சனி, 25 ஏப்ரல், 2020

ஏகார வரிசை

தமிழ் அறிவோம்:

(தென்மொழி இதழில் இருந்து எடுத்தது )

ஏகார வரிசை:

ஒரு சொல் ஒரு பொருள்:

ஏ -  ஐந்து வினா எழுத்துக்களுள்   
         ஒன்று (ஏன்? ஏது?)
ஏ  - அம்பு
ஏ  - எய்தல்
ஏ  - ஏவு
ஏகல்  - ஏகுதல்= போதல்= செல்லுதல்
ஏக்கரவு - ஏக்கம்
ஏக்கறுதல்  - அவாவினால் தாழ்ந்து
                          நின்றல்
     (குறள்: உடையார் முன்
       இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்)
ஏசல்  - வைதல் (திட்டுதல்)
ஏடகணி - ஓலையின் நார் (ஏடு=ஓலை,
                   அகணி=நார்)
ஏண் - உயரம்
ஏணி   - ஏறிச்செல்ல உதவும் கருவி
ஏணை - உயரத்தில் கட்டித்தொங்க
                விட்டுள்ள தொட்டில்
ஏதம்  - குற்றம்
ஏந்தல்  - நீர்நிலை. (நீரினை நிலம்
                 ஏந்தியிருப்பது)

ஏமம்  - பாதுகாப்பு
ஏமருதல்  - பாதுகாக்கப்படுதல்
ஏமாப்பு   - அரணாதல் (குறள்:
                  எழுமையும் ஏமாப்புடைத்து)
ஏமாற்றம்  -  மனக்கலக்கம்
ஏம்   - ஏமம் = பாதுகாப்பு
ஏயது   - ஏற்புடையது
ஏரி   - நீர்நிலை (ஏர் =அழகு)
ஏல் (ஏலல்)  - ஒப்புக்கொள்ளுதல்
ஏவலாளர்   - பணியாளர்
ஏழிசை  - ஏழு வகையான இசை (குரல்,
                  துத்தம்,கைக்கிளை,உழை,
                   இளி,விளரி,தாரம்)
ஏழ்   - ஏழு
ஏறக்கட்டுதல்-உயரமாகும்படி குவித்தல்
ஏறு - காளை
ஏறன்  - சிவன் (ஏறு ~ஏறன்)
ஏறாண்முல்லை  -  ஏறு
               +ஆண்+முல்லை. ஏறு (காளை)
               போன்ற ஆண்மையுடைய
                வீரக்குடியின் ஒழுக்கத்தைப்
                புகழும் புறத்துறை
ஏறுபொழுது - முற்பகல் (கதிரோன் 
                      மேலெழும்பும் பொழுது)
ஏறெடுத்துப் பார்  - தலையை உயர்த்தி
                                      பார்
ஏற்கை- ஒப்புக்கொள்வது(ஏல்~ஏற்கை)
ஏற்றம்- நீர் இறைக்கும் கருவி
ஏற்றை  - ஆண்சீயம் (மடங்கல்)
        பெண்சீயத்தின் மேல் ஏற்றுவதால்
        ஏற்றை எனப்பட்டது (ஏறு- ஏற்றை)
ஏனோர்  - மற்றோர்


ஒரு சொல் பல பொருள்கள்:

ஏட்டை - வறுமை,இளைப்பு,அவா,
              துன்பம்,எருமை, எருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக