சனி, 25 ஏப்ரல், 2020

இந்திக் கோட்டையை

இந்திக் கோட்டையைச் சுக்குநூ றாக்குக!
===================================
இந்தி என்னும் இரும்புக் கோட்டையை
இடித்துச் சுக்குநூ றாக்குக! அங்கே
செந்தமிழ்க் கோட்டையைச் செழிப்புடன் எழுப்புக!
சிறுமைச் சாதி மதங்களை அகற்றுக!
சொந்தமென் றொருநிலம் தமிழருக் காக்குக!
சோர்வையும் அடிமைத் தனத்தையும் விலக்குக!
இந்தவோர் கொளகையில் தமிழினம் இளைத்தால்
எந்தமிழ் இருக்கும்; இனமிருக் காதே!
=======================================
- ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1982
=======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக