சனி, 6 நவம்பர், 2021

விடுதலை வேண்டும்

 பாவலரேறு பெருஞ்சித்திரனார்

( 1933 - 1995 )

விடுதலை வேண்டும்
அது முதல் வேலை
வேறெந்த வேலையும்
செய்யலாம் நாளை.
+++++

முன்புதை யுண்டஎம்
முத்தமிழ்ச் சிறப்பினை
மன்பதைக்கு உணர்த்தல்எம்
மண்ணுயிர் வாழ்க்கை.
+++++

ஓய்ந்திடல் இல்லை; என் உள்ளமும்
உணர்வும், உயிர்ச் செறிவும்
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும்
தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என் உடலும்
எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன்
உரைப்பேன், மக்களுக்கே!
+++++
பாவலரேறு ஐயாவின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக