குடமூக்கு
(யாரோ ஒருவரின் வாட்சப் பதிவு இது )
வடமொழியாளர்களின் தவறான மொழிபெயர்ப்பால் தன்னிலை இழந்த ஊர்ப்பெயர்களில் ஒன்று கும்பகோணம்.
'குடமூக்கு' என்பது இவ்வூரின் பழைய பெயர் என்பதை அறிவீர். 'குடக்கு' மேற்கையும், 'குணக்கு' கிழக்கையும் குறிக்கும் என்பதும் அறிந்தது. மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்த ஊர் என்ற நிலையில் குடமூக்கு தோன்றி யிருக்கலாம். கிழக்கு வாசல் என்ற பொருளில் உருவானது, அடிகளார் ஆனபின் இளங்கோ தங்கியிருந்த 'குணவாயிற்கோட்டம்'.
ஆனால் வடமொழியாளர்கள் மேற்கு எனப் பொருள்தரும் குட(ம்)த்தைக் கும்பம் ஆக்கிவிட்டார்கள். மூக்கை (angle) கோணமாகவும். 'கோணம்' என்னும் விகுதி பெற்று பல இடப்பெயர்கள் கேரளத்தில் உண்டு ( மேக்கோணம், பௌடிக்கோணம், காரக்கோணம்...) சென்னையில் அரக்கோணம்.
எப்படியோ குடமூக்கு... கும்பகோணம் ஆயிற்று. அதனால் என்ன என்றொரு கேள்வி இப்போது எழலாம்.
மலையாளத்தில் கும்பகோணம் என்றால் 'பெரும் ஊழல்' என்று பொருள். அரிசி கும்பகோணம், ராஃபேல் கும்பகோணம், 2ஜி கும்பகோணம் என்றெல்லாம் சொல்வார்கள். கும்பகோணம் (ஊழல்) எப்படி வந்தது? நதிமூலம் ரிஷிமூலம்தான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக