சனி, 6 நவம்பர், 2021

ஆண்டு

 

மலேசியத் தமிழ் அறிஞர் திரு வளவன் எழுதியது.


தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பெரும் பொழுதாகவும் ஒரு நாளினை ஆறு சிறு பொழுதாகவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே பகுத்து வைத்துள்ளனர். ஒரு நாள் என்பது 60 நாழிகைகளைக் கொண்டதாகும். பகல் பொழுது என்றும் இரவு பொழுது என்றும் ஒரு நாள் இரண்டு பொழுதாகப் பகுக்கப்பட்டுள்ளது. பகல் பொழுது 30 நாழிகையாகவும் இரவு பொழுது 30 நாழிகையாகவும் அளவாகப் பகுக்கப்பட்டுள்ளது.

பகல் = 30 நாழிகை
இரவு = 30 நாழிகை
ஒரு நாள் = 60 நாழிகை
60 நாழிகை கொண்ட ஒரு நாளினை இன்னும் நுட்பமாக தமிழர்கள் பகுத்துள்ளனர்.
60 தற்பரை = 1 பரை
60 பரை = 1 நொடி
60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
ஓர் ஆண்டிற்குரிய கால அளவு
2 கண்ணிமை = 1 நொடி
2 நொடி = 1 மாத்திரை
2 குரு = 1 உயிர்
2 உயிரி = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முழுத்தம்
71/2 நாழிகை = 1 சாமம்
வினை சார் சொற்கள் பெரும்பாலும் நிலத்தை உழுதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகினமையால் உழவுத் தொழிலானது தமிழரின் முதன்மைத் தொழில் என்பதை நாம் உணரலாம்.
இம் முதன்மைத் தொழிலை முதன்மைப் படுத்துவதே பொங்கலாகும். நிலவுலகத்தில் சூரியனின் ஒளி செங்குத்தாக விழுந்து ஒரு சுழல் வட்டப் பாதைக்குள் செல்லும். சூரிய ஒளி வீச்சின் ஒரு முழு வட்டமே ஓர் ஆண்டாகக் கணக்கிடப்படுகின்றது. உலகின் தெற்கில் அமைந்துள்ள சுறவக் கோடு எனப்படும் மகரக் கோட்டில் (Cape of Capricorn) தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக நகர்ந்து ஆறு மாதங்களில் சூரிய செங்குத்தொளி வடக்கு கடகப் பகுதிக்குச் செல்லும். இந்த ஆறு மாத கால நகர்ச்சியே வட செலாவகும். இதனை உத்தராயணம் என்பர். உத்தராயணம் தொடங்கும் காலம் தை மாதம் முதலாம் நாள் அளவாகையால், ‘தை ஒன்று’ மிக மிக முதன்மைக் காலமாகச் சூரிய ஒளி நகர்வில் கருதப்படுகின்றது. ‘கதிரொளிச் செலவு’ என்பதை வடமொழியில் ‘சங்கராந்தி’ என்று மிக முதன்மைக்குரிய சிறப்புக்குரிய ஆண்டுத் தொடக்கமாகையால் ‘மகா மகரசங்கராந்தி’ என்றும் இந்நாள் குறிப்பிடப்படுகின்றது.
வடமொழி மயத்தால் சுறவத்திருப்பனின்று வடக்கு நோக்கிச் செல்லும் கதிரொளி நகர்வான உத்தர அயணத்தை மறைத்தாலும் முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல வடமொழியாளர் சொல்லாட்சிகள் எங்கப்பன் குதிருள் இல்லை என உண்மை நிலைகளை வெளிப்படுத்திவிடுகின்றன.
1 குரு = 0.1666666666666667 Second
1 மாத்திரை = 0.0833333333333333 Second
1 கைந்தொடி = 0.0416666666666667 Second
1 கண்ணிமை = 0.0208333333333333/ 20.83 Moli Seconds
தமிழரின் மிக நுட்பமான இக் கணக்கு முறைகள் தொன்மையானவை. மிகத் தொன்மையான கணக்கு நெறிமுறைகளை ஆழமாக ஆய்ந்து கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் காரி நாயனார் எனும் கணக்காயர் கணக்கதிகாரம் எனும் அரிய நூலினை இயற்றினார். இப்பெருமகன் சோழ நாட்டின் கொறுக்கையூர் எனும் ஊரைச் சேர்ந்தவராவர். கால அளவு, நீட்டல் அளவு, நிறுத்தல் அளவு முதலான கணக்கியர் அளவு முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


தமிழரின் சிறுபொழுது
சிறு பொழுதுகள் மொத்தம் ஆறு. அவை காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பனவாம். இவற்றுள் காலையும், நண்பகலும், எற்பாடும் பகல் பொழுதிலும் மாலை, யாமம், வைகறை ஆகியன இரவு பொழுதிலும் அமைந்துள்ளன.

காலம் நாழிகை கால அளவு சிறுபொழுது பொழுது
விடியல் 6 மணி முதல்
காலை 10 மணி வரை 10 4 மணி நேரம் காலை பகல்
முற்பகல் 10 மணி முதல்
பிற்பகல் 2 மணி வரை 10 4 மணி நேரம் நண்பகல் பகல்
பிற்பகல் 2 மணி முதல்
மாலை6 மணி வரை 10 4 மணி நேரம் எற்பாடு பகல்
மாலை 6 மணி முதல்
இரவ 10 மணி வரை 10 4 மணி நேரம் மாலை இரவு
இரவு 10 மணி முதல்
பின்னிரவு 2 மணி
வரை 10 4 மணி நேரம் யாமம் இரவு
பின்னிரவு 2 மணி
முதல் விடியல்காலை
6 மணி வரை 10 4 மணி நேரம் வைகறை இரவு

2 முழுத்தம் = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
(பொழுது 4பகல் பொழுது + இரவு பொழுது)
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
(2 பக்கம் = வெண்பக்கம் + கரும்பக்கம்)
6 மாதம் = ஓர் அயனம்
2 அயனம் = ஓர் ஆண்டு
இவற்றை,
நிமைநொடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும் உயிரென்றார் அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம்.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலாம்
போழ்தாகங் காணாய் பொழுதி ரண்டடாய்த் ‡ தோழி
தினமாகி முப்பது திங்களாய் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
எனும் கணக்கதிராப்பாடல்கள் அருமையாக விளக்குகின்றன.
ஆங்கில கால அளவோடு ஒப்பீடு செய்தால் கீழ்க்கண்டவாறு கால அளவைக் காணலாம்.
8 சாமம் = 1 Day
2.5 நாழிகை = 1 Hour
1 நாழிகை = 0.4 Hour
2.5 விநாடி = 1 Minute
1 விநாடி = 0.4 Minute
1 விநாடி = 24 Minute
1 சணிதம் = 2 Seconds
1 உயிர் = 0.3333333333333333 Seconds
ஒவ்வொரு சிறு பொழுதும் 4 மணி நேர கால அளவாகும். 24 மணி நேரத்தை 6 ஆல் வகுத்தால் 4 மணி என விடை வரும். ஒவ்வொரு 4 மணி நேர சிறு பொழுதும் 10 நாழிகையாகும்.
1 மணி நேரம் என்பது 2 1/2 நாழிகையாகும். 2 1/2 நாழிகை யீ 24 மணி நேரம் = 60 நாழிகை. எனவே ஒரு நாள் 60 நாழிகை என்பதே கணக்கு. இவை ஒரு நாளில் நிகழும் சிறு பொழுது கணக்கு முறை.
தமிழரின் பெரும் பொழுது
ஓர் ஆண்டில் மொத்தம் 2 அயணங்கள் உள்ளன. சூரியனின் செங்குத்து ஒளி வீச்சு நகர்வு பாதையே அயணம் என்று சொல்லப்படுகின்றது என முன்னரே கண்டோம். இவ்வயணப் பாதை சுறவ மாதத்தில் தொடங்கி மீண்டும் சுறவ மாதத்திற்கே வந்து சேரும். இவ்வாறு சூரிய ஒளி நிலவுலகத்தில் நகர்கின்ற பொழுது 2 மாதங்கள் எடுக்கும் கால அளவே ஒரு பெரும் பொழுதாகும்.
பெரும் பொழுதுகள் மொத்தம் ஆறு. அவை முறையே முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர் என்பனவாம்.
சூரிய மண்டல கோளாற்றுப் பாதையில் பூவுலகம் நகர்கின்ற பொழுது சூரிய ஒளி வீச்சு இரண்டு மாதக் கால இடையில் இடம் மாறிக் கொண்டே இருக்கும். உலகம் சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற பொழுது வான்மண்டல வீதியில் விண்மீன் கூட்டங்களைக கடந்தே வரும். வான்வெளியில் சூரியனைச் சூழ்ந்து 12 ஓரை மண்டிலங்கள் இருப்பதைப் பண்டைத் தமிழர்கள் கண்டறிந் திருந்தனர். விண்மீன்கள் ஒரு கூட்டமாக ஒன்றாக இணைந்து தனித்தனி வடிவங்கள் பெற்றிலங்குகின்றன. முந்தைய தமிழ் வானியல் அறிவர்கள் வானத்தை நுட்பமாக உற்று நோக்கி கால நகர்ச்சியில் அவற்றின் வடிவங்களைக் கண்டறிந்து அவற்றைக் கோடிட்டு இணைத்து வரைந்து காட்டி வடிவத்திற்கேற்றவாறு பெயரும் சூட்டினர். சூரியனைச் சுற்றி உலகம் சுழல்கின்ற பொழுது சூரியன் ஒவ்வொரு ஓரை மண்டிலத்திலும் சூழல் பாதையில் புகுந்து கடந்து செல்லும். இவ்வாறு ஓர் ஓரையிலிருந்து மற்றோர் ஓரையைக் கடப்பதற்கு ஒரு வட்டமானது 360 பாகையாகும். 360 முழு வட்டப் பாகையை 30 ஆல் வகுத்தால் 12 என விடை வரும். வான் வீதியில் சூரியன் மிகச் சரியாக 12 ஓரை மண்டலங்களையே கடந்து வருகின்றது. சூரியனின் நகர்கின்ற விரைவு மாறுபடுகின்ற கரணியத்தால் கடப்புச் செலவு 30 பாகையாக இருந்தாலும் கடப்பு நாள்களின் கால அளவு ஒவ்வோர் ஓரையிலும் மாறு பட்டிருக்கும்.
தமிழர்கள் கண்டறிந்த 12 ஓரைகளுக்கும், பண்டை நாளில் தூய தமிழ்ப் பெயர்களையே சூட்டினர். அவை முறையே,
வ.எண் ஓரைப் பெயர் வடிவம்
1. சுறவம் சுறாமீன்
2. கும்பம் குடம்
3. மீனம் மீனம்
4. மேழம் ஆடு
5. விடை எருது
6. ஆடவை இரட்டையர்
7. கடகம் நண்டு
8. மடங்கல் சிங்கம்
9. கன்னி இளம்பெண்
10. துலை துலாம் (தாரசு)
11. நளி தேள்
12. சிலை வில்
ஓரை என்பது ஒரு கூட்டுக்குள் ஒன்றாகச் சேர்ந்துள்ள விண்மீன் தொகுதி யாகும்.
ஓர் + ஐ = ஓரை. இவ்வோரை எழும் தூய செந்தமிழ்ச் சொல்லே கிரேக்க மொழியில் Hora எனப் பயில்கின்றது. தமிழிலிருந்தே இச்சொல் அங்கு சென்றது. இலத்தீன் மொழியில் வழங்கும் அனைத்து ஓரைப் பெயர்களும் தமிழிலிருந்து அப்படியே மொழி பெயர்க்கப்பட்டவையே.
1. Capricorn - the goat - homed = shark
2. Aquarius - water - bearer = pitcher
3. Pisces - fish
4. Aries - ram
5. Taurus - bull
6. Gemini - Twins
7. Cancer - crab
8. Leo - lion
9. Vergo - virgin
9. Libro - balance
10. Seorpin - Scorpion
12. Sagittarius - archer - a bow.
தமிழர் கண்ட ஓரை மண்டில வடிவத்துடன் இவை முற்றிலும் ஒத்துள்ளன. தமிழ் ஓரைப் பெயர்கள் பண்டை தமிழ் இலக்கியங்களில் பயிலப்பட்டிருப்பதால் இவை முழுக்க முழுக்க தமிழரால் கண்டறியப்பட்டவையே. தமிழரின் இசை, மருத்துவம், கணக்கியல் முதலான நுண்ணறிவியலைக் கொண்டு சென்றது போலவே தமிழரின் வானியல் அறிவையும் மேற்கத்தியர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
பன்னிரு ஓரைகளும் நாள்களும்
வ.எண் ஓரை நாள்கள்
1. சுறவம் 29 நாள் 27 நாழிகை 24 விநாடி
2. கும்பம் 29 நாள் 48 நாழிகை 24 விநாடி
3. மீனம் 30 நாள் 20 நாழிகை 21 விநாடி
4. மேழம் 30 நாள் 55 நாழிகை 12 விநாடி
5. விடை 31 நாள் 24 நாழிகை 12 விநாடி
6. ஆடவை 31 நாள் 36 நாழிகை 38 விநாடி
7. கடகம் 31 நாள் 28 நாழிகை 12 விநாடி
8. மடங்கல் 31 நாள் 20 நாழிகை
9. கன்னி 31 நாள் 27 நாழிகை 22 விநாடி
10. துலை 29 நாள் 30 நாழிகை 7 விநாடி
11. நளி 29 நாள் 30 நாழிகை 16 விநாடி
12. சிலை
29 நாள் 27 நாழிகை 24 விநாடி


பண்டை நாளில் தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் கால மதிப்பீட்டுக் கோட்டையும் உருவாக்கியிருந்தனர். இன்று கிரின்வீச்சு முறை பண்டைய தமிழரிடையே இலங்கோச்சக் கோடு எனவும் சூரிய உச்சக் கோடாகவும் சொல்லப் பெற்றது. இலங்கோச்சக் கோடு இலங்கைத் தீவு தெற்கில் மேலும் தள்ளி இருந்த காலத்தில் தெற்கில் சூரிய ஒளியின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்பெற்று சொல்லப் பெற்றதாகும். இதற்கும் முந்தி சூரியத் தீவுகளிலிருந்தும் இக்கோடு தொடங்கியதாகக் கூறுவர். தெற்கில் சூரியத் தீவில் தொடங்கி வடக்கில் உச்சையினி என்ற இடத்தில் இக்கோட்டிம் உச்சம் முடிவுறும். இக்கோட்டின் தொடக்கம் மகரகக் கோட்டுப் பகுதியே. இம்மகரக் கோடு சூரியப்பாதையின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இதனாலேயே தைமாதம் ஆண்டுத் தொடக்ககாகக் கொள்ளப்பெற்றது.


மேற்கண்ட நான்கு மாதங்களில் தை மாதம் மகரக் கோட்டிலும் சித்திரை நில நடுக்கோட்டிலும் ஆடி கடகக்கோட்டிலும் ஐப்பசி மீண்டும் நில நடுக்கோட்டிலும் அமையும்.

கீழிருந்து மேல் நோக்கி இழுக்கப்படும் செங்குத்துக் கோட்டில் கீழ்ப்பகுதியே தொடக்கமாகும். கீழிருந்து தொடங்கி வடக்கு வரை சென்று மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பும் சூரிய ஒளிப் பாதையில் நான்கு முகமையான காலக் கட்டங்கள் / மாதங்கள் கால மதிப்பீட்டில் இன்றியமையாதனவாகின்றன. 1. தை மாதம், 2. சித்திரை மாதம், 3. ஆடி 4. ஐப்பசி ஆகிய மாதங்களே அவை. இவற்றுள் சித்திரையும் ஐப்பசியும் தென்வடல் கோட்டின் நடுவிடங்களாகும். உலக உருண்டையின் முதல் அயனப்பாதையின் நடுவாக இருப்பது சித்திரை. இரண்டாவது அயனப்பாதையின் நடுவாக இருப்பது ஐப்பசி. இவ்விரண்டு காலப் பகுதியும் நடுவாக இருப்பதால் ஒக்க நாள் எனச் சொல்லப்படும். இரவும் பகலும் சமனாக இருக்கும். ஆனால் இவற்றின் இப்பாதையின் தொடக்கப் புள்ளி தை மாதமேயாகும். இந்திய நாட்டில் பல்வேறு மாநிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் இந்தக் காலங்கள் அனைத்தையுமே புத்தாண்டாகவே கொண்டாடுகின்றனர். தமிழர் குமரிக்கண்டம் என்று சொல்லப்பெறும் தெற்குப் பகுதி அதாவது தென்னாட்டு மக்களாகையால் சூரிய ஒளியின் தொடக்கப்புள்ளி காலமாகிய தை மாதத்திலேயே புத்தாண்டைக் கொண்டாடினர்.

கீழிருந்து மேல் நோக்கி இழுக்கப்படும் செங்குத்துக் கோட்டில் கீழ்ப்பகுதியே தொடக்கமாகும். கீழிருந்து தொடங்கி வடக்கு வரை சென்று மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பும் சூரிய ஒளிப் பாதையில் நான்கு முகமையான காலக் கட்டங்கள் / மாதங்கள் கால மதிப்பீட்டில் இன்றியமையாதனவாகின்றன. 1. தை மாதம், 2. சித்திரை மாதம், 3. ஆடி 4. ஐப்பசி ஆகிய மாதங்களே அவை. இவற்றுள் சித்திரையும் ஐப்பசியும் தென்வடல் கோட்டின் நடுவிடங்களாகும். உலக உருண்டையின் முதல் அயனப்பாதையின் நடுவாக இருப்பது சித்திரை. இரண்டாவது அயனப்பாதையின் நடுவாக இருப்பது ஐப்பசி. இவ்விரண்டு காலப் பகுதியும் நடுவாக இருப்பதால் ஒக்க நாள் எனச் சொல்லப்படும். இரவும் பகலும் சமனாக இருக்கும். ஆனால் இவற்றின் இப்பாதையின் தொடக்கப் புள்ளி தை மாதமேயாகும். இந்திய ஒன்றியத்தில் வாழும் பல இனத்தாரும் இந்த காலங்களுள் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் குமரிக்கண்டம் என்னும் தெற்குப் பகுதி அதாவது தென்னாட்டு மக்களாகையால் சூரிய ஒளியின் தொடக்கப்புள்ளி காலமாகிய தை மாதத்திலேயே புத்தாண்டைக் கொண்டாடினர்.

மேற்கண்ட நான்கு மாதங்களில் தை மாதம் மகரக் கோட்டிலும் சித்திரை நில நடுக்கோட்டிலும் ஆடி கடகக்கோட்டிலும் ஐப்பசி மீண்டும் நில நடுக்கோட்டிலும் அமையும்.

திரு வளவன்
மலேசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக