ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பாரதி யார்?

                                                      பாரதி யார்?

தமிழ் மொழியில் உள்ள புலவர்களிலேயே சிறந்த புலவராகவும், தமிழர்களின் அடையாளமாகவும் பல தமிழர்களால் நம்பப்படுபவர் பாரதியார்.
 ஆரிய வேதங்களைப் பற்றிய அன்னாரின் எண்ணவோட்டங்களை அவரின் எழுத்துகளை கொண்டு நீங்கள் திறனாய்வு செய்யவே, இப்பதிவு.


1. பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?

2. வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே

3. வேதத்தின் முடியினாலே விளங்கும் சக்தி!
வேதம் என்றும் வாழ்க என்ற கொட்டு முரசே!

4. வேத முடைய திந்த நாடு- நல்ல
வீரர் பிறந்திந்த நாடு
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

5. வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

6. "சதுர்வேதங்க ளாயிர முறை படித்தால்
மூளுநர் புண்ணியந்தான் வந்து மொய்த்திடும்"

யாரைத் தொழுவது என்ற பாரதியாரின் கட்டுரையிலிருந்து சில குறிப்புகள்.

7. சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்கு பூசை நடந்ததாக வேதம் சொல்கிறது.
                                   பக்கம் 1

8. நமது வேதம்- நமது சாஸ்திரம், நமது சனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் துறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள்- இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ' ஆரிய சம்பத்து'
                      பக்கம்- 70

9. ஆதி சங்கராச்சாரியார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புகளையும் ஒன்றாக்கிக் கொண்டார். அவை ஐந்திரம், ஆக்னேயம், காணபாத்தியம், சைவம், வைணவம், சாக்தம்.
                               பக்கம்- 78, 79

9. தமிழா....   வேதங்களை நம்பு. அவற்றின் பொருளை தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள்போல் நடந்து கொள்ளாதே.

பெஞ்சமின் பிராங்ளின். பி
11 சுறவம் 2051
(25-1-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக