மக்களுள், மிகக் குள்ளமானவனுக்குக் குறளன் என்றும், சிறிது குள்ளமானவனுக்குச் சிந்தன் என்றும், அளவாக வளர்ந்தவனுக்கு அளவன் என்றும், நெட்டையானவனுக்கு நெடியன் என்றும், மிக நெட்டையானவனுக்குக் கழிநெடியன் என்றும் பெயர்.
இம் முறையையொட்டிச் செய்யுளடிகளுள் இருசீரடிக்குக் குறள் என்றும், முச்சீரடிக்குச் சிந்து என்றும், நாற்சீரடிக்கு அளவு அல்லது நேர் என்றும், ஐஞ்சீரடிக்கு நெடில் என்றும், அறுசீரும் மேலும் கொண்ட அடிக்குக் கழிநெடில் என்றும் பெயரிடப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக