அருளியார் கூறும் "அரசன்" என்ற சொல்லுக்கான விளக்கம்.
உரவன் என்றால் வலுவடைய என்று பொருள். புறநானூற்றில் "உரவோரும்பல்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதன் பொருள் வலுவைடைய கூட்டத்தின் தலைலன் என்பதாகும்.
உ>ஒ> அ விதிப்படி,
உரவன் > ஒரவன்> அரவன் என்றானது.
ஒப்புநோக்கு: முடங்கு>மொடங்கு>மடங்கு
சமற்கிருத மொழியில் அரவான் என்ற பெயர் ஒரு வலுவுடைய அரக்கனுக்குச் சூட்டப்பட்டுள்ளது என்பதையும் காண்க.
இராவ் என்று பிற மாநிலத்தார் பெயர் சூட்டுவது நாம் அறிந்ததே. அப்பெயர் தமிழின் அரவன் என்ற சொல்லின் குறுக்கமாகும்.
அரு>அரை .
அரை என்றால் அரசன் என்றுதான் பொருள்.
அரை+அன்>அரையன்
உயிர்>உசிர்
நெயவு >நெசவு
என்பது போல் அரையன்>அரைசன் >அரசன் எனப்பட்டான்.
அரசன் = வலிவானவன்
அரைசியல் என்றால் Politics என்று பொருள்.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்- சிலப்பதிகாரம்
கட்டுதல் என்றால் வெட்டுதல் என்பது பொருள். களைகட்டுதல் என்றால் களையை வெட்டுதல் ஆகும். இந்த வெட்டு என்ற சொல் ஆங்கிலத்தில் cut எனப்பட்டது.
அரசன் > Arch என்று மேலை மொழிகளில் திரிந்தது.
Archeology = அரசன் காலத்து வரலாறு
Arch Bishop = தலைமை ஆயர்
இலத்தீன்/ கிரேக்கத்தில்,
Regina = அரசி
Regis, Rex = அரசன்
Regiment = அரசனின் படை
Regional = அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி
சமற்கிருதத்தில்,
Regi>ராஜ்
கூடுதல் தகவல்:
ஒவ்வு = பொருந்து
ஒவ்வியம்> ஓவியம்
(கண்ணால் காண்பதை ஒத்து வரைவது)
செத்து= கருதி, எண்ணி
செத்து>செத்திரம்>சித்திரம்
(நாம் மனதில் நினைப்பதை வரைவது)
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக