தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது.
தாள்
துல்>தல்>தள்>தாள்
தாள்= 1. பாதம் 2. அடி 3. அடிப்பகுதி
4. விளக்குத்தண்டு 5. கால் 6. கணைக்கால் 7.முயற்சி 8. ஊக்கம் 9. உழைப்பு 10. பொறுமை 11. ஆதி 12. படி. 13. தாள் (paper). 14. தாழ்ப்பாள் 15. கடையாணி 16. தாழ்க்கோல் 17. தாடை. 18. வால்மீன்
துல்= பொருந்துதல் கருத்து வேர்
துல்>தல் = பொருந்து, ஒன்று, இணை, சேர்
தல்>தள்>தள்+ஐ>தளை=கட்டு
தளைதல்= கட்டுண்ணல், கட்டுதல்
தளைத்தல் = பிணைத்தல்
தளைப்பு = கட்டு
தளைப் பொருத்தம் = செய்யுள் தளையின் இணக்கம்
தளையவிழ்தல்= கட்டு விட்டு விடுதல்
தள்>தாள்= பிணைப்பு, கட்டு, மூடு
தாள் = பூட்டு
ஒ.நோ: புல் = பிணை, இணை, சேர், கட்டு, தழுவு
புல்>புள்>புண்>புண்+ஐ>புணை = கட்டு, கட்டு மரம், தெப்பம்
புள்>புண்>பூண்= கட்டு, செறி, இறுக அணி
பூள்+து>பூட்டு
தாள்= தாழ்ப்பாள்
"தம்மதிறாந் திறப்பர் தாள்"
(பு.வெ.9:24)
தாள்>தாழ் = தளை, கட்டு, பூட்டு, செறிப்பு, தாழ்க்கோல், சுவர்ப்புறத்து நீண்ட தாங்கு கல் (யாழ். அக), மதகுகளை அடைக்கும் மரப்பலகை
தாழ்= பூட்டு
"அன்பிற்கு முண்டோ அடைக்கும் தாழ்"
தாழ்+அ+கோல் [தாழ்+அக்கு(?)+கோல்]
"தாழ் என் கிளவி கோலொடு புணரின்
அக்கு இடைவருதல் உரித்தும் ஆகும்"
(தொல்.புள்ளி:89)
தாழ் கோத்தல் = தாழிடுதல்
"ஒளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ" (மணி: 4:88)
தாழ்>தாழ்+இ>தாழி= மூடப்பட்டுள்ள மட்கல வகை, கவித்து மூடப்பெறும் கலம், இறந்தோரை அடக்கம் செய்துவைக்கப் பயன்படுத்திய மட்கலம், சாடி
தாள், தாழ்= பூட்டு, தாழ்க்கோல்
இதே பொருளில் பிறமொழிகளில் இச்சொல்,
Sanskrit - tala, talaka
Pali - Tala
Nepali- Tala
Hindi- Tala
தள் = ஒன்று, பதி, இணை, பொருந்து
உடம்பின் கீழ்ப்பகுதியாகிய காலின் பாதம், நிலத்தில் பொருந்துவது காரணமாக, அப்பகுதி (தள்>) தாள் என்று குறிப்பிடப்பெற்றது.
(ஒ.நோ: பதி = ஒன்று, பொருந்து
பதம்>பாதம் = பொருந்தும் பகுதி, பொருந்தும் உறுப்பு, அடி)
தள்>தாள்= பாதம், அடி
"நல் தாழ் தொழாஅர் எனின்"(குறள்:2)
தாள்= அடி, அடிப்பகுதி
"நெடுந்தாள் ஆசினி" (மலைபடு:139)
(நெடிய அடியை உடைய ஆசினிப் பலா)
"கருந்தாள் கந்தத்து" (அகம்:307:12)
(வலிய அடிப்பகுதியையுடைய தூணில்)
தாள்= பயிர்களின் அடிப்பகுதி
"தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" (பெரும்பாண்: 231)
தாள்>(கன்னடம்:தாள்) (மலையாளம்:தாள்)
தாள்= பூ முதலியவற்றின் அடித்தண்டு
"தாள் நெடுங் குவளை" (சீவக: 2802)
தாளி>(Latin) Talea = a slender staff, a rod, stick
தாள் = விளக்குத் தண்டு
தாள் = வைக்கோல் (பிங்)
(நிலத்திணை) பயிர்வகையின் அடித்தண்டினிடத்திருந்து கிளம்பி நிற்கும் இலைத் தொகுதியும் இலையும் "தாள்" என்ற சொல்வழக்கையே ஏற்கலாயின.
பனை ஓலையை சமற்கிருதத்தில் "தால-பத்ர" என்பர். ஓலையே எழுத்தாணி கொண்டு எழுதும் வழக்க முறைக்கு அடித்தாளாக அமைந்திருந்தமை, இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.
[இலையைக் குறித்த (ஓலையைக் குறித்த) "பத்ர " என்னும் சமற்கிருதச் சொல்லினின்று, "பத்ரிகா" என்ற சொல் கிளைத்து, நம்மிடையே ஒரு கலப்புச் சொல்லாக கலாமாடி வருகிறது]
இன்னவாறே, பனை இலையைக் (ஓலையை) குறித்த சொல்வழி , "தாள்" என்னும் வழக்கும் வழங்கி நிலைத்து வருகிறது.
(எ.கா:செய்தித்தாள்)
தாள்= இலை
1.பைந்தாள் செந்தினை (நற்:376:2)
2.தாள்ஆர் மலர்ப் பொய்கை (திருவள். மாலை: 12)
தாள்>தாள்+இ>தாளி= ஒருவகை அருகம் புல்
(செறிந்த இலைகளையுடைய புல்வகையொன்று "தாளி" என்ற சொல்லால் , நிறக்க வழக்குப் பெற்றிருந்தது)
"அள்இலைத் தாளி கொய்யு மோனே" (புறம்: 252:3)
(செறிந்த இலைகளையுடைய தாளியைப் பறிப்போன்)
தல்>தால்+அம்>தாலம்= பனை
உண்ணுவதற்கு ஏற்றவாறு பனை ஓலையில் செய்த ஓலைக்கலம் "தாலம்" என்று வழக்குப் பெற்று, பின்னர் மாழைக்கலமும், மண்கலமுங்கூட, தாலம் என்ற சொல்லால் வழங்கப் பெற்றன.
"உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்" (புற: 384:21)
(நன்கலம்= பனை ஓலைக் கலம்)
"பெருந்தோள் தாலம் பூசல் மேவர"
(புறம் : 120:115)
பெருந்தோள் தாலம்= அகன்ற கலமாகிய தாலம்
தாலம்>(Sanskrit) Sthala = Eating plate
(தாலம்= தட்டம்)
தால்+அம்>தாலம் = பனை
தாலம்+புல்>தாலப்புல்= பனை
"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்"
(சிலம்பு: கொலைக்களக்:16:15-17)
உரை: பனையாகிய புல்லினது மிக வெள்ளிய ஓலையால் கைத்தொழில் வல்ல மகன் அழகுபெறச் செய்த தொழிற்பாடமைந்த தவிசின்கண் கோவலன் அமர்ந்தபின்...
பனையோலை "தாலப்புல்" எனப்பட்டது. பனை புறக்காழ் மட்டுமே அமைந்தலாகலின், "புல்" என்னும் ஈற்றடையுடன் சுட்டப் பெற்றது.
ஒ.நோ: "புறக்காழனவே புல்லெனப் படுமே" (தொல்.பொருள்:630)
தால வட்டம்= பனை ஓலை விசிறி. வட்ட வடிவில் தோற்றமிருப்பதால், பனையோலை விசிறி, தாலவட்டம் என்னப் பெற்றது.
தாலவட்டம்> (சமற்கிருதம்) தாலவருத்த
தல்>தள்>தாள்>தாள்+இ= தாளி= பனை
"தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில்"
(புறம்:328:14-15)
(உரை: பனை மரத்தின் அடியில் நீளப் படர்ந்து இருக்கும், சிறிய நறிய முன்னைக் கொடியைக் குறுமுயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய....)
தாள்+அம்+போந்தை> தாளம் போந்தை= தாளிப்பனை
"கற்றை யீந்தின் முற்றுக்குலை யன்ன
ஆளில் அத்தத் தாளம் போந்தை"
(நற்:174:1-2)
பனையின் பெயர்களாகச் சூடாமணி நிகண்டு சுட்டும் வரி, இவ்விடத்தில் கூர்நது கவனிக்கத்தக்கது.
"தாலமே பெண்ணை புல்லுத்தாளி புற்பதி பனைப்பேர்" (சூடா.நிக: 4:10:1)
தாலம் (தாளி)> (sanskrit) Tala = பனை
பாலி : Tala
Kashmiri : Tal
Bengali: Tala
தாளி என்றவாறு பனையைக் குறித்து வழங்கிய பழந்தமிழ்ச்சொல், தெலுங்கில் "தாடி" என்று திரிபெய்து வழங்குகிறது.
தாளி>(Skt) - Tadi
Prakrit - Tadi
Punjabi- Tar
Assamese- Tari
Bhojpuri - Tari
தாளி>(Bengali) Talier>(Latin) Taliera>(English) Taliera
தாளி மரத்திலிருந்து எடுக்கும் கள்,
தாளி>(Hindi) Tari>(English) Toddy
தள்= பொருந்துதல் கருத்துக் கிளை வேர்
தள்>தாள்= பாதம், அடி, அடிப்பகுதி
ஒ.நோ: அடு = சேர், ஒன்று, பொருத்து
அடு+இ>அடி= பாதம்
தாள்= கால்
1.கொடுந்தாள் ஏறு (மலைபடு:508)
(வளைந்த காலையுடைய ஏறு)
2.பொருந யானை புட்டாள் ஏய்ப்ப (நற்: 279:6)
(புண்+தாள்= புண்பட்ட காலடி)
தாள் என்ற தமிழ்ச்சொல் பிற வடபால் மொழிகளில்,
ஒரியா- தாளெ
து அன்னி- தாள்ள
தாக்னி - தாளெ
நடு பஹாரி- தாளி
மல்தானி - தாளெ
பகாடி- தோள்
கால் என்ற தமிழ்ச்சொல், பிற மொழிகளில்,
பன்னபாரி - கால்
நாகபூரி- காலி
காந்தேசி- கால்
தோக்ரி- கால்
தமிழிய மொழிகளில் "கால்",
குறவம் - கால்
இருளம் - காலு
கன்னடம்- காலு
துளு- கார்
கோண்டி- கால்
கால்>(Greek) Skelos = leg
Iso Skelos >Isosceles (english)
தாள் = கால், கணைக்கால்
"பொருந்து மயிர் ஒழுகிய திருந்துதாட்கு ஒப்ப"
(பொரு.நரா:4)
(திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த....)
தாள் = குளம்பு
"பரியுடை வயங்குதாள் பந்தின் தாஅய்" (நற்:249:7)
தாள்>(Latin) Talus = heel, ankle
(French) Du-Talon - குதிகாலில்
(English) Talus - ankle
(Latin) Talaria = மிதியடி, செருப்பு
வினை செய்வதற்கு, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. வினைபுரிய நடையை மேற்கொள்ள வேண்டியிருந்தமையால், நடைத்தளமாகிய "தாள்" என்னும் காலைக் குறித்த சொல் கொண்டே செய்கைப் பொருளும் படர்ந்தது.
நடத்துதல்= செய்வித்தல்,
நடத்தல்= இயங்கல்
எ.டு: புலருக்கு பாராட்டு விழா நடத்தினர்.
தாள் = முயற்சி, செய்கை, வினை
"தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்தலும்" (தொல்.பொருள்.புறத்: 2:5:13)
(தன்னிடத்துள்ளதாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களை தன்னொடு கூட்டிக் கூறலும்......)
தாள் என்னும் முயற்சியைக் குறித்த சொற்கள், திருக்குறள் 151, 212, 617 இல் உள்ளன.
தாள் = ஊக்கம்
" "தாள்வலம் படுப்ப" (அகம்:61:3)
தாள்= உழைப்பு (குறள்: 1065)
தாள் என்னும் பாதமே உடலை தாங்குவதால், தாள் என்ற சொல்லினின்று தாங்குதல், பொறுத்தல், தகுதியுடைத்தாதல் போன்ற கிளைக்கருத்துகளும் வழக்கூன்றின.
தாங்குதல்: அவன் உதைத்தால், இவன் தாளுவானா?
பொறுத்தல்: இந்த மாட்டுவண்டி, இச்சுமையை தாளாது.
தகுதியாதல்: இந்தப் பொருள், அவ்வளவு விலைக்குத் தாளுமா?
தாள்= பொருந்து, அமை, இணை, சேர்
தாள்= பொருத்து
தாள்+அம்= தாளம் (அகங்கைப் பொருத்தம் வழி ஒலி எழுப்பல்)
குட்டுதல் என்பது அழுந்த மோதுதல். குட்டு>கொட்டு.
கைகொட்டிச் சிரித்தல்= கைகளால் ஒன்றையொன்று மோதி, ஒலியெழுப்பிச் சிரித்தல்.
தாளம்= கைத்தாளம், கருவித்தாளம்
"ஆடுவோர் அரங்கத் தாளமும்" (பரிபா: 8:108)
தாளக்கட்டு = இசை ஒத்து அமைகை
தாள மானம் = தாள அளவு
தாளம்= பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு
வடபால் மொழிகளில் "தாளம்" என்ற சொல்:
Pali- Tala= blow
Prakrit- Tala= clapping
Assamese - Tal = Clapping
Oriya - Tala =. Clapping
Kashmiri - Tal = Clapping the hands in
time to music
(தாளம் என்னும் சொல்லுக்குத், தாளால் அதாவது பாதத்தால் தரையைத் தட்டுவது, அல்லது நாட்டியம் ஆடுபவர் பாதம் நிலத்தில் பதிவதற்கு ஏற்றாற்போல் இசைத்தொலிக்கும் இயக்கருவி என்னல் பொருந்தாது)
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
30 மீனம் 2051
[௩०/०௩/௨०௫௧]
(12-04-2020)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக