அருளியாரின் "வேரும் விரிவும்-1
" நூலிலிருந்து எடுக்கப்பட்டது.லேஹ்ய = இளகியம்
லேஹ்ய என்ற வடசொல் "Lik" என்ற மேலையாரிய வேர்ச்சொல் வழியில் தோன்றிய சொல். நாவால் நக்கு என்ற பொருள் உடையது.
Lik>Lick
"Lik" என்ற வேரினின்றே "Ling" என்ற வடிவும் "Lingua" என்றவாறு நாக்கைக் குறிக்கும் வடிவும், இலத்தீனத்தில் தோன்றின. "Linguist" என்ற சொல்லுக்கு, நக்குகின்றவன் என்ற பொருளும் உள்ளது. Language என்றவாறு மொழியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் "Lingua" என்பதனின்றே தோன்றியது.
இந்த லேஹ்ய என்ற சொல் வேறு.
தமிழில் இளகு என்னும் பொருள் அடிப்படையில், இளகு+இயம்>இளகியம் என்றவாறு தமிழய் புதிதாக உருவாக்கிக்கொண்ட சொல்லே இளகியம் என்பதாகும்.
சுருங்கக்கூறின், இலேகியம் என்று எழுதினால் அது சங்கதச்சொல்லின் திரிபு.
இளகியம் என்றால் குழைவுமருந்து/ நெய்யமருந்து. இது "இல்" என்னும் சிறுமை/நுண்மைக் கருத்துக்களின் வேரினின்று உருவெடுத்தது.
இல்>இலகு>இளகு= நெகிழ்வுடையதாகு
தமிழின் "இளக்கு" என்னுஞ்சொல் கிரேக்கத்தில் "Loxos" என்றும், இலத்தீனத்தில் "Luxus" என்றும் திரிபெய்தியுள்ளது.
விரிவாகக் காண,
வேரும் விரிவும் - 1
தொடர்புக்கு: திரு. அறிவன் அருளி,
தாழி புத்தகக் கடை
புதுச்சேரி
9444576660
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக