அறுவடை செய்கிறார்கள்!
அறுவடை செய்கிறார்கள்! - இங்கே அறுவடை செய்கிறார்கள்!
திருவடை யாமலே திண்ணையில் வீதியில்
தெருவோரச் சாய்க்கடை புழக்கடை நடுவினில்
எருவடை குழிகளில் ஈக்களாய், புழுக்களாய்
இறக்காமல் மொய்க்கின்ற ஏழ்மையைச் சொல்லியே,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்!
ஊருக்கே இராப்பகல் உழைப்பதாய்ச் சொல்லி
உண்மைக்கு பூட்டிட்டே உயர்மாடி கட்டித்
தூருக்குத் தோண்டியாய் உதவுவோம் என்றே
தொண்டைக்கு மருந்திட்டு மாநாடு கூட்டி,
அறுவடை செய்கிறார்கள்- இங்கே அறுவடை செய்கிறார்கள்!
கட்சிகள் தலைவர்கள் பெயர்சொல்லிச் சொல்லிக்
கண்ணீரும் இருசொட்டு வழிவதாய்த் துடைத்து,
மெச்சிடும் திட்டங்கள் பலதீட்டி னாலும்
மீளாத ஏழ்மைக்கு மெப்பாக பேசி,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்!
உழைப்பாளர் தொழிலாளர்க் குழைக்கின்றோம் என்றே
ஒருகோடித் தலைவர்கள் கத்தினார் நன்றே!
பிழைப்பவர் அவர்களா, இவர்களா? - கண்டோம்!
பீற்றலும் கந்தலும் அற்றதா? பேச்சில்;
அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1967

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக