தமிழர் இழந்த நிலம்-4
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளாவோடு இணையவேண்டும் என்று அக்கறை காட்டிய திரு கே.எம். பணிக்கர் என்பவர், இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அறியப்படுகிறார்.
கேரளாவிலுள்ள நாயர் மற்றும் நம்பூதிரி உள்ளிட்ட வந்தேறிகளால் ஒடுக்கப்பட்டு கிடந்த, ஈழவ சமூகத்தில் ஒரு உயர்குடும்பத்தில் பிறந்த இந்த காவலம் மாதவ பணிக்கர்... ஒரு பன்முக சிந்தனையாளன்.
வரலாற்றாசிரியராக, எழுத்தாளராக, இராஜதந்திரியாக, இதழாசிரியராக சிந்தனையாளராக, பேராசிரியராக,
தூதுவராக,
சட்ட வல்லுநராக அறியப்படும் இந்த பணிக்கர், எளிதில் எத்தனை பெரிய ஆளுமையையும் வசீகரம் செய்யும் தன்மை படைத்தவர்.பொதுவாக மலையாளிகளுக்கு இது கைவந்த கலை என்றாலும், கே எம் பணிக்கர் அதில் ஒரு படி மேலே நின்றார்.
இவர் எழுதிய
A Survey of Indian history
Asia and Western dominance
Malabar and Portuguese
The history of Kerala
உள்ளிட்ட நூல்கள் சாகாவரம் பெற்றவை.
இந்தியாவின் முதல் பிரதமரான
பண்டித ஜவஹர்லால் நேருவோடு இவருக்கு இருந்த தொடர்புதான், இவரால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எளிதாக கைப்பற்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.
நேருவோடு மட்டுமல்ல அவரின் உடன் பிறந்த தங்கையான விஜயலட்சுமி பண்டிட்டோடும் நெருக்கமாக இருந்தார் இந்த கே.எம். பணிக்கர்.
1500 லிருந்து 1945 வரையிலான ஆசிய நாடுகள் மீது மேற்கத்திய நாடுகளின் அதிகாரப் பரவலாக்கம் குறித்த இவருடைய தொகுப்புகள், வரலாற்றுச்சிறப்பு மிகுந்தவை.
ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்ற இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகவும் சிலகாலம் இருந்தார்.
சீனத்து கதாநாயகன் மா சே துங் குடன் நெருங்கிய நட்புக் கொண்டு,
1950 முதல் 52 வரை சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த இந்த கே.எம். பணிக்கர், நாடு மொழிவழியாக பிரிக்கப்பட போகிறது என்பதை அறிந்ததும், அவசரஅவசரமாக இந்தியா திரும்பினார்.
காரணம் எந்த அடிப்படையில் நாடு பிரிக்கப்பட போகிறது என்கிற செய்தியை உணர்ந்ததே ஆகும்.
இன்றைக்கு டெல்லியை ஆட்டிவைக்கும் இதே மலையாள கூட்டம் அன்றும் அங்கே இருந்தது என்கிறது வரலாறு.
இந்த நிலையில் 22- 12-1953 ஆம் ஆண்டு மொழிவழி பிரிவினை கமிஷன் உருவாக்கப்பட்டது...
பீகாரைச் சேர்ந்த நீதியரசர் சையத் பசல் அலி தலைவராகவும்,,,
உறுப்பினர்களாக பண்டிட் எச்.என். குன்ஸ்ரு அவர்களும்...
கே.எம்.பணிக்கர் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
நாடு முழுவதும் மொழி அடிப்படையில், பிரிவினை, பேதமின்றி, மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுக்கான அஜெண்டா.ஆனால் அந்த வேலையை இவர்கள் சரியாகச் செய்தார்களா என்கிற கேள்வி இன்றளவும் எழுந்து நிற்கிறது.
அதனால்தான் நான் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறேன் மொழிவழி பிரிவினை என்பது ஒரு மோசடி என்று...
இன்றைக்கும் கர்நாடகத்தின் வட எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டம், தங்களை மராட்டியத் தோடு சேர்க்கச் சொல்லி, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அந்த பெல்காமின் பெயரைக்கூட கர்நாடக அரசு பெலகாவி என்று மாற்றி விட்டது. கூடுதலாக அங்கு ஒரு துணை சட்டமன்றத்தை யும் (வழிதான் சவுதா) கட்டி இருக்கிறார்கள். பெல்காமை தக்கவைக்க கர்நாடகம் ஆயிரம் முயற்சிகளை மேற்கொண்டாலும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூருக்கும்- பெல்காமுக்கும் இடையிலான சாலைப் போக்குவரத்து, மாதத்தில் 10 நாட்கள் நிறுத்தும் அளவிற்கு சண்டை தீவிரம் அடைந்திருக்கிறது.
இந்தநிலை தேவிகுளம் பீர்மேட்டில் உள்ள தமிழர்களிடம் இல்லாத காரணத்தினால்தான், மலையாளிகளால் இன்னும் அங்கு வலுவாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
பச்சை தமிழன் ஒருவன் பெயரில்
பெரியகருப்பன் மேடு என்று இருந்த பீர்மேட்டை, எங்கோ பெரும்பாவூரிலிருந்து பிழைக்க வந்த ஒரு மலையாள முஸ்லிமான பீர்முகமது பெயரில்,பீர்மேடு என்று அழைக்கிறோம் என்று அவர்கள் கதை எழுதிய பின்னும் அதை மறுப்பதற்கு அங்கு நம்மவர்கள் உணர்வோடு இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.
இந்தக் குழுவின் தலைவரான திரு பசல் அலி அவர்கள், அவர் சார்ந்த பீகாருக்கும், மேற்குவங்கம் மற்றும் ஒரிசாவுக்கும் எல்லைத் தாவா வரும்போது, மிகவும் நேர்மையாக அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அது அவரது நேர்மை என்றால் கூட, மொழிவழி பிரிவினை குழுவின் விதியும் அவ்வாறுதான் இருந்தது.ஒரு உறுப்பினர், அவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், அண்டை மாநிலத்திற்குமான எல்லை பிரிவினை வரும்போது, சம்பந்தப்பட்ட உறுப்பினர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதுதான் விதி.
ஆனால் அதையும் மீறி தமிழக-கேரள எல்லை பிரிவினையின்போது, தைரியமாக கூட்டத்தில் அமர்ந்ததோடு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு சேர்ப்பதற்காக, மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தினார்.
இதை குழுவின் தலைவர் திரு பசல் அலி அவர்களோ, அல்லது இது தவறு என்று அவரை அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நம்மவர்களும் அன்று தயாராக இல்லை.இந்த ஒற்றை நம்பிக்கையில்தான், மிகத் துணிச்சலாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில், எனக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது... அதனால் அது கேரளாவிற்கு வேண்டும் என்றதோடு, தேவிகுளம் பீர்மேடு மட்டும் கேரளாவிற்கு வரவில்லை என்றால் கேரளா தலையில்லாத முண்டம் போல் ஆகிவிடும் என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
இவருடைய வாதம்,பிரதானமாக நடந்து கொண்டிருந்த காலகட்டங்களில், அந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, அதாவது 1954 மார்ச் மாதம் கேரளாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பட்டம் தாணுபிள்ளை...
இயல்பிலேயே மொழிவெறியும், இனவெறியும் கொண்ட பட்டம் தாணுப்பிள்ளையினுடைய வரவு, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆயிற்று.
கே.எம்.பணிக்கர் ஒருபுறம் மொழிவழி பிரிவினை குழுவில் தன்னுடைய வாதங்களை முன்வைத்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் தமிழகத்தில் எவரை வளைக்கலாம் தனக்குச் சாதகமாக என்றும் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் தான் திராவிட நாட்டிற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த வைக்கம் வீரர் அவருடைய கண்களில் படுகிறார்.உடனடியாக தேவிகுளம் பீர்மேடு எதற்காக கேரளாவிற்கு வேண்டும் என்பது குறித்தான கடிதம் ஒன்றை பெரியாருக்கு எழுதியதோடு,தங்களை சந்திப்பதற்கு எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.
உலகமெல்லாம் சுத்திவந்த கே.எம். பணிக்கருக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து போவது என்ன பெரிய விடயமா...
சென்னை வந்தார், சென்னையிலிருந்து திருச்சி வந்தார்...
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டம் தாணுபிள்ளை,அவசர அவசரமாக கோட்டயம் சிறையிலிருந்த அதிதீவிர குற்றவாளிகளை விடுதலை செய்ததோடு, அவர்களை ஒட்டுமொத்தமாக பீர்மேடு தாலுகாவில் குடியேற்றுவதற்கான அத்தனை வேலையையும் செய்து கொண்டிருந்தார்.
அன்றைக்கு தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அத்தனை பேரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்பதால், வாயில்லா ஜீவனாக, தேயிலை கம்பெனிக்காரனின் பிடியில் சிக்கி, வதைபட்டுக் கொண்டிருந்தார்கள்.
தமிழகச் சட்டமன்றத்தில் ஆரம்பத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு ஆதரவாக இருந்த மரியாதைக்குரிய சி. சுப்பிரமணியம் போன்றவர்கள், காமராஜருடைய நெருக்கடிக்கு பயந்து,ஒருகட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு போவதை நியாயப்படுத்திய கதையும் நடந்தது.
அன்றைக்கு பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தபோது, திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில்,மரியாதைக்குரிய மார்ஷல் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12.அந்தப் பன்னிரண்டு பேரும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்காக திருவாங்கூர் -கொச்சி சட்டமன்றத்தில் எழுப்பிய உரத்த குரலைக் கூட, அன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் பச்சை தமிழர்களால் எழுப்ப முடியவில்லை... அந்தோ பரிதாபம்.
இன்றைக்கு கேரள மாநில அரசின் வரி வருவாயில் 11.7 விழுக்காடு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குமரி மாவட்டத்திலும், தேவிகுளத்திலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார் திருவிதாங்கூர் கொச்சி முதல்வர் திரு பட்டம் தாணுப்பிள்ளை அவர்கள்...
திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த தேவிகுளத்து தமிழர்களை அடித்து உதைத்தது கேரள காவல்துறை. தேயிலைத் தோட்ட முதலாளிகளும் பட்டம் தாணுபிள்ளையோடு கரம் கோர்த்துக் கொண்டார்கள்.
இந்த அத்துமீறல்களுக்கு எதிராக மூணாறு விரைந்த மார்ஷல் நேசமணி, அப்துல் ரசாக் போன்றவர்களின் கைகளில் விலங்கு மாட்டி, வீதிகளில் இழுத்துச் சென்றது பட்டம் தாணுப்பிள்ளையின் அரச கூலிப்படை.
மார்சல் நேசமணி அவர்களோடு மூணாறு சென்றிருந்த குப்புசாமி என்றொரு அப்பாவியின், செவிப்பறையை கிழித்தெறிந்தது ஒரு கும்பல். இந்த குப்புசாமிதான் பின்னாட்களில் இடுக்கி மலையகத்தில்
South Indian plantations workers Union எனப்படும் மாபெரும் தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக நடத்திய மனிதன்.
இந்தக் குப்புசாமியின் செவிப்பறையை கிழித்தது மலையாளிகள் அல்ல...
பச்சை தமிழனாக அறியப்பட்ட தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் கணபதியின் அடியாட்கள்... விட்டிருந்தால் இவர்கள் மார்சல் நேசமணியையும் கூட தாக்கி இருக்கக்கூடும்...
வரலாறு நீளும்...
- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக