சனி, 25 ஏப்ரல், 2020

தமிழினத்தின் இற்றை நிலை

தென்மொழி இதழில் வந்துள்ள ஆசிரியவுரை:
சுவடி :51                         ஓலை : 8

                            தமிழினத்தின் இற்றை நிலை

          ஈராயிரம் ஆண்டுக் காலமாகவே தமிழினம் பன்முறை மாற்றினத்தவரின் ஊடுறுவல்களை சந்தித்துவருகிறது என்றாலும், இப்போதுபோல் அடர்வான ஊடுறுவல்கள் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை.

         தங்களுக்குள் போர் நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் வளமையும் செம்மையும் தக்கவைத்துக் கொண்டு எதிரிக்கு இடங்கொடா நிலையே தமிழகத்தில் நீடித்திருந்தது.

          ஆரிய நுழைவு என்பது சிற்றின நுழைவே. மக்களிடத்து சிலரும் ஆளும் மன்னர்களிடையே ஒரு சிலரும் சூழ்ச்சியை கையாண்டு நாட்டை குழப்பிக் கொண்டிருந்தனர். மன்னர்கள் ஆரிய சூழ்ச்சிகளுக்கு ஆட்பட்ட நிலைதான் தமிழகத்தை அவலத்திற்குட்படுத்தியது.

       இசுலாமியர் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி மதநுழைவையும், கொள்ளையடிப்புகளையும் செய்து வந்தரெனினும் வடநாட்டினரைப் போல் ஊடுறுவலைப் பெரிதாகத் தமிழகத்தில் நிகழ்த்தவில்லை.

     இசுலாமியர் கைப்பற்றிய ஆட்சியை மீட்டுத்தர வைத்த கோரிக்கையின் பேரில் தமிழகத்தில் நுழைந்த விசயநகரப் பேரரசின் வடுகக் கூட்டம்தான் போரில்லாமல் சூழ்ச்சியாகவே உள்நுழைந்து தமிழகம்  முழுவதையும் 600 பாளையப்பட்டுகளாகப் பிரித்துக்கொண்டு தமிழ்நாட்டு மொத்த வருமானத்தையும் சுரண்டத் தொடங்கியது.

       சுரண்டிய தொகையையே கப்பமாக விசயநகரப் பேரரசுக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் பரவலாகப் "பாளையம்" என்ற ஊர்ப்பெயர்கள் அமைந்திருப்பதே இதற்குச் சான்றாக விளங்குகிறது.

      தமிழினம் என்றுமே ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிக்குட்பட்டு இருந்ததில்லை. பாளையக்காரர் தண்டிய கப்பங்களைத்தான் அவர்கள் திசை திருப்பிக் கொண்டனர். இதில் தமிழினத்திடமிருந்து சுரண்டிய கப்பத்தொகையைச் சிலர் ஆங்கிலேயரிடம் கொடுக்க மறுத்த கதைகளும் உண்டு. அதுபோல் ஒரு கதையைத்தான் மிகவும் சுவையான - உணர்வான உரையாடல்களோடு திரைப்படமாக 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' என்ற பெயரில் பார்த்து சுவைத்துக்கொண்டுள்ளோம்.

        நம்மிடம் தண்டிய - பிடுங்கிய தொகையை யார் யார் பங்கு போட்டுக் கொள்வது என்றவாறு நடந்த சிறு 'ஒறுப்பு நிகழ்ச்சியே' திரைக்கதையாகச் சுவைபட உருவாக்கப்பட்டிருந்தது. அதையும் ம.பொ.சி தான் உருவாக்கியிருந்தார் என்பது கசப்பான செய்திதான்.

         மராட்டியர் ஆட்சியின்போது ஊடுறுவிய மராட்டியர்களும், சௌராட்டிரர்களும் தஞ்சை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் திட்டுத்திட்டாக அடர்வாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தஞ்சைப் பெரியகோவில் இன்றும் அவர்களின் ஆளுமையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. தாய்மொழியான வாய்மொழிதான் அவர்களை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.

        இவ்வாறு இந்த ஊடுறுவல்கள் காலங்காலமாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தாலும் இவ்வளவையும் தாண்டி, மொழிவழி மாநிலப் பிரிவால், தமிழ்நாடு என்று பெயர் பெற்றுத் தமிழகத்திற்கு என்று ஒரு ஆட்சி அமையப்பெற்று தமிழ்மொழிக்கும் தமிழின மீட்சிக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தோம்.

         இப்போது சில ஆண்டுகளாகவே திரள்திரளாக மந்தை மந்தைகளாக வடநாட்டிலிருந்து வரும் தொடர் வண்டிகளில் பெரும் மூட்டை முடிச்சுகளுடன் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் வந்து குவியும் கூட்டத்தை காண்கிறோம். இவர்கள் தமிழகத்தின் நகரங்கள், சிற்றூர்கள், பட்டி, தொட்டிகளென நீக்கமற நிறைகிறார்கள்.

     மற்றைய அண்டை மாநில அரசுகள் அவர்களை கட்டுப்படுத்த அந்தந்த அரசுகள் சில கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பலரும் இந்த ஊடுறுவலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

 இவர்கள் குறைந்த பக்கம் எப்படியோ இந்த தமிழக எச்சிற்காசு அதிகாரிகளிடமிருந்து ஏதாவது ஒரு சான்றை பெற்று விடுகின்றனர். சிறிது காலத்திலேயே தமிழக அரசின் முத்திரை பெற்ற பங்கீட்டு அட்டை முதல் சான்றட்டை, ஒப்போலை அடையாள அட்டை என அனைத்தையும் மிக எளிதாகப் பெற்று உலா வருகின்றனர். தமிழக விடுதிகளில் - நிறுவனங்களில் அந்தந்த முதலாளிகள் விரும்பிப் பணியமர்த்தம் செய்யும் பரிமாறிகளாகப் பணியமர்ந்து விடுகின்றனர்.

    அங்கு உணவருந்தும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த இந்தியைத் தத்துப்பித்தென்று பேசி உணவைத் தடருவிக்க தொல்லைப்படுகின்றனர்.

       தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவோர் மட்டும் இதற்காக உரத்தக் குரல் கொடுத்து வருகின்றனர். ' தமிழர்கள் பிற மாநிலங்களுக்குப்போய்ப் பிழைக்கவில்லையா?' என்று எதிர்த்தருக்கம் செய்யும் திராவிடம் போற்றுபவரும் தமிழகத்தில் உள்ளனர்.

(கட்டுரை நீள்கிறது.   ..........------------
  -------//

------////////----------+-++--+++====== , இறுதியில்)

                ஊடுருவும் வந்தேறிகள், உரிமை கேட்குமளவிற்குத் தமிழ்நாட்டுரிமை மலிவாகிக் கொண்டுள்ளது. தமிழினம் சொந்த மண்ணிலேயே ஏதிலியாகும்நிலை வெகுதொலைவில்  இல்லை!

             இதுதான் தமிழினத்தின் இற்றை இழிநிலை!
 
                                 -மாகுன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக