சனி, 25 ஏப்ரல், 2020

தெய்வம்


(மேலும் அறிய படியுங்கள்,
நூல்: வேரும் விரிவும் 2
ஆசிரியர் : ப.அருளி)

                                                   தெய்வம்

துய் - பொருத்துதல் கருத்து மூலவேர்

துய்தய்தை = பொருத்து
தய்தெய்தேய் = பொருத்து, உராயு
தேய்கல் = உரைகல்
தேய்தேய்தீ = உரசலினால்
                             உண்டாகும் நெருப்பு
தீதீவுதீவம் = தீவிளக்கு
      (செம்பொன் தீவங்களும் மலிதர)
இத் தீவம் என்ற சொல்லினின்று வடபால் மொழிகளில் ஏற்றப்பட்டுள்ள சொற்கள்.

தீப/தீய/தேவ்/திவா/தியா/தீவ

தீயை வணங்கிய மாந்தன், தீயின் செந்நிற அடிப்படையில் கடவுளை உருவாக்குகின்றான்.

அர் = சிவப்பு கருத்து மூலம்
அரக்கு = செம்மெழுகு
அரத்தம்= குருதி
அரன் = சிவன் (செந்நிறத்தவன்)

செய்:(சிவப்பு நிறக் கருத்தின்
             முதனிலை)
செய்செய்ம்செம்~செம்மை=சிவப்பு
செய்~சேய்=செங்குருதியோடு
          வெளிவரும் பிறந்த குழந்தை
சேய் =சிவந்தவன்
சேயன் ~சேயோன்
சேயோன் =சிவன்
சேய்ந்தோன்சேய்ந்தன்சேந்தன்=சிவன்

(சிவந்தவன் என்ற பொருள்பட்ட சேய் என்ற சொல் சிவனை குறித்து வழங்கிவந்த போது, அதற்குரிய மற்றொரு பொருளான குழந்தை என்பதனோடும் அதனை பிறழ எண்ணிய பிற்கால தமிழர், அச்சிவனின் மகனான குறிஞ்சி நிலக்குமரனை நேர்நிறுத்தினர்)

அரன் என்பதன் பெண்பால் கடவுட் பெயர் அரி. இரண்டும் ஒன்றுதான் வேறுவேறில்லை என்ற பொருளில் அரியும் அரனும் ஒன்று என்ற பழமொழி உருவாகியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அரன்~ ஹரி (சமற்கிருதம்)

அரன் என்ற சொல்லின் திரிபான "ஹர" என்பதை அரி (அழி) என்னும் வடமொழிக்கண் சென்று திரிபடைந்த ஹர என்ற அழித்தற் பொருட்சொல்லோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஆகையாலே "சிவன் அழித்தல் கடவுள்" என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தேய்தீய்தீ
தேய்தேய்வுதெய்வு =தீ
தெய்வம்=தீ, நெருப்பு கடவுள், சிவன்

கழக(சங்க) கால இலக்கியங்களுள்
நூற்றுக்கும் மேற்பட்டு பரந்து நிற்கும் நிலைத்த தெளிந்த பதிவுகள் தமிழக தெய்வத்திற்கு உள்ளன. மேலும் தெய்வக்கம்மியன்,தெய்வக்காப்பு,தெய்வச்செயல்,தெய்வத்தீர்வை,தெய்வப்பிறவி,தெய்வப்பவகை என்று பல்வேறு கூட்டுச்சொற்கள் பயில்வுறுகின்றன.

தெய்வம்~ தெய்வ (சமற்கிருதம்)
தேய்வுதேவுதேவன்

(கழககால பெயர்கள் சில: இளந்தேவனார், பூதன் தேவனார், பெருந்தேவனார்,நாகன்தேவனார்,வாயிலோன் தேவன்)

வடபால் மொழிகளில் தேவன்:
பாலி=தேவ
கரோட்டி=தேவ
பிராகிருதம்=தேவ,தேய,தேவய
அசுக்கன்=தேய்
வைகலி=தே
அவெசுத்தன்=தயேவ்ய
கலசா=தேவ
லகண்டா=தியோ
பஞ்சாபி=தியு
சான்சாரி=தியே
குமேனி=த்யோ
இந்தி=தேவ்
குசராத்தி/மராத்தி=தெவ்

தேவன்~ தேவி (இறைவி)

(சமற்கிருதத்திலும் இச்சொல் திரிபடையாமல் உள்ளது என்பதை நோக்குக)

பாலி/பிராகிருதம்=தேவி
பஞ்சாபி/மார்வாரி=தெயீ
குமேனி=தே
கரோட்டி=தெவி

அரசியை சுட்டவும் தேவி என்ற சொல் பயன்பட்டுள்ளது. அரசியை சுட்டுவதற்கு வடபால் மொழிகளில் சொற்கள்:

பிராகிருதம்=தேவி
ஒரியா=தெயீ
மராத்தி=தெய்

தெய்வு என்னும் தெய்வத்தை குறிக்கும் சொல் கிரேக்க, இலத்தீனத்திலும் மிகநுண்ணிய மெலுக்கான திரிபு நிலையில் பதிவெய்தியுள்ளது.

தெய்வு:
Greek=theos
Latin= deus, deiwos
English=theos
(thoelogy, athiesm, pantheon)

deus~deiwos~divus (Latin)
dei gratia = by god's grace

theos ~thestes (Greek)
deites (Latin) deite (old french)
Deity (english)
Devin (old french)~ devine (middle english)~divine (english)

நம் தெய்வமும் தேவனுமே உலகெங்கும் மக்கள் வாயில் படிந்துள்ளனர். இத்தெய்வக்கருத்து நம் தமிழர்கள் படைத்து வழங்கியது.
ஆனால் நாமோ "தேமே" என்று இருக்கின்றோம்.

(தெய்வமே~தேமே)

"தெய்வமே நீயே பார்த்துக்கொள்!"
என்ற பொருளில் திரிபடைந்த தேமே என்ற சொல் , 1. கடவுளே துணையாக,
2. பிறர் செயலில் தலையிடாமல் 3. எதிலும் ஈடுபடாமல் வெறுமனே இருத்தல் என்றவாறு பயன்படுத்தப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக