தமிழர் இழந்த நிலம்-3
தேவிகுளம்-பீர்மேடு பறிபோன கொடுங்கதை...
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
வன வளம் மிகுந்த தேவிகுளம் பீர்மேட்டை கேரளாவின் பக்கம் தள்ளிவிட்டதில் பலருக்கு பங்கு இருக்கிறது.நம்முடைய பட்டறிவுக்கு அவர்களெல்லாம் பிம்பமாக எழுப்பிக் கட்டப்பட்டிருப்பதால்,,,
பகிரங்கமாக அவர்களைப் பற்றி யாரும் விவாதிக்கத் தயாராக இல்லை.
அதையும் மீறி
வெளிப்படையாக
விவாதித்தோம் என்றால், மாய பிம்பங்களும், மாயக்கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்து சிதறும் என்பதில் ஐயமில்லை.
நம்முடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், மொழிவழி பிரிவினையில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு, கிட்டத்தட்ட 70,000 சதுர கிலோமீட்டர்களை, அண்டை மாநிலங்களுக்கு தள்ளிவிட்டது இன்னார்தான் என்று நம்மால் குற்றம்சாட்ட முடியாததுதான்...
மேற்கத்திய நாடுகளில் வரலாற்றை அச்சுப் பிசகாமல் எழுதுவார்கள்.1765-1783 காலகட்டங்களில், தன் தாயகமான இங்கிலாந்தை எதிர்த்து புரட்சி செய்த ஜார்ஜ் வாஷிங்டனுடைய அமெரிக்க புரட்சி, புள்ளி விவரத்தோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.1789 ல் நடந்த லூயி மன்னர்களுக்கு எதிராக நடந்த பிரஞ்சுப் புரட்சியைப் பற்றியும், காலவரிசைப்படி உங்களால் வாசிக்க முடியும்.
ஆனால் இந்த மண்ணில் பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது யார் என்பதிலேயே ஆயிரக்கணக்கான குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருக்கிறது.
1751 ல் உருவிய உடைவாளோடு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக களத்தில் நின்ற,நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவரை, நரித்தனமாக பின்னுக்குத்தள்ளி, 1857 ல் நடந்த சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போராக வரிந்துகட்டி அறிவித்திருக்கும் வட வர்களின் வரலாற்றுத் திருட்டால்... விக்கிப்பீடியாவில் வரலாற்றைத் தேடும் லட்சணத்தில்தான் இருக்கிறது நம்முடைய வரலாற்று அறிவு.
11- 10- 1955 ம் நாளன்று தினத்தந்தியில் ஒருவருடைய செவ்வி (பேட்டி) வந்திருந்தது...
"தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு தமிழர்கள் தொழிலுக்காகத்தான் வந்தார்களே தவிர, நிலம் மலையாள நாட்டை சேர்ந்தது என்று சர்தார் பணிக்கர் என்னிடம் சொன்னார், நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்" என்கிறார் நம்மால் பெரியார் என்று இன்றுவரை கொண்டாடப்படும் ஈ.வெ.ரா அவர்கள்.
கே.எம்.பணிக்கர் என்கிற அந்தக்கால மலையாளி சொன்னதை இன்று வரை அரசிதழில் ஏற்றிவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது கேரள மாநில அரசு.
கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு முன்னால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்ற தமிழர்கள், இன்றளவும் மலையாள அரசின் பதிவிதழில்,
Floating Labour என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கத்திய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழ் உறவுகள், இன்று அந்த நாட்டின் பிரஜை ஆகிவிட்ட நிலையில், 140 ஆண்டுகளுக்கு முன்னால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு சென்ற பச்சைத் தமிழர்கள், இன்றளவும் வந்து போகிற கூலிக்காரர்களாகவே காட்சியளிக்கிறார்கள்... மலையாள நாட்டின் கண்களுக்கு.
இன்றும் இடுக்கி மாவட்டத்தில் வாழும் ஒரு தமிழன், தனக்கு பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டுமானால்,1956 க்கு முன்பு அவனுடைய முன்னோர்கள் வாங்கிய இருப்பிடச் சான்றிதழ் வேண்டும். அது இல்லாமல் அவனால் பிறப்புச் சான்றிதழை பெற முடியாது.
உலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த கேரள நாட்டில் வாழும், ஒரு தமிழ்க் கூலித் தொழிலாளியின் நிலை இதுதான்.
விடயத்திற்கு வருகிறேன்...
கே .எம். பணிக்கர் எங்கள் நிலம் என்று என்னிடம் சொன்னார், நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னவர் அன்றைக்கு முதலமைச்சராக இல்லை... ஒரு இயக்கத்தின் தலைவர் அவ்வளவே.
திரு கே.எம்.பணிக்கர் அவர்கள், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த திரு காமராஜர் அவர்களை சென்று சந்திக்காமல், எதற்காக திரு ஈ.வெ.ரா அவர்களை சந்தித்தார் என்கிற கேள்வி நெருப்பாய் என் நெஞ்சில் எழுந்து நிற்கிறது.
திரு பசல் அலி தலைமையிலான மொழிவழி பிரிவினை குழுவின் ஒரு உறுப்பினரான திரு கே.எம். பணிக்கர்,எந்த அடிப்படையில் திருச்சிக்கு வந்து, ரத்னவேல் தேவர் மாளிகையில் தங்கியிருந்த, திரு ஈ வெ ரா அவர்களை சந்தித்தார் என்கிற இன்னொரு கேள்வியும் மானத்தமிழர் வரலாற்றில் தொக்கி நிற்கிறது.
திரு கே.எம்.பணிக்கர் எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... அவருடைய கூற்றுக்கு விடைபகர வேண்டிய தேவை, திரு ஈ வெ ரா அவர்களுக்கு எங்கே வந்தது.
பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, பாண்டிய மரபைச் சேர்ந்த பூஞ்ஞார் அரசு இன்றைய கோட்டயத்திற்கு அருகாமையில் உருவாக்கப்பட்டாயிற்று.
இன்றைய ஈராட்டுப்பேட்டை,
பாலா,
காஞ்சிரப்பள்ளி,
முண்டக்காயம்,
பாம்பனார்,
பீர்மேடு
வண்டிப்பெரியாறு
குமுளி
கூடலூர்
கம்பம் உத்தமபாளையம் வரை
பூஞ்சார் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிதான்.
இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மூணாறு சுற்றுவட்டாரம் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை காடுகளை, பிரிட்டிஷ் வியாபாரியான தாமஸ் மன்றோ என்பவன் 1870 காலகட்டங்களில் குத்தகைக்குப் பெற்றது,திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமல்ல, பூஞ்சார் சமஸ்தானத்திடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அப்படி இருக்கையில் ஒரு தமிழ் மரபைச் சார்ந்த அரசன் ஆளக்கூடிய பூமிக்குத்தான்.... தமிழர்கள் 1870 காலகட்டங்களில் சென்றிருக்கிறார்கள். பிறகு எப்படி அவர்கள் Floating Labour ஆவார்கள்.
இதுபோக வரையாடுகளின் சொர்க்க பூமியான இராஜமலை அருகே இருக்கும் இடமலைக்குடியில் வாழும் முதுவான்கள் என்பவர்கள் ஆதித்தமிழர்கள் என்கிறது வரலாறு.எங்களுடைய ஆய்வுப்படி கிட்டத்தட்ட 600 ஆண்டு கால வரலாறு இடமலைக்குடி முதுவான்களுக்கு இருக்கிறது. அப்படியானால் தமிழர்கள் இடுக்கி மலையகத்திற்கு சென்ற காலத்தை,நேற்றுப் பிறந்த கே.எம். பணிக்கரால் ஒரு நொடியில் கணித்து விட முடியுமா என்ன..?
எந்த அரசுப் பதவியிலும் இல்லாத திரு ஈ.வெ.ரா அவர்கள்,,,தேவிகுளம் பீர்மேடு கேரளாவிற்கு சொந்தமானது எப்படியென்று எந்த அடிப்படையில் தீர்மானித்தார்...
கரும வீரர் காமராஜர் அவர்கள் தென் எல்லை போராளி திரு பி.எஸ். மணி அவர்களிடம் "குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது" என்று போகிற போக்கில் கூறிய கூற்றுக்கு பின்னால் இருப்பது திரு ஈ வெ ரா அவர்களா..
அல்லது பண்டித நேரு வா...
வரலாறு நீளும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக