மூச்சியக்கி
Ventilator என்ற சொல்லை மூச்சியக்கி என்று மொழிபெயர்த்துள்ளார் திரு.செ.இரா. செல்வகுமார் அவர்கள்.
அவரது மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் திரு.தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள்.
அவரது விளக்கம் இதோ:
'மூச்சியக்கி' - மிக அருமையான சொல்லாக்கம். பாராட்டுகள் பேராசிரியர் அவர்களே. தமிழில் 'படகோட்டி', 'பாக்குவெட்டி' ' விறகுவெட்டி' போன்ற சொல்கள் இதுபோன்ற அமைப்பை உடையன. 'ஓட்டு', 'வெட்டு' ஆகியசொல்கள் செயப்படுபொருள்களை ஏற்கும் வினைச்சொல்கள். தமிழில் ஒரு வினையையும் அதனோடு இணைகிற செயப்படுபொருளையும் இணைத்து, பெயர்ச்சொல் உருவாகின்றது. அவ்வாறு இணைந்து பெயர்ச்சொல் உருவாகும்போது, பெயர்ச்சொல் ஆக்க விகுதியாக இகரம் வினையுடன் சேர்கிறது. 'மூச்சியக்கி' என்பதில் 'இயக்கு' என்ற செயப்படுபொருள்குன்றா வினைச்சொல், தன்னுடன் 'மூச்சு' என்ற செயப்படுபொருளை இணைத்து, பின்னர் பெயராக்க விகுதியாக இகரத்தை இணைத்து, 'மூச்சியக்கி' அமைகிறது. தமிழ்ச் சொல்லாக்க விதிகளுக்கு உட்பட்டுத் தாங்கள் முன்வைக்கிற 'மூச்சியக்கி' அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு சொல். பொருண்மையும் வெளிப்படுகிறது. தமிழ்ச்சொல்லாக்க விதியும் செயல்படுகிறது. இயல்பாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக