செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தேனீரா? தேநீரா

                                                     தேனீரா? தேநீரா

Tea என்ற ஆங்கில சொல்லின் மூலம் சீன மொழியே. Tea சீன மொழியில் Tay  எனப்பட்டுள்ளது. அதுவே மலையக மொழியில் Te  என்று திரிந்துள்ளது. Te + இலை என்பதுதான் தேயிலையாக தமிழில் புகுந்துள்ளது. இதனை கொழுந்து இலை என்று தமிழில் சுட்டியுள்ளார். தேயிலை நீரை
தேத் தண்ணீர் என்றும் மக்கள் அழைத்துள்ளனர்.
இந்த தேத் தண்ணீர் என்று சொல்லைத்தான்,   அருளியார் தேனீர் என்று மொழி பெயர்த்துள்ளார்.
அது பார்ப்பதற்கு தேன் கலந்த நீரைப்போல் இருப்பதால் , தேனீர் என்று பெயர்த்துள்ளார்.  தேனீருக்கு, கொழுந்து நீர் என்று வேறொரு பெயரும் உண்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக