அம்மா என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் விளக்கம்.
முல்= வளைவுக்கருத்து வேர்
முல்=பொருந்தற் கருத்து வேர்
முல்>மல்>மர்>மரு>மருமம்
மருமம் என்றால் 1. உயிர்நாடியான உறுப்பு 2. மார்பு 3. முலை 4.விதைப்பை 5. மறைபொருள் 6. உடம்பு என்ற பொருள்கள் உண்டு.
மருமம்>மம்மம்>அம்மம்
அம்மம்= பெண்முலை, தாய்ப்பால், குழந்தையுணவு
அம்மம்>அம்ம>அம்மா (விளிச்சொல்)
உசாத்துணை நூல்: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (சுருங்கப் பதிப்பு)
நட்புடன்
பெஞ்சமின்
௨௭-மடங்கல்-௨०௫௧
(12-செப்டம்பர்-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக