சனி, 6 நவம்பர், 2021

பெ & பே

 சில எளிய தமிழ்சொற்கள்:


வரிசை = பெ & பே



பெள் என்றால் விருப்பம் என்று பொருள். அந்த வகையில் பெட்டார் என்று ஒரு தமிழ்ச்சொல் உள்ளது.


பெட்டார் = Friend or Lover


ஏதேனும் ஒரு துறையில் மிகவும் புகழ் பெற்றவர்களை நாம் Celebrity என்று ஆங்கிலத்தில் கூற வேண்டியதில்லை. பெயராளி என்று தமிழிலேயே கூறலாம்.

பெயராளி = person of great celebrity

அதுபோலவே சிறப்புடையோரை பெருக்காளர் எனலாம்.

பெருக்காளர் = grandness, noblemen


பெண்களுக்கு மாதவிலக்குக் காலத்தில் அதிக அளவில் குருதி இழப்பு ஏற்படும் நோய்க்கு பெரும்பாடு என்று பெயர்.

பெரும்பாடு = Excess menstruation

அச்சம் என்ற சொல்லுக்கு இணைச்சொற்கள் பே, பேடி மற்றும் பேம் ஆகும்.

பே = அச்சம்
பேடி = அச்சம்
பேம் = அச்சம்

தவளைக்கு நுணல் என்ற பெயர் உண்டு. கூடவே பேகன் என்ற பெயரும் உண்டு.

பேகன் = ஆண் தவளை
பேகி = பெண் தவளை

இப்போது திருநங்கைகள் என்கிறோமே! அவர்களுக்கும் தமிழில் தனிப்பெயர் உள்ளது.

பேடன் = ஆண் தன்மை மிகுந்த திருநங்கை

பேடி = பெண் தன்மை மிகுந்த திருநங்கை

அறுபது ஆண்டுகள் கொண்ட காலத்தை பேராண்டு என்பர்.
அப்படியெனில் ஆறுபதாங் கலியாணம் என்று கூறுவதை, இனி பேராண்டு விழா எனலாம்.

பேராண்டு = அறுபது ஆண்டுகள் கொண்ட காலம்

பேரியல் = Noble Character




மேற்கண்ட சொற்களை நாம் மனதில் பதிய வைத்து, நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம்.

எளிய சொற்களே நிலைத்து நிற்கும்.



இவண்,

பெஞ்சமின் பிராங்கிளின் . பி
11- கடகம் - 2021
(27-7-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக