சனி, 25 ஏப்ரல், 2020

சி.வை.தாமோதரனார்

( திரு. Sankaran Nsk அவர்களின் முகநூல் பதிவு இது)


                              யாரிந்த சி.வை.தாமோதரனார்
                             **********************************

#சென்னைபல்கலைக்கழகத்தின்
#முதல்பட்டதாரி
என்கிற சிறப்புக்கு உரியவர் இவர்தான்.

#வீரசோழியம் (1881),

 #தணிகைப்புராணம்,
#இறையனார்_அகப்பொருள் (1883),

 #தொல்காப்பியப்_பொருளதிகாரம் (1885),

#கலித்தொகை (1887),

#இலக்கண_விளக்கம்,
#சூளாமணி (1889),

#தொல்காப்பியஎழுத்ததிகாரம் (1891),

#தொல்காப்பியசொல்லதிகாரம் (1892) என்று எண்ணற்ற நூல்களை பதிப்பித்தவர் இவரே.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் உ.வே.சா எண்ணற்ற நூல்களை பதிப்பித்தார் ஆனால் சி.வை.தாமோதரனார்
அதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே நூல்களைப்பதிப்பித்தவர்.

#பிறந்தது.

யாழ்ப்பாணத்தின்
சிறுப்பிட்டி ஊரில்.

இவர் தன் இருபதாவது வயதில் நீதிநெறி விளக்கம் நூலைப் பதிப்பித்தார்.

நெடுங்காலத்துக்கு முன்னரே தொலைந்து விட்டதாகக் கருதப்பட்ட
தொல்காப்பியம்
சொல்லதிகாரத்தைத்
தேடி தேடி அலைந்து,
எண்ணற்ற சுவடிகளைக் கண்கள் இடுக்கிப்படித்து,
செல்லரித்தவற்றையெல்லாம் செப்பனிட்டு வெளியிட்டார்.

ஆறுமுக நாவலர் தொகுத்து பிழை திருத்திய பின்னேர் வெளிவந்தது. அதே போல எழுத்து மற்றும் சொல் அதிகாரங்களையும் பதிப்பித்தார்.

உ.வே.சா சீவகசிந்தாமணியை இரண்டு முறை பிழை சரிபார்த்து வைத்திருந்த பொழுதும் அதை பதிப்பிக்க காலம்கருதிக்கொண்டு இருந்தார். அவரை அந்நூலை பதிப்பிக்கும் படி ஊக்குவித்தது சி.வை.தாமோதரனார்தான். அதனாலே அந்நூல் தமிழருக்கு கிடைத்தது. அதனை தமிழ்தாத்தாவே அந்நூலின் முன்னுரையில் உறுதிசெய்கிறார்.

தமிழ் இலக்கணம் படிக்கிற பொழுதெல்லாம் இவரை நினைவில் நிறுத்துவோம்.
மாணவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக