தமிழர் இழந்த நிலம்-2
தேவிகுளம்-பீர்மேடு தட்டிப் பறிக்கப்பட்ட கொடுங்கதை...
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
காலையில் யதேச்சையாகத்தான் ஆரம்பித்தேன்...இந்த ஓய்வு நேரத்தில் நம்முடைய விவசாய சங்க உறவினர்களுக்கு ஒரு வரலாறை சொல்லிவிட வேண்டும் என்று மனசு துடித்தது...
ஆனால் எனது சிந்தனையில் போன்சாய் மரங்களாக இருந்த நினைவுகள், தம்பிமார்களின் கேள்வியில்... ஆல மரமாய் எழுந்து நிற்கிறது.
தேசிய,
திராவிட அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளில் ஏதோ அருகருகே இருப்பது போல வந்து விழும் தேவிகுளமும், பீர்மேடு ஒன்றும் அருகருகே இல்லை.
பீர்மேட்டிலிருந்து தேவிகுளத்திற்கு செல்வதற்கு நீங்கள் வண்டிப் பெரியாறு,குமுளி, நெடுங்கண்டம், பூப்பாறை வழியாக 117 கிலோமீட்டரை கடக்க வேண்டும்.
அதோடு பழைய தமிழக எல்கை முடியவில்லை. தேவிகுளத்திலிருந்து மூணாறு நகருக்கு 8 கிலோமீட்டர். அங்கிருந்து சட்டமூணாறு வழியாக மறையூருக்கு 42 கிலோமீட்டர் பயணித்து அங்கிருந்து 13 கிலோ மீட்டர் பயணித்து சின்னாறு வனத்துறை சோதனைச் சாவடியை அடைந்தால்தான் பழைய தேவிகுளம் பீர்மேடு எல்கை முடிவடையும்.
அதாவது பீர்மேட்டில் ஆரம்பித்து தேவிகுளம் எல்லை வரையிலான பயண தூரம் மட்டும் 180 கிலோ மீட்டர்கள்.
நேர் வழியான இந்த 180 கிலோமீட்டர்கள் போக... மூணாறில் இருந்து டாப்ஸ்டேஷன் வழியாக வட்டவடை,கோவிலூருக்கு ஒரு ஐம்பத்தாறு கிமீ என நீளுகிறது பழைய தமிழகம்.
தென்மலை சோத்துப்பாறை குண்டுமலை என மூணாறு- உடுமலை சாலையிலிருந்து சற்று பிரிந்து வலது புறம் மேலே ஏறினால் அது ஒரு 22 கிலோமீட்டர்.
மூணாறில் இருந்து அடிமாலி செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் வரை பழைய தமிழகம் தான்.
வளத்திற்கு சற்றும் பஞ்சமில்லாத வளம் கொழிக்கும் பூமி.
டாடா,
ஏவிடி,
கன்னிமாரா,
போப்ஸ்,
ஹாரிசன் மலையாளம் லிமிடெட்,
என ஆளையே முழங்கும் பெரிய தேயிலை தோட்ட கம்பெனிகளும், துண்டு துக்கடா கம்பெனிகளும் நிறைந்து கிடக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாவில்.
இந்த கம்பெனிகளில் பண்ணையார் ரத்தன் டாடா.KDHP (kannan Devan hills plantation) என அழைக்கப்படும் டாட்டா கம்பெனியினுடைய மொத்த பரப்பு மட்டும் 48,000 ஹெக்டேர்கள்.
இதற்கு அடுத்த இடத்தில் ஏ வி டியும், அதற்கு அடுத்த இடத்தில் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட்டும் வருகிறார்கள்.
எத்தனை கம்பெனிகள் வந்தாலும் தேயிலையை கொழுந்தாக எடுப்பதிலிருந்து, தேயிலையை பொட்டலமாக அனுப்புவது வரை அத்தனையையும் அச்சுப்பிசகாமல் செய்வது பச்சை தமிழர்கள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வருடத்தில் 6 மாதங்கள் மைனஸ் டிகிரி குளிரில் இருந்த மூணாறு மலையகத்தில் பணிசெய்ய... தமிழனைத் தவிர வேறு எவனுக்கும் ஆண்மையும், நெஞ்சுரமும் இருந்ததாக தெரியவில்லை.
இத்தனை பெரிய பரப்பை, எப்படி போகிறபோக்கில் கே.எம். பணிக்கரின் காலடியில் காமராஜராலும், தந்தை பெரியாராலும் தள்ளிவிட முடிந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கிறது என்று உதறித் தள்ளிவிட, தேவிகுளமும் பீர்மேடும், கொடுங்கையூர் குப்பை மேடு அல்ல.
அந்த மண்ணினுடைய வளத்தை மலையாளிகள் கண்ணுற்ற அளவிற்கு, நம்மவர்கள் கண்ணுறாததின் விளைவு, தேவிகுளம், பீர்மேட்டை தமிழகம் இழந்தது.
இன்றைக்கு மொத்த மலையாள நாடும் குடியேறும் இடமாக தேவிகுளமும், பீர்மேடும் மாறிவிட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலேயே, மறையூர் பகுதியில் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள்.
காந்தலூர், கீழாத்தூர், காரையூர், மறையூர், கொட்டகுடி என்கிற ஐந்து தமிழர் கிராமங்களும், இன்றளவும் மறையூர் அஞ்சுநாடு என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது..
அங்கு உற்பத்தியாகும் வெல்லம் கேரளா முழுக்க ஏற்றுமதியாகும் அளவிற்கு விவசாய வளம் செறிந்த பூமி. ஆனால் அந்த காந்தலூரிலிருந்து எங்கேயோ இருக்கும் ஆலுவா விற்கு கோட்டயம் வழியாக தனியார் பேருந்துகள் இயங்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.
பி பி கே
பி எம் எஸ் எனும் தனியார் பேருந்துகள் இன்றளவும் இயங்கி வருகிறது. அதனுடைய நோக்கம் வெறும் போக்குவரத்து மட்டுமல்ல.
எப்படியாவது மலையாளிகளை மறையூர் பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்கிற வெறி தான் அதற்கு காரணம்...
அதுபோல கேரளாவின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் எர்ணாகுளத்தில் இருந்து...எங்கேயோ இருக்கும் டாப் ஸ்டேஷனுக்கு அருகாமையில் உள்ள கோயிலூருக்கு கேரள அரசு பேருந்து வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.
தமிழர்கள் ஆதிக்கம் பெற்று விடக்கூடாது,,, மறையூரும் வட்டவடையும், கோவிலூரும் முழுமையாக தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்பதற்காகவே, இந்தப் பேருந்துகள் மலையாளிகளை பத்திரமாக தமிழர் பூமியில் கொண்டு வந்து இறக்கியது.
அவர்களும் இன்றைக்கு நமக்கு சரிசமமாக வாழத் தலைப்பட்டு விட்டார்கள்.தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த மறையூர் பஞ்சாயத்து இன்றைக்கு மலையாளிகளுடைய கைகளுக்கு போய்விட்டது...
தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த கேரளாவின் மிகப்பெரிய பஞ்சாயத்தான வண்டிப்பெரியாறு, தமிழர் கைகளிலிருந்து மலையாளிகளுடைய கைகளுக்கு மாறி ஆண்டு 15 கடந்துவிட்டது.
இடுக்கி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏலக்காய் நகரமான வண்டன்மேடு, முன்னொரு காலத்தில் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி கொடி கட்டி பறந்த ஊர்.மார்ஷல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் நடைபயின்ற இடுக்கி மாவட்டத்து ஊர்களில் வண்டன்மேடும் ஒன்றாக இருந்தது...
இன்று நிலைமை மாறிவிட்டது.
வண்டன்மேட்டின் முதலாளிகள் மலையாளிகள்...
முதலாளிகளாக இருந்த தமிழர்கள் கூலிகள்...
பட்டம் தாணுபிள்ளை,
கே.எம். பணிக்கர்,
காமராஜர்,
ஈ.வெ. ராமசாமி நாயக்கர்,
தேவிகுளத்தின் முதல் தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கணபதி,
ரோசம்மாள் புன்னூஸ்,
பிரிட்டிஷ் நயவஞ்சகர்கள்,
கேரள காங்கிரஸ் துரோகிகள்...
மொழிவழி பிரிவினை குழுவின் அறிக்கையை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்ட வடநாட்டு மார்வாடிகள்...
என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது விவாதிப்பதற்கு...
விவாதிப்போம்...
தேவிகுளம் பீர்மேடு மட்டுமல்ல... கிட்டத்தட்ட 1400 சதுர கிலோமீட்டர் பரப்பை தமிழகம் கேரளாவிடம் அனாதியாய் இழந்திருக்கிறது...
வரலாறு நீளும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக