பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு என்ற நூலிலுள்ள 203 ஆம் பாடலை இங்கே தந்துள்ளேன். இந்த பழமொழி நானூறு நூலினை தொகுத்தவர் சங்க கால புலவரான முன்றுறை அரையனார் என்பவர்.
இந்த நூலுக்கான உரையை தற்காலத்தில் எழுதி அச்சிட்டவர் திரு. புலியூர்க் கேசிகன் என்பவர்.
இப்போது 203 ஆம் பாடலைப் பார்ப்போம்.
"பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை
நன்னாளே நாடி மலர்தலால்-மன்னர்
உவப்ப வழிபட் டொழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்" - 203
இதன் பொருள் : பல நாட்களும் நின்றிருந்தபோதும். தான் பூத்ததற்கு உரியதான நல்ல நாளினை அறிந்தே, கணியாகிய வேங்கை பூக்கும். அதனால், மன்னர்கள் மகிழுமாறு அவரை வழிபட்டு நடந்துவந்தாலும் செல்வமானது வந்து சேரும் ஆகூழ் வரும் போதே வந்துசேரும் .
உரை : வேங்கைமணக்கும் காலம் மணம் வாய்க்குங்காலம்.அது பற்றி அதனை மணநாள் குறிக்கும் கணி என்றார் முன்றுறை அரையனார். எல்லாம் ஆகிற காலத்தில் தானே ஆகும் என்பது கருத்து.
"தொகற்பால போழ்தே தொகும்" என்ற பழமொழியைக் கொண்டு எழுதப்பட்ட வெண்பாவே நாம் மேற்கண்ட 203 ஆம் பாடல்.
அன்புடன்,
பெஞ்சமின் பிராங்கிளின் பெ
2 மேழம் 2021
(15/04/2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக