சனி, 6 நவம்பர், 2021

சாதி

 யா= சேர், கூடு, திரள், பெருகு

யா>ஆ (ஒப்பு நோக்குக: யானை>ஆனை, யாசை>ஆசை, யாடு>ஆடு)

ஆகு> (Latin) augeo > (English) augment

ஆ+அர்> ஆர் = சேர், கூடு, நிறை, திரள்

ஆர்>சார் = கூடு, செறி, ஒன்று , இணை

சார்+து>சார்+(த்)>து>சார்த்து= கூட்டு, பொருத்து
சார்த்து> சாத்து = கூட்டம்
சாத்து= வணிகர் கூட்டம்
சாத்துவன் = வணிகன்
சாத்து+இடம் = வணிகர் தங்கும் விடுதி
சாத்து+ இடம்>சாத்திரம்>சத்திரம்

சாத்து= குழு, கூட்டம்
சாத்து+ இ> சாத்தி>சாதி = குழு, கூட்டம்

காண்க : 1) "நீர்வாழ் சாதியும் அது பெறற்குரிய" (தொல்காப்பிய மரபு:44)
2) "நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே" (தொல். மரபு: 64)
3) "பறவைச் சாதியன்ன" (தொல்.மரபு: 229)

சாதி= பிரிவின் தொகுதி, வகை

"அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி"
(சிலம்பு: 8: 39-41)

சாதி என்பது கூட்டம், திரள், ஒன்றன் இனம், ஒன்றன் இனப்பிரிவு, வகை என்னும் பொதுவகைப் பொருள்களிலேயே கடைக்கழகக்காலத்தில் பயிலப்பெற்றது. இம்மேற்குறித்த எல்லை அளவிலேயே "சாதி" என்பது தமிழ்ச்சொல் என்னும் தகைமையோடு மாசுமருவின்றி நிற்கிறது.

விரிவாகப் படிக்க : வேரும் விரிவும் -1
ஆசிரியர் : ப.அருளி

(இவர் ஒரு சொல்லாய்வு அறிஞர். பாவாணரின் மாணவர். பெருஞ்சித்திரனாரின் மருமகன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக