காவிரியாற்றின் இடையே 'ஹொகெனகல் என்னும் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளதன்றோ? கல் பாறையில் விழும் நீர்த் துளிகள் மேலெழுந்து புகைபோல் காணப்படுவ தால் இந்த நீர் வீழ்ச்சிக்கு இப்பெயர் ஏற்பட்டது என்பதும், ஹொகெ’ என்னும் கன்னடச் சொல்லுக்குத் தமிழில் புகை என்பது பொருள் என்பதும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. . கன்னட ஹொகெ’ என்பதும் தமிழ்ப் புகை' என்பதும் ஒரே சொல்லே யாகும். புகை என்பது தமிழின் எழுத்து வழக்கு; ஹொகெ என்பது தமிழின் பேச்சு வழக்கை ஒட்டியதாகும். இதற்கு உரிய விளக்கம் வருமாறு: தலை என்னும் தமிழ்ச் சொல், பேச்சுத் தமிழில் 'தலெ’ எனப்படுகிறது; இது கன்னடத்தில் தலெ’ என எழுத்து வழக்காக உள்ளது-என்பது முன்னரே கூறப் பட்டுள்ளது. எழுத்துத் தமிழில் தலை, மலை முதலிய சொற்களின் இறுதியில் உள்ள 'ஐ' என்பது, பேச்சுத் தமிழிலும் எழுத்துக் கன்னடத்திலும் தலெ, மலெ என "எ வாகத் திரிகிறது. இவ்வாறே, புகை என்னும் சொல் பேச்சுத் தமிழிலும் எழுத்துக் கன்னடத்திலும் 'பொகெ' என வழங்லப்படும். சரி-'கை' என்பது கெ’ என்றாயிற்று: 'பு' என்பது பொ' ஆனது எப்படி என்ப தையும் காண வேண்டும்: - 'உ' என்பதோ, அல்லது, மெய்களின்மேல் 'உ' ஏறிய உயிர் மெய் எழுத்துகளாகிய கு.சு,து,து,பு,மு என்னும் மொழி முதலில் வரும் எழுத்துகளுள் ஒன்றோ ஒரு சொல்லின் முதல் எழுத்தாக இருக்க வேண்டும். அச் சொல்லின் இரண்டாவது எழுத்தாக, மெய்யெழுத்து களின் மேல் அ, ஆ, ஐ ஏறிய உயிர்மெய் எழுத்துகளுள் ஏதாவது ஒன்றிருப்பின், மொழி முதலில் உள்ள உ’ என்பது பேச்சு வழக்கில் ஒ எனத் திரியும். இது கொச்சை உருவமாகும். எழுத்து வழக்கில் இவ்வாறு திரியாது. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு : உழவு = ஒழவு, உலாத்துதல் = ஒலாத்துதல், உடை = ஒடெ, குழவி=கொழவி, குழாய்=கொழா, குழை = கொழெ, சுடலை = சொடலெ, சுறா = சொறா சுனை = சொனெ, துடை= தொடெ, துலாம் = தொலாம், துணை = தொணெ, நுகத்தடி = நொகத்தடி, நுணா= நொணா, நுரை= நொரெ, புலம்பு = பொலம்பு, புறா = பொறா, புகை = பொகெ, முழம் =மொழம், முலாம்= மொலாம், முனை = மொனெ-இவ்வாறு இன்னும் பல காட்டலாம். இத்தகைய பேச்சு வழக்காற்றின்படி புகை' என்பது பொகெ’ என்றாயிற்று. கன்னடத்தில் பொகெ என்று தானே இருக்க வேண்டும். ஹொகெ என்றிருக் கிறதே-என்று வினவலாம். இதிலே ஒரு திரிபு உள்ளது. தமிழில் உள்ள பகர வரிசை எழுத்துகள் கன்னடத்தில் ஹகர வரிசை எழுத்துகளாக மாறும். இதற்கு உரிய எடுத்துக்காட்டுகள் சில வருமாறு :
அ ப்ப ள ம்=ஹ ப்ப ள ம், பால்=பாலு=ஹாலு, பணம்= ஹண, (கன்னடத்தில் மெய்யெழுத்து ஈற்றில் வராது). பேன்=பேனு = ஹேனு, ப ல் லி = ஹ ல் லி, பல் = பல்லு = ஹல்லு, பத்து-ஹத்து, பலகை-பலகெ - ஹலகெ, பகை - பகெ=ஹகெ, பித்தளை-பித்தளெ-ஹித் தளெ, பிட்டு=ஹிட்டு, பெண்-பெண்ணு=ஹெண்ணு, பாடு=ஹாடு. இவ்வாறு இன்னும் பல உண்டு. இந்த் அடிப்படை யில், புகை என்பது தமிழில் பொகெ’ என்று ஆக, கன்ன டத்தில் ஹொகெ’ என்றாயிற்று-எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக