ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஒலி உருவாதல்

                                          ஒலி உருவாதல் 

உசாத்துணை நூல்: எண்ணியம் (சாங்கியம்). ஆசிரியர்: குணா

நாம் ஒவ்வொரு எழுத்தையும் பலுக்கும்போது, ஒலி எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்கும் செய்யுள் ஒன்று பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ளது. அது இதுதான்.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும்  காட்சி யான.

    -தொல்காப்பியம்- எழுத்ததிகாரம் 83

விளக்கம்: அடிவயிற்றில் எழுகின்ற காற்று, தலையிலும் தொண்டையிலும் நெஞ்சிலும் நிலைகொண்டு பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் முதலான உறுப்புகளை எட்டு வகையில் தொடுகிறது. இதனால்தான் முறைப்படி பலுக்கப்படும் எழுத்துக்கள் எல்லாம் வெவ்வேறு வகையில் ஒலிக்கின்றன என்பது புலப்படுகிறது.






மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
20 கும்பம் 2051
[௨०/०௨/௨०௫௧]
(03-03-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக