(விரிவாக அறிய காண்க,
நூல்: வேரும் விரிவும் 2
ஆசிரியர் : ப.அருளி)
மச்சான் = அளியன்
தமிழில் மச்சான் என்ற சொல் உள்ளது. இது மைத்துனன் என்ற சொல்லின் திரிபு ஆகும்.
(மய்த்துனன்மச்சுனன்மச்சான்)
இந்த மைத்துனன் என்ற சொல்லானது "மைதுன" என்கிற சமற்கிருத சொல்லிலிருந்து உருவானது.
சரி மைதுன என்ற சமற்கிருத சொல்லினை இப்போது ஆய்வோம்.
மிதுன (midhuna) என்கிற சொல்லே மைதுன (maidhuna) என்று திரிபெய்துள்ளது.
(ஒ.நோ. வித்யாவைத்யா, விஜயந்திவைஜயந்தி, விசாகவைசாக (இதுதான் வைகாசி), விபோகவைபோக)
சரி, மிதுன என்ற சொல்லுக்கான பொருளை இப்போது காண்போம்.
mithuna = pair, male and female, also any couple (Rig veda)
(in later language mostly pairing,
copulation)
Mithuna Vratin = practising copulation
(Mahabharatham)
Mithunaya = cohabit sexuality (Panini
VII.I.15)
Mithuni = cohibit sexuality (samavi -
Vidhama Brahmana)
Mithuni - carin = having sexual intercourse (Bhavishya purana)
மேற்குறிப்பிட்ட பொருள்களில் ரிக் வேதத்தில் மட்டுமே மிதுன என்ற சொல்லுக்கு இணை என்ற பொருள் உள்ளது. அதன் பின்னுள்ள இலக்கியங்களில் மிதுன என்ற சொல் புணர்ச்சி என்கிற பொருளிலேயே காணப்படுகிறது.
இவ்வாறான பொருள் கொண்ட மிதுன என்கிற சமற்கிருத சொல்லிலிருந்து உருவாகியுள்ள மைத்துனன் என்ற உறவுப் பெயரை நாம் பயன்படுத்தலாமா?
அதுவும் நமது அக்காள்/தங்கையை திருமணம் செய்து கொண்ட ஆணைப் பார்த்து!
மைதுன என்பது போலவே காமவுறவைக் குறிக்கும் மதன என்கிற சொல்லொன்றும் சமற்கிருதத்தில் உள்ளது என்ற தகவலையும் நோக்குக.
இவ்வகையிலான மதனம் என்னும் காமப்பொருளை அடிப்படையாக கொண்டே மதனி என்னுமாறு மனைவியின் உடன்பிறந்தாளை சுட்டும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.
சரி இதற்கு இணையான தமிழ்ச்சொற்கள் உள்ளனவா என்று காண்போம்.
பெண் கொடுத்தல் என்ற சொல் நம்மிடையே பரவலாக உள்ளது. பெண் வீட்டாரை கொடைக்குரி மரபினோர், கொடுப்போர் போன்ற சொற்களில் தொல்காப்பியம் சுட்டியுள்ளது. பெண் கொடுப்பதை கொடை என்று ஐங்குறுநூறு கூறுகிறது.
கொண்டான் = பெண்ணை கொண்டவனாகிய கணவன்.
கொள்கொள்குகொண்குகொண்கு+அன்கொண்கன்=கணவன் (குறள் 1265/1266)
கொள்கொள்ளுகொள்ளு+நன்~கொழுநன் =கணவன் (குறள் 55)
கணவனை "கொண்டவன்" என்கிற சொல்லில் சுட்டும் வழக்கு இன்றும் ஊர்ப்புறங்களில் உள்ளது.
இத்தகு பொருள் வழக்கு மரபிலேயே -பெண்ணை கொடுத்த குடும்பத்தில்- பெண்ணைக் கொடுத்தோரில் உரிமையுடைய ஒருவனாகிய அப்பெண்ணின் அண்ணன் அல்லது தம்பியை "அளியன்" என்னும் சொல்லால் சுட்டும் அருமையான வழக்கு ஒன்று, அன்றைய தமிழகத்தில் வழங்கியுள்ளது.
இச்சொல் அன்றைய தமிழ்நாட்டின் சேரநாட்டுப் பகுதியிலே வழங்கிய தமிழுள் இவ்வழக்கு இருந்தமையை, இன்றும் அறாது ஆங்குப் பரவலுறப் பயிலப்பெறும் தொடர்ச்சியின்வழி அறிகிறோம்.
(மலையாளம்) அளியன்=மனைவியின் அண்ணன் அல்லது தம்பி.
அளி =கொடை . நமக்கு பெண்ணைக் கொடுத்தவன் நமக்கு அளியன் ஆகின்றான்.
இனிமேல் நமது அக்காள் /தங்கையின் கணவனை சுட்டும் போது மைத்துனன் அல்லது மச்சான் என்று சொல்லாமல் அளியன் அல்லது அளியர் என்றே சொல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக