஆகும் பெயர்ச்சொல்லும் ஆகும். ஆனால் முயற்சி அப்படியானது அன்று.
உணர்ச்சிக்கவும் வளர்ச்சிக்கவும் என்பீர்களா? பயில் > பயிற்சி (பெயர்ச்சொல்). பயிலவும், பயிற்சி செய்யவும் என்பன சரி. பயிற்சிக்கவும் என்பது தவறு இதுபோலவே முயற்சிக்கவும் என்பதும் தவறு.
உயர் என்பதில் இருந்து உயர்ச்சி என்றும் ஒரு பெயர்ச்சொல் உண்டு. இதனை உயர்ச்சிக்கிறேன் எனலாமா? கூடாது. உயர்கிறேன். உயரவும், உயரவேண்டும் என்றெல்லாம் சொல்லலாம். பெயர்ச்சொல்லில் இருந்து இப்படி ஆக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக