சில எளிய தமிழ்சொற்கள்:
வரிசை = பூ
தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஞாயம் கேட்டு அரசிடமோ/அதிகாரிகளிடமோ பெருங்குரலில் முறையிடுதல் மக்கள் வழக்கம். இதனை பொதுவில் முறையிடுதல்/முறையீடு என்கிறோம். அதே பொருளில் பூசலிடுதல் (to complain loudly) என்ற சொல்லும் தமிழில் உள்ளது.
பூசலிடுதல் = முறையீடு (to complain loudly)
கட்சிகள்/இயக்கங்கள்/ அமைப்புகள் நடத்தும் பொது நிகழ்வில் எவரேனையும் அழைத்து மதிப்பளிப்பர் (கௌரவப்படுத்துதல்). இதனை "பூசனை" என்றும் கூறலாம்.
பூசனை = மதிப்பளிக்கை (honouring)
தன்னைத்தானே பெருமையாகப் பீற்றிக்கொள்வது சிலரது குணம். இதனை பூட்டகம் என்பர்.
பூட்டகம் = வீண்பெருமை (boasting)
பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளித்திடலில் மாணவர்களின் கூடல் நடைபெறும். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் disperse என்று கூறுவார். உடனே மாணவர்கள் கலைந்து செல்வர்.
இந்த disperse என்ற சொல்லுக்கு தமிழில் பூட்டழி/பூட்டழித்தல் எனக் கூறலாம். கலை/கலைதல் என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.
பூட்டழித்தல் = கட்டுக் குலைதல் (disperse)
வெளிப்படையாகத் தெரியாததை, உன்னித்து அறியும் வகையில் மறைமுகமாக இருப்பதை பூடகம் என்று அழைப்பது பொதுவில் உள்ள வழக்கமே.
பூடகம் = enigma
பெண்களுக்கு மாதவிடாய் நின்று போதலை தமிழில் பூமாறுதல் என்பர்.
பூமாறுதல் = menopause
இந்த பெருந்தொற்றுக் காலத்தில் நாம் அடிக்கடி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். இதனை பூரகஞ் செய்தல் என்று தமிழில் கூறலாம்.
பூரகஞ் செய்தல் = to taken in air at a long breath.
பூழ்தி என்றால் இறைச்சி என்பதையும் அறிக. முடைநாற்றத்தையும் (stench of putrid flesh) பூழ்தி என்பர்.
மலத்துவாரத்தை பூறு என்று தமிழில் கூறலாம்.
பூறு = anus
மேற்கண்ட சொற்களை நாம் மனதில் பதிய வைத்து, நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்.
எளிய சொற்களே நிலைத்து நிற்கும்.
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
9- கடகம் - 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக