இன்றியமையாத என்ற தமிழ்ச்சொல் நமது வாழ்வில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் சொல். ஆனால் இச்சொல் சற்றே நீளமானதாக உள்ளது. ஆகையால் பலரும் இச்சொல்லைத் தவிர்த்து "முக்கியம்" (இதன் மூலமும் தமிழே என்கின்றனர் அறிஞர்கள்) என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். இன்றியமையாத என்ற சொல்லுக்கு வேறு ஏதேனும் இணையான தமிழ்ச்சொல் இருக்குமா என்று பல நாள்கள் நான் எண்ணியதுண்டு. இன்று அதற்கான விடை பாவாணர் எழுதிய சொல்வாய்வுக் கட்டுரைகள் என்ற நூலில் கிடைத்தது.
அந்த நூலிலிருந்து நான் படியெடுத்தது கீழே உள்ளது.
பண்டைக்காலத்தில் தமிழை வளர்த்தற்குப் பாண்டியர் நிறுவிய கழகங்கள் மூன்று; அவை தலை, இடை , கடை என்னும் அடைமொழி கொடுத்துக் கூறப்படுவன. அவற்றுள், தலைக்கழகத் திலக்கணமாயிருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழுவிலக்கணமாயிருந்ததினால், தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கே இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வரவேண்டுமாயின், அவரைத் “தாங்கள் அகத்தியமாய் வர வேண்டும்’’ என்றழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
28- கடகம் - 2021
(13-08-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக