கிழார்
அருளியாரின் " தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள்" என்னும் நூலிலிருந்து எடுத்தது.
கெழுதகை = உரிமைத் தகுதி
"விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்" - குறள் 804
கெழுதகைமை = நட்புரிமை
1. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும் - குறள் 700
2. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்- குறள் 802
கெழுமை = உரிமை
கெழுமை>கெழமை>கிழமை= உரிமை
"உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்- குறள் 785
கெழு>கிழு>கிழு+அவு>கிழவு=உரிமை
கிழவு+அது>கிழவது =உரியது
"குழவி மருங்கினும் கிழவது ஆகும்" (தொல்.பொருள்:2:24)
கிழவு+அன்>கிழவன் = உரியவன், உரிமையாளன்
"செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்"- குறள் 1039
கிழவன் = தலைவன்
"கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல்" (தொல்.பொ: 192)
"கிழவி நிலையே வினையிடத் துரையார்" (தொல்.பொருள்: 186)
கிழார் = நில உரிமையாளர், பெருநிலக்காரன், வேளாளர் பட்டப்பெயர்
கிழு+அத்தி>கிழத்தி= உரியவள், தலைவி
கெழு= கூடு, பெரிதாகு
கெழு>கிழு>கிழு+அவு>கிழவு= முதிர்கை, பெரிதாகுகை
கிழவு+அன்> கிழவன் = முதியோன்
கிழமை = முதுமை (சூடா.நிக)
கிழு+அடு>கிழடு = முதுமை
கிழு+அம்>கிழம்= முதுமை
விரிவாகக் காண,
தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள்.
தொடர்புக்கு: திரு. அறிவன் அருளி,
தாழி புத்தகக் கடை
புதுச்சேரி
9444576660
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக