சொல்லாய்வு அறிஞர் ப. அருளியார், தனது உடல் தொய்வுற்ற நிலையிலும், தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது கூடவே "காரணம்" என்னும் திங்கள் இதழையும் வெளியிடத் துவங்கியுள்ளார். அதன் முதல் பதிப்பில் காரணம் என்ற தமிழ்ச்சொல்லுக்கான விளக்கத்தைத் தந்துள்ளார்.
[கரு>] கார் + அணம் > காரணம்
அணம் = சொல்லாக்க ஈறு
முதலில் சில புணர்ச்சிகளை ஒப்புநோக்குவோம்.
அரு+உயிர் = ஆருயிர்
இரு+அளபு = ஈரளபு
இரு+ அறிவு = ஈரறிவு
ஒரு + இணர் = ஓரிணர்
ஒரு + இலை = ஓரிலை
அதுபோலவே ,
கரு + இருள் = காரிருள்
கரு+ அணல் = காரணல்
கரு + அரும்பு = காரரும்பு
கரு + ஆடு = காராடு
கரு +ஆளர் = காராளர்
கரு + ஆன் = காரான்
கரு+ ஏறு = காரேறு
தடங்கலற்ற இனிய ஒலிப்பேந்துதலுக்காகவே மேற்குறிப்பிட்டவைகளில், குறில் நெடிலாக மாறியுள்ளதை நாம் காண இயலும்.
இதே அடிப்படையில் கரு+ அணம் = காரணம் என்றாகியுள்ளது.
கரு என்ற சொல்லுக்கு கருமை, செயல் போன்ற வேறு பொருள்களும் உள்ளன.
அதுபோலவே அதிகாரம் என்ற சொல் குறித்தும் அருளியார் கீழ்க்கண்டவாறு உரைத்துள்ளார்.
கரு என்னும் முதனிலைச் சொல்லின் நீட்சியே கார் ஆகும்.
[ கரு> ] > கார்
கார் +அம் >காரம்.
இதுன் அடிப்படைப் பொருள் கருவே.
திருக்குறளித்.ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் உள்ளன. அந்த பத்துப்பாக்களும் ஒரே கருத்தைக் கொண்டன. அந்தக் கருத்தின் தலைப்பே அதிகாரத்தின் தலைப்பாய் உள்ளதை கவனிக்கவும்.
அதி + [ கரு > ] கார் + அம் = அதிகாரம்.
சிலம்பினைக் கருவாகக் கொண்டுள்ள காப்பியமே சிலப்பதிகாரம் எனப்பட்டது.
Church என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் குரு என்ற தமிழ்ச்சொல்லே என்பதையும் இந்த இதழில் அருளியார் எடுத்துரைத்துள்ளார்.
குரு > (Greek) Kurios = Lord
(GK) Kuriakon>= Lord's House
(Middle English) Kurikon>
(West German) Kiriman>
(Old English) Cirice > (English) Church
முன்பெல்லாம் மாதாக்கோயில், அந்தோணியார் கோயில் என்று அழைத்த தமிழர்கள் இன்று சர்ச் என்று கூறுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அந்தத் தமிழர்களிடம் |சர்ச் என்று நீங்கள் கூறும் ஆங்கிலச் சொல்லுக்கே மூலம் நமது தமிழ்ச்சொல்லான குரு என்பதுதான்" எனக் கூறுங்கள்.
இதுபோலவே Girl, Karyo, Colposcope போன்ற ஆங்கிலச் சொற்களும் தமிழிலிருந்து பெறப்பட்டவையே என்பதை எழுதியுள்ளார்.
வெறும் 20 உரூபாய் மதிப்பில் வெளியாகியுள்ள இந்த காரணம் என்ற திங்களிதழ் சொல்லாய்வில் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைக்கப்பெற்ற பேறு என்றே கூறவேண்டும்.
தொடர்புக்கு : +919444576660 & 9994125321
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
15- கடகம் - 2021
(31-07-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக