பழங்காலத்தில் உழைப்பிற்கான ஊதியமானது, கூலமும் உப்புமாகக் கொடுக்கப் பட்டது. கூலம் என்றால் தானியம். கூலத்திற் சிறந்தது நெல்.
நெல்வகையில் சிறப்பான ஒரு வகை நெல்லே சம்பா என்பது. சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுவர்.
நெல்லையும் உப்பையும் ஊதியமாகக் கொடுத்ததால், ஊதியத்திற்கு சம்பளம் என்ற பெயர் உருவாயிற்று.
‘உப்புக்கு உழைத்தல்' , “உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’ என்னும் சொற்றொடர்களானது, ஊதியத்திற்கு உழைத்தல், கூலி கொடுத்தவரை என்றுமே மறவாதே என்ற பொருளில் அமைந்த சொற்றொடர்களே.
ஆங்கிலத்தில் உள்ள salary என்ற சொல்லும் salt என்ற சொல்லிருந்து கிளைத்ததே. பண்டைய உரோமைப் பேரரசு தனது படைவீரர்களுக்கு ஊதியமாக உப்பினைக் கொடுத்துள்ளது. இலத்தீனத்தில் sal என்றால் உப்பு. இது பிரான்சியத்தில் salaire என்றாகி ஆங்கிலத்தில் salary என மருவியது.
- பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் என்ற நூலிலிருந்து,
நன்றியுடன்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
28- கடகம் - 2021
(13-08-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக