நூலைப்படி
(பாவேந்தர்பாரதிதாசன்)
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப்)
அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும் படி
(நூலைப்)
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்
புலமை வருமே என் சொற்படி
(நூலைப்)
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி எப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி
(நூலைப்)
குயில்01/01/1948.
(பாவேந்தர்பாரதிதாசன்)
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப்)
அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும் படி
(நூலைப்)
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்
புலமை வருமே என் சொற்படி
(நூலைப்)
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி எப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி
(நூலைப்)
குயில்01/01/1948.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக