திங்கள், 22 ஜூன், 2020

அயற்சொல் அகராதி (பாகம் 3)

ப.அருளியாரின் அயற்சொல் அகராதி (பாகம் 2) நூலிலிருந்து,



1151.கிக் - உதை, மயக்கத் தாக்கம்
1152.கிச்சடி (மராத்)- காய்மா,
                                  காய்ச்சோறு
1153.கிசுமிசு (உருது)- காழில்
                                             கொடிமுந்திரி
1154.கிஞ்சித்து(cinca)- புளிமா
1155.கிஞ்சித்து(kin-cit)-கொஞ்சமாக
1156.கிட்டங்கி(தெலுங்)- கிடங்கு
1157.கிட்னி-சிறுநீரகம்
1158.கித்தம்(krta)-செய்யப்பட்ட
1159.கித்தார்-சேயாழ், நரம்பரம்
1160.கியர்-பல்லிணை
1161.கியானம்(jnana)-ஞானம், அறிவு
1162.கிரகணம்- பற்றுகை
1163. கிரகணித்தல்- ஒளிமறைவுறுதல்
1164. கிரகதோஷம்-கோள்தீட்டு
1165. கிரகபதி- கோளரசு
1166. கிரகம்- கோள்
1167.கிரகித்தல்- பற்றுதல்,
                                        உள்வாங்குதல்
1168.கிரகணம்- கதிர், ஒளிக்கதிர், ஒளி
1169. கிரந்தம்- நூல், கந்தெழுத்து
1170. கிரமம்(krama)- ஒழுங்கு,
                                               நயன்முறை
1171. கிரமி- ஒழுங்கன், ஒழுங்கி,
                                                நயனாளி
1172.கிரயப்பத்திரம்-
                                விற்பனையாவணம்
1173.கிரயம்- விலைத்தொகை
1174. கிரவுண்ட்- நிலத்தரை,
                                              மனையிடம்
1175.கிராக்கி(உருது)- அருவிலை,
                          மிகைவிலை, அருமை,
                                      அருமைப்பாடு
1176.கிராதன்- வேடன்,
                  மலைக்குறவன், கொடியவன்
1177.கிராந்தி- கோள்சாய்வு
1178.கிராம்- நுண்ணயிரெடை,
                                           நுண்ணயிர்
1179. கிராம்பு(உருது)- கருவம்பூ,
                                   கருவம், காராம்பூ
Karnophullon(பாரசீ)~quaranful(உருது)
1180. கிராமணி- ஊர்த்தலைவன்,
                                         ஊராளி
1181.கிராமத்தான்- ஊரான், ஊரன்
1182. கிராமபோன்- இசைத்தட்டுபேழை
1183.கிராமம்- ஊர், சிற்றூர், மருத
                                                 நிலத்தூர்
1184. கிராம-முன்சீப்(அரபி)- ஊர்
                                                     நயனகர்
1185. கிராமாதிபதி- ஊர்த்தலைவன்
1186.கிராமியம்- நாட்டுப்புற நடப்பியம்
1187. கிராமியன்- நாட்டுப்புறத்தான்
1188.கிரி(kiri)-பன்றி
1189. கிரி(giri)-மலை, குன்றம்
1190.கிரிக்கெட்- மட்டைப் பந்தாட்டம்
1191.கிரியா சக்தி- கருவமாற்றல்,
                                           செயலாற்றல்
1192. கிரியை- செய்கை, வழிபாட்டுச்
                      சடங்கு, உத்தரக் கருமம்,
                                         மேற்சடங்கு
1193.கிரிஜா- சிவை, மலைமலர்
1194. கிரீடம்- மணிமுடி, முடி
1195. கிரீடாதிபதி- முடிவேந்தன்
1196. கிரீடை- விளையாட்டு, மகளிர்
                                       விளையாட்டு
1197.கிரீவம்- கழுத்து
1198. கிருகம்(grha)-வீடு, இல்லம்
1199.கிருகம்(krka)- மிடறு, தொண்டை
1200.கிருகஸ்தம்- இல்லொழுக்கம்
1201.கிருட்டிணம்- கருப்பு, மிளகு, கறி
1202.கிருட்டிணம்-இரும்பு, செப்புக்
                        கந்தகி, காக்கை, குயில்,
                                 இரலைமான்
1203.கிருட்டிணன்-காரணந்தன்,
                                                காரையன்
1204.கிருத்தம்(krta)-செய்யப்பட்டது
1205.கிருத்திகை-கார்த்திகை
1206.கிருத்திவாசன்-சிவன்
1207.கிருத்துவன்-இசையிறை
                                              மதத்தன்
1208.கிருதம்-செய்யப்பட்ட
1209. கிருதயுகம்-முதலூழி
1210.கிருதா(உருது)- முடித்தூண்,
                                              முகத்தூண்
1211.கிருபாகரன்-அருளிருப்பன்
1212.கிருபை-அருள்
1213.கிருமி- புழு, நுண்ணுயிரி, பூச்சி
1214.கிருமிநாசினி- பூச்சிக் கொல்லி,
                            நுண்ணுயிரிக் கொல்லி
1215.கிருஷ்ண சர்ப்பம்- கருநாகம்
1216. கிருஷ்ண பக்ஷம்- கரும் பக்கம்
1217.கிருஷ்ணம்- கறுப்பு, கருப்பு
1218.கிருஷ்ண மூர்த்தி- கருப்பன்,
                        கண்ணன், கருப்புருவன்
1219.கிருஷ்ணன்- கண்ணன், கருப்பன்
1220.கிருஷ்ண ஜெயந்தி- கண்ணன்
                                              பிறந்தநாள்
1221. கிருஷ்ணாயில்- மண்ணெய்
1222.கிருஷம்(krsa)- உழவு, கலப்பை,
                                                     கொழு
1223.கிருஷி- வேளாண்மை, முயற்சி
1224.கிரே கலர்- சாம்பனிறம்
1225. கில்லாடி(மராத்)- கொடுந்தீயன்,
                        கொடியோன், தகவிலான்
1226.கிலாபத்(அரபி)- தலைமைப்பதவி
1227.கிலி(தெலுங்)- பேரச்சம்
1228.கிலோகிராம்- அயிரியெடை
1229.கிலோமீட்டர்- அயிரி மாத்திரி
1230.கிளாஸ்மேட்- வகுப்புத் தோழன்
1231.கிளினிக்- மருத்துவகம்
1232. கிறிஸ்து- திருப்பூச்சன்
1233. கிறிஸ்துமஸ்- இசையிறைவன்
                      பிறந்தநாள், தோன்றனாள்
1234.கின்டர்கார்ட்டன்-குழந்தைப்பள்ளி
1235.கின்னம்(khinna)- துன்பம், கீழ்மை
1236.கின்னிக் கோழி(Guinea கோழி)-
                                புள்ளியங் கோழி
1237.கிஸ்தி(பாரசீ)- கொடுப்பினை,
                           பணமளிப்பு, நிலவரி
1238. கீ- திறவுகோல்
1239.கீதம்- இசைப்பாட்டு
1240. கீதம்- மூங்கில்
1241.கீதை- இசைப்பாத்தொகை
1242.கீர்த்தனை- சீர்த்திப்பா, ஏத்தற்பா
1243.கீல்(உருது)- கரிநெய்
1244.குக்- அடுநன்
1245.குக்கர்- அடுகலன்
1246. குகன்- குகையன், முருகன்
1247.குகை- மலைமகள், சிவை
1248.குங்குமம்- செஞ்சாந்து, சாந்தகம்
1249.குசலம்- நலம், நன்னலம்,
                                   செழிப்பு, மாட்சிமை,
                           நுண்திறம், நுண்ணுத்தி
1250.குசலன்-மீவல்லன், நனிதிறத்தன்
1251. குசினி(பிரஞ்)- சமையலறை,
                        அடுக்களை, சமைப்பறை
1252. குஞ்சம்- குன்றி
1253. குஞ்சித்தல்- கால் தூக்கி
    வளைத்தல், காற்பதங் குத்தி நிற்றல்
1254. குஞ்சிதபாதம்- தூக்கிய
               திருத்தாள், தூக்கிய பாதத்தன்
1255. குஞ்சிதம்- வளைந்திருக்கை
1256. குட் ஈவ்னிங்- நன்மாலை
1257. குட்நைட்- நல்லிரா
1258. குட்பை- போய் வருக
1259. குட்மார்னிங்- நற்காலை
1260. குட்ஸ்- பொருள்கள்
1261.குடீரம்- குடிசை
1262. குடோன்- கிடங்கு, சரக்கறை,
                                    பண்டமனை
1263.குண்டலினி- மாமாயை
1264. குண்டோதரன்- பெருவயிற்று
                                         குறுவடிவன்
1265. குணசீலன்- குணப்பண்பன்
1266.குணவதி- நற்குணத்தி,
                              நற்பண்பள்
1267. குணாதிசயம்- குண வியப்பு
1268. குத்தி(kushti)-மாறுபாடு
1269. குதர்க்கம்- வீணெதிர்ப்புரை,
                            குறுக்குரை, குந்தகம்
1270. குதூகலம்- அகக்களிப்பு, அக
                                         மகிழ்வு
1271. குதூகலித்தல்- அக மகிழ்தல்
1272. குபேர சம்பத்து- செல்வப்பேறு
1273. குபேரன்- செல்வன், நிலவன்
1274. கும்பகருணன்- கும்பக் கன்னன்
1275.கும்பகோணம்-குடமூக்கு,குடந்தை
1276.கும்பாபிஷேகம்- குடமுழுக்கு
1277. கும்பினி- குழுமம்
1278.கும்பினியார்- குழுமத்தார்
1279.குமரேசன்-குமரிறை,   
                                  குமரக்கடவுள்
1280. குமாரகாலம்- குமரப்பருவம்
1281. குமாரசுவாமி- குமரிறை,
                                        குமரக்கடவுள்
1282.குமாரராஜா- இளவரசன்
1283.குமாஸ்தா(உருது)-
                      செயல்முகவன், எழுத்தன்
1284.குமுதம்- எரியணம், சூடம்
1285. குயுக்தி- கீழகம், கீழுத்தி
1286. குர்தா(உருது)-அரைக்கைச்சட்டை
1287.குர்மா(பாரசீ)- பால்கறிக்குழம்பு
1288. குருசாமி- இறைக்கிறைவன்,
                               இறைக்குரு, முருகன்
1289. குருசு(இசுப்)- குறுக்கை
1290. குருட்டு யோகம்- குருட்டுகூழ்
1291. குருடாயில்- கரட்டு நெய்
1292. குருத்துரோகம்- குருவிரண்டகம்
1293.குருத்துவம்-குருத்தனம், பெருமை
1294.குரு தட்சணை- குருப்பரிசனம்,
                                குருக்காணிக்கை
1295. குருதி வாரம்- குருதிக்கிழமை,
                                செவ்வாய்க்கிழமை
1296. குருநாதன்- குரு நம்பி
1297. குரூப்- குழு
1298.குருமூர்த்தி- குருத்திரு மேனியன்,
                                         குருவடிவன்
1299. குருவாரம்- வியாழக்கிழமை
1300.குரூரம்- கொடுமை
1301. குரூரன்- கொடியவன்
1302.குரோதம்- கதம், சினம்,
                           வெகுண்மை, செற்றம்
1303. குரோஸ்(gross)-பன்னிரு,  பன்னிரம்
1304.குல்கந்து(பாரசீ)- முளரிப் பச்சம்
1305. குல்மால் (உருது)- புரட்டு, குழப்பவினை
1306. குல்லா (உருது)- கவிப்பு, உறைச் சிதைவல் மூய்ப்பாகை
1307.குலசேகரன்- குலத்தலைவன்
1308. குலாம் (அரபி) - அடிமை
1309. குலாலன்- குயவன்
1310. குலோத்துங்கன்- குல மேன்மையன்
1311. குலோப் ஜாமூன்(உருது)- தேங்கோளி
1312. குவலயம்- நில வளையம், நிலம்
1313.குவலயம்- குவளை, நெய்தல், கருங்குவளை, செங்குவளை
1314. குவார்ட்டர்ஸ்- குடியிருப்பூர், உறைவாரம்
1315. குவாலிட்டி- பண்பு, தனியியல்பு, நயநலக்கூறு
1316. குவிண்டால்- நூற்றயிரெடை
1317. குளுக்கோஸ்- மாச் சக்கரை
1318. குஜிலி(உருது)- அந்திக்கடை, பழம் பொருள் வணிகம்
1319. குஷ்டம்- குட்டம், தொழுநோய், சீணோய்
1320. குஷால்(உருது)- மகிழ்ச்சி
1321.குஷி (உருது)- களிப்பு, மகிழ்வு, இறும்பூது
1322.கூப்பன்- அடையாள முறி
1323.கூல்ட்ரிங்ஸ்- தண் குடிப்புகள்
1324.கூலிங் க்ளாஸ்- தண்ணாடி
1325. கூனி- கொலை
1326. கூஜா (பாரசீ)- குடக்கலம்
1327. கெக்கலித்தல் (தெலுங்)- குலுங்கிச் சிரித்தல்
1328. கெக்கலி (தெலுங்)- குலுங்கிச் சிரிக்கை
1329. கெட் அவுட்- வெளியேறு, வெளியேகு
1330. கெட்டில் (kettle)- பிடிகலம்
1331.கெமிக்கல்ஸ்-வேதுப் பொருள்கள்
1332.கெய்ன(gain)-ஈட்டப் பேறு, பயன்பேறு
1333. கெரோசீன்- மண்ணெய்
1334. கெவுனி (தெலுங்)- கோட்டை வாயில்
1335  கெஜட்- அரசிதழ்
1336. கெஸ்(guess)-உன்னிப்பு
1337. கெஸ்ட் ரூம்- விருந்தறை
1338. கெஸ்ட் ஹவுஸ்- விருந்தகம்
1339. கேக்- கட்டிகை
1340. கேசம்- தலைமயிர், முடி
1341.கேசரி- அரிமா, மடங்கல், கோளரி, கோண்மா
1342. கேசரி(மராத்)- செழும்பம் (செஞ்சாந்துப்பூ கலந்த ஒரு வகை உணவு)
1343. கேசவன்- முடியன், திருமால், சோழன்
1344. கேசு- வழக்கு
1345.கேட்- வாயில், கதவம்
1346.கேடி(known Depredator)- கொடுங்கள்ளன், பழந்திருடன், அரம்பன்
1347. கேண்டீன்- உண்பகம்
1348. கேது- சேது
1349. கேந்திரம்- வட்டநடு, நடுவம்
1350. கேப்- கவிப்பு, தலையுறை, உறைச்சிதவல்
1351. கேப்மாறி (Cap மாறி)- நயனிலி,
                             தகவிலான், கள்வன்
1352. கேபிள்- வடம்
1353. கேபினட் - அமைச்சரவை
1354.கேமிரா-படம்பற்றி, படப்பிடிப்பான்
1355.கேர்லஸ்- பொறுப்பற்ற,
                                      அக்கறையற்ற
1356. கேரட்- செம்மங்கி,
                      இன்முள்ளங்கி, செங்காவி
1357. கேரம்போர்டு- இலக்குப் பலகை
1358. கேரளம் (மலையா)- சேரலம்,
            மலையாளம்
1359.கேரியர்- ஏந்தி, தாங்கி
1360. கேரொ(gherao)- முற்றுகை,
                      முற்றுகையாரிப்பு
1361. கேலி- பகடி, ஏகடியம்,
                          விளையாட்டுப்பேச்சு
1362.கேவலம்- கீழ்மை, தாழ்வு,
           தனிமை, அவமானம், எளிமை,
             வீடுபேறு, இணையற்றது
1363. கேளி- மகளிர் விளையாட்டு
1364. கேளிக்கை- மகளிர்
         விளையாட்டு, பொழுதபோக்கு
1365. கேஸ் ஸ்டவ்- வளியடுப்பு
1366. கேஸட்- பேழில்
1367. கைக்கரத்தை- கையிழுவை
1368. கைங்கர்யம்- தொண்டு,
               அறப்பணி, கைவினை
1369. கைடு- வழிகாட்டி
1370.கைதி(உருது)- சிறையாளி,
                     தளையாளி
1371. கைரேகை- கைவரை
1372.கைலாசநாதன்- சிவன்
1373. கைலாசபதி- சிவன்
1374. கைலாசம்- களிம்பு மலை,
         மகிழ்ச்சி மலை, வெள்ளி மலை
1375.கைலி(உருது)- மூட்டி
1376.கை-லேஞ்சி(போர்த்)-
               கைக்குட்டை, கைத்துணி
1377.கொக்கோ- கருங்காவி,
            கருங்காவி விதை, கருங்காவிப்
             பொடி
1378. கொசுறு(அரபி)- குறைவு, பிசிர்
1379. கொட்டேஷன்- விலைப்புள்ளி
1380. கொத்தவால் சாவடி
          (உருது+மராத்)- காவல் நிலையம்
1381.கொப்பரை(உருது)- காட்டான்காய்
1382. கொய்யா(பிரேசி)- காழ்ப்பழம்,
                      காழ்ப்பழமரம்
1383.கொரடா (போர்த்)- சவட்டை,
              சாட்டை, குதிரைச் சாட்டை,
                        தகையர், சாட்டையர்
1384. கொரில்லா- வாலிலி
1385.கொலுசு(தெலுங்)- கலகலணி
1386. கொஸ்டின்- வினா
1387. கோ எஜூகேஷன்- கூட்டுக்கல்வி
1388. கோகிலம்- குயில்
1389. கோகுலம்- ஆயர் பாடி
1390. கோ கோ (kho-kho)- போ-போ
1391. கோச்- மாவூர்தி, ஊர்திப் பேழகம்,
                                வண்டிப் பேழகம்
1392. கோசரம்(தெலுங்)- பகரம்,
                 இணை, இணையாக, ஆக
1393. கோட்டா- பொறுப்புப் பங்கு
1394. கோட்- குப்பாயம்
1395. கோடாங்கி- கோட்டுச் சீலை,
                     வரிப்புடவை
1396. கோடீஸ்வரன்- கோடிச்செல்வன்
1397. கோணி(goni)- சணற்பை
1398. கோணி(ghoni)- பன்றி
1399. கோத்திரம்- குலமரபு, குலவழி,
                   கொடிவழி, சரவடி
1400. கோத்திரி- கோக்குலந் தோன்றி,
                            குலத் தோன்றல்
1401.கோத்திரி(gotra)- மலை
1402. கோத்திரை (gotra)- நிலம்,
          உலகம்
1403. கோத்திரை (gotra)- நிலவுலகம்
1404. கோதண்டபாணி -
       சிலைக்கையன், வில்லுக்கையன்,
       வில்லியன்
1405. கோதண்டம்- வில், சிலை
1406. கோதம் (க்ரோதம்)- சினம்
1407. கோ தனம்- கோச்செல்வம், 
           ஆச்செல்வம்
1408. கோதா- உடும்பு
1409. கோதா(உருது)- மற்களம்
1410.கோதுகலம்- அகங்களிப்பு,
                 மனநிகழ்வு
1411. கோந்து(உருது)- பயின், பிசின்
1412. கோப்பை(போர்த்)- குழிப்பை
1413. கோபன்- ஆ காவலன்,
           கோவலன், சிவன், இடையன்
1414. கோ-பாலன்- கோவலன்,
            இடையன், கண்ணன்
1415. கோபி(kopi)- சினத்தன்,
          வெகுளன்
1416. கோபிநாதன் (gopi natha)-
         கண்ணன், ஆய்ச்சியர் நம்பி
1417. கோபுரம்- பெருங்கோரை
1418.கோமயம்- சாணம், கோமூத்திரம்
1419.கோமளம்-மென்மை,எழில்,   
           இளமை
1420. கோமளா- மெல்லியள், எழிலி,
             இளமகள்
1421. கோமேதகம்- தகமணி,
                              புலிக்கண்கல்
1422. கோர்ட்- நயனகம், நயன்மன்றம்,
            வழக்குமன்றம்
1423. கோர்ஸ்- கடவை
1424. கோரம்- கொடுமை, அச்சம்+ஈனி,
           அருவருப்பு
1425. கோல்- இலக்கு, குறிக்கோள்,
             குறியிடம்
1426. கோல்டு- தங்கம், பொன்
1427. கோல்மால் (உருது)- ஏமாற்று,
              புரட்டு
1428. கோலாகலம்- கூக்குரல்,
                      ஆரவாரம்
1429. கோவணம்- நீர்ச்சீலை,
                    கவ்வணம்
1430. கோவணாண்டி-
     நீர்ச்சீலையாண்டி, கவ்வணாண்டி
1431. கோவளம்- கடற்கரைமுனை,
             தரைமுனையூர்
1432. கோவிந்தன்- திருமால்
1433.கோன்ஐஸ்கிரீம்-கூம்புபனிப்பாகு
1434. கோஷ்டி- கோட்டி, குழு, கூட்டம்,
            அவை
1435. கோஷணை- பேரொலி
1436. கோஷம்- பேரொலி, இரைச்சல்,
             முழக்கம்
1437. கௌசல்யம்- திறமை
1438. கௌசல்யா- திறத்தி,
             நுண்ணியள்
1439. கௌசிகம்- கூகை
1440. கௌசிகம்- பட்டாடை
1441. கௌடிலம்- வளைவு, குடிலம்
1442. கௌதமன்- அறிவன்
1443. கௌதமி- அறிவை, ஆமணகம்
1444. கௌபீகம்- நீர்ச்சீலை, கவ்வணம்
1445.கௌமாரி- குமரி, மாக்காளி
1446. கௌரவம்- மேன்மை, மதிப்பு,
               பெருமிதம்
1447.கௌரி- மலைமகள், சிவை,
                காளி, பொன்னிறம்
1448. கௌரி(உருது)- சோழி
1449. கௌரி- துழாய், நிலனுலகு
1450. கௌரியர்- பாண்டியர்
1451. ச்சேர்- நாற்காலி
1452. சக்கரபாணி- சக்கரக்கையன்,
          திருமால்
1453. சக்கரவர்த்தி- பேரரசன்,
             திருமால்
1454. சக்கரவர்த்தினி- பேரரசி
1455. சக்கரவியூகம்- சக்கரவுருப்
                     படைவகுப்பு
1456. சக்கராயுதன்- சக்கரப்படையன்,
              திகிரிப்படையன்
1457. சக்களத்தி - உடன்மனை,
            இணைமனை, மாற்றாம்மனை
1458. சக்கிமுக்கி(உருது)- தீத்தரு கல்,
              உரைவுக்கல்
1459. சக்தி- ஆற்றல்
1460. சக்ஸஸ்- வெற்றி
1461. சக- உடன், கூட, இணை,
          இணையான
1462. சகந்நாதன்- உலகநம்பி
1463. சகம்- உலகம்
1464. சகலபாடி- உடன் பெருமையன்,
               இணைமான்
1465. சகலம்- முழுமை, எல்லாம்,
            அனைத்தும்
1466.சகலம்- துண்டு
1467.சகவாசம்- நட்பு, தோழமை
1468. சகவாசி- நண்பன்
1469. சகஜம்- பொதுநிலை, இயற்கை,
        இயற்கைநிலை, பரவலான நிலை
1470. சகஜாலம் (Jagat jala)-
          மாயவேலை, வியந்திறம்
1471. சகா(sakha)- தோழன், உதவி
1472. சகா (saha)- பாம்புக்கொல்லி
1473. சகாயம்- துணை, விலைநயம்
1474. சகி- தோழன், தோழி
1475. சகித்தல்- பொறுத்தல்,
         மன்னித்தல்
1476. சகிதம்- உடன், கூட
1477.சகிப்பு- பொறுக்கை, மன்னிக்கை
1478. சகுணம்- நற்குணம்,
           குணத்தொடு கூடிய
1479. சகுனம்- பறவை, புட்குறி,
              குறியறிதல்
1480. சகுனி- பறவை, கூகை
1481. சகுனி- குறி பார்ப்போன்,
           புட்குறிக் கணியன்
1482. சகோதரன்- உடன்பிறந்தான்,
           அண்ணன், தம்பி
1483. சகோதரி- உடன்பிறந்தாள்,
             அக்கா, தங்கை
1484. சங்கட்டம் (sankasta)- இடைஞ்சல்,
       இக்கட்டு, நோய், இறப்புநேர வலி
1485. சங்கடம் (sankata)- வருத்தம்,
          இடுக்கண், துயர்நிலை
1486. சங்கதி- செய்தி, நிகழ்வு,
             நிகழ்ச்சி, தொடர்பு
1487. சங்க நாதம்- சங்கொலி,
            சங்கவொலி
1488. சங்கம் (sanga)- சேர்க்கை, அன்பு,
               புணர்ச்சி
1489. சங்கம் (sangha)- கூட்டம், அவை,
                கழகம், மன்றம்
1490. சங்கம் (jangha)-கணைக்கால்
1491. சங்கமம் (san-gama)- கூடுகை,
             கூடுமிடம், புணர்ச்சி, கூடல்
1492. சங்கமம்(jangama)- இயங்கு
    திணைப்பொருள், அசையுஞ்சொத்து
1493. சங்கயம் (samsaya)- ஐயம்
1494. சங்கரம் (san-kara)- சாதிக்கலப்பு
1495.சங்கரன்- உவகைப் பகவன்,
        சிவன்
1496. சங்கரன்- கலப்புச் சாதி பிறப்பன்
1497. சங்கராபரணம்- அரும்பாலை
1498. சங்கரி- சிவை, மலைமகள்
1499. சங்கலிதம் (san-kalita)- கலப்பு
1500. சங்கற்பம்- மனவுறுதி,
             கொள்கைப்பாடு
1501. சங்கற்பித்தல்- உறுதி செய்து
              கொள்ளல்
1502. சங்காசம்- ஒப்புமை
1503. சங்காத்தம் - இணக்கம், வசிப்பு,
            வதிவு
1504. சங்காத்தி (san-gat)-தோழன்
1505. சங்காதம் ( san-ghata)-கூட்டம்
1506. சங்காதம்- கூட வருவது, உடன்
               வருவது
1507. சங்கிராந்தி (san- kranti)-   
           மாதப்பிறப்பு, தைம்முதனாள்,
           பொங்கல் நாள்
1508. சங்கிருதம் (san-krta)- கலப்பு
1509. சங்கிலி- தொடர், தொடரி
1510. சங்கீதம்- இசை, இசைநூல்
1511. சங்கீர்த்தனம்- கூறுகை,
           புகழ்ந்துரைக்கை
1512. சங்கேதம்- குறி, உடன்படிக்கை,
        ஒற்றுமையுணர்ச்சி, குழூஉக்குறி,
           உறுதிமொழி
1513. சங்கை(sanka)- ஐயம், அச்சம்
1514. சங்கை (sankhya)-எண், அளவு,
             தகைமதிப்பு
1515. சங்கை (sankhya)- கணைக்கால்
1516. சங்கோசம்- கூச்சம்
1517.சச்சிதானந்தம்- மெய்யறிவின்பம்
1518. சசி- தேவர்கோன் மனைவி
1519. சசிசேகரன்- சிவன்
1520. சசிதரன்- மதியேந்தி, சிவன்
1521. சஞ்சயன்- வெற்றிக்களிப்பன்,
              பெருவெற்றியன்
1522. சஞ்சரித்தல்- நடைமாற்றங் 
          கொள்ளுதல், திரிதல்,வதிதல்
1523. சஞ்சலம்- நிலையின்மை,
            நடுக்கம், துன்பம், நோய்
1524. சஞ்சலம்- காற்று, மின்னல்
1525. சஞ்சலனம்- அச்சவழி நடுக்கம்,
           நாமந்தரு நடுக்கம்
1526. சஞ்சாரம்- செலவுலா, செலவு,
           நடைமாற்றம், இயற்கை- விடுதி,
            தீயொழுக்கம்
1527. சஞ்சாரம்- தொற்றுநோய், பிணி,
             நாகமணி
1528. சஞ்சிகை- பருவ இதழ்,
              செய்தியிதழ், நூற்பகுதி
1530. சஞ்சீவனம்- உயிர்ப்பிக்கை
1531. சஞ்சீவி- உயிர்ப்பு மருந்து,
            நன்மருந்து, சீந்தில்
1532. சட்டை ( sraddha)-மதிப்பு
1533. சட்னி(இந்தி)- அரைப்பம்,
         துவையல்
1534. சடகோபன்- ஆதன்கடுவளி 
         வென்றான், நம்மாழ்வார்
1535. சடம் - ஞானமின்மை
1536.சடாயு- கழுகு வேந்தன்
1537. சண்டம்- கொடுமை, சினம்,
            விரைவு, வலிமை
1538. சண்டம்- பெருமை
1539. சண்டமாருதம்- பெருங்காற்று
1540. சண்டாளம்- இழிகுணம்
1541. சண்டாளர்- இழிஞர், கொலைஞர்
1542. சண்டி- கொடுமையன், இடக்கன்
1543.சண்டி-கொடுமையவள்,   
         கொற்றவை
1544. சண்டித்தனம்- ஒட்டாரம்
1545. சண்முகப் பிரியை-அறுமுக
              விருப்பு
1546. சண்முகன்- அறுமுகன்
1547.சணம்(ksana)-கணம்,
             கணப்பொழுது
1548.சத்தி(sakthi)- ஆற்றல், மூன்று,
      பெருங்கொடி, கொடி நாட்டுங் குழி,
      அருள், சிவை, மலைமகள், சூலம்,
     சொல்லாற்றல், கந்தகம், நீர்முள்ளி
1549. சத்தித்தல்(chard+இத்தல்)-
            உமட்டலெடுத்தல்
1550. சத்தியநாதன்- மெய்மை நம்பி
1551.சத்தியப் பிரமாணம்-
       மெய்யுறுதியுரை, உறுதிமொழிவு
1552.சத்தியபாமா - மெய்யொள்ளி,
             மெய்யொளியள்
1553. சத்தியம் - உண்மை, வாய்மை,
          மெய்மை
1554. சத்தியவான்- வாய்மையன்
1555. சத்திரபதி- அரசன்
1556. சத்ரு- பகைவன், எதிரி
1557. சதகம்- நூற்றகம், நூற்றாண்டு
1558. சதம்- நூறு
1559. சதவீதம்- நூற்று விழுக்காடு
1560. சதா- எப்பொழுதும், அடிக்கடி
1561. சதாசிவம்- அருட்சிவம்
1562.சதாபதி- மரவட்டை
1563. சதாபிஷேகம்- நூற்று முழுக்கு
1564.சதாவதானி- நூறு நினைவேந்தி,
           நூற்றுதிறக் கவனகர்
1565. சதி(chad)- வஞ்சனை
1566. சதி (sati)-கற்புடையாட்டி,
       மனைவி, நாலாம் மீன், மலைமகள்,
         உடன்கட்டையேறல்
1567.சதியாலோசனை- வஞ்சக் சூழ்வு,
             வஞ்சகச் சூழ்ந்தாராய்கை
1568. சதுர்த்தி- நாலாம் நிலாநாள்,
                நான்காம் வேற்றுமை,
             நான்காம்நாள் மணநோன்பு
1569. சதுர்யுகம்- நாலூழி
1570. சதுர்வர்ணம்- நால்வண்ணம்
1571. சதுர்வேதம்- நான்மறை
1572.சதுர்வேதி-நான்மறை வல்லோன்
           நான்மறைப் பார்ப்பான்
1573. சதுரங்கம்- கட்டரங்கு
1574. சதுரங்கம்- நாற்கோணம்
1575. சந்தடி(தெலுங்)- இரைச்சல்,
          கூட்டம்
1576. சந்ததி- வழித்தோன்றல்,
           பிறங்கடை, மரபு, மகன், மகள்
1577. சந்தர்ப்பம்- பொருந்திய-
          பொழுதமைவு, பொருந்திய
           பொழுது, இடையிட நிலை
1578. சந்தா(உருது)- முறைக்கட்டணம்,
        உறுப்புக் கட்டணம், கட்டுத்தொகை
1579. சந்தாதார்(உருது)- கட்டணகர்,
              கட்டுந்தொகைஞர்
1580. சந்தானம்- பிறங்கடை, வழிமரபு,
             தொடர்பு
1581. சந்தானம்- அம்பெய்வு
1582.சந்தியாக்காலம்- சந்திக்காலம்,       
          மாலைநேரம்
1583. சந்தியாவந்தனம்- கதிர்ச்சந்தி
             வழிபாடு, சந்தி வணக்கம்
1584.சந்தியை(sandhya)-சந்தி
1585.சந்திரகாசன்-
          சிவக்கொடைவாளன்
1586. சந்திரகாந்தம்- நிலவில் நீர்காலி
           (நிலவில் நீர் காலுவதாகச்
            சொல்லப்படும் கல்வகை)
           நிலாக்கல், நிலாமணி
1587. சந்திரகாந்தம்- வெள்ளாம்பல்
1588.சந்திரகிரகணம்- நிலாப்பற்றம்,
            நிலாப்பிடிப்பு
1589. சந்திரசேகரன்- நிலாவேந்தன்,
          பிறைசூடி
1590. சந்திரமண்டிலம்-
                திங்கள்மண்டிலம்,
          நிலாமண்டிலம்
1591. சந்திரமௌலி- நிலாமணிமுடி,
             நிலாமுடி வேந்தன்
1592. சந்திரலோகம்- நிலாவுலகம்
1593.சந்திரன்- நிலா, நிலவு, மதி,
           நிலவன், மதியன், இடைகலை
1594.சந்திரிகா- நிலாமாள், மதியன்
1595.சந்தேகம்- ஐயம், ஐயுறவு
1596.சந்தோஷம்- மகிழ்ச்சி, உவகை
1597. சப்-இன்ஸ்பெக்டர்- துணை-
            உண்ணோட்டகர்
1598. சப்-கான்ட்ராக்ட்டர்-
               உள்ளொப்பந்தகர்
1599. சப்தசுரம்- ஏழிசை
1600. சப்தபதி- எழுபதி, எழுபதிச்சடங்கு
1601.சப்தம் (sabda)- ஒலி,சொல், பெயர்
1602.சப்தம் (sapta)-ஏழு
1603. சப்பரம் (உருது)- அரைத்தேர்,
         கூம்பில்லாத்தேர்
1604. சப்பாத்தி(துருக்)- கோந்தடை,
              கோதுமையடை
1605. சப்பாத்து(போர்த்)- மூடணி,
                மூய்ச்செருப்பு
1606. சப்பு (அரபி)- காரணம்
1607. சப்பைக்கட்டு (அரபி)-
               காரணங்கட்டியுரைக்கை
1608. சப்போட்டா (இசுப்பா)- சாம்பரப்
        பழம், உருளையிருப்பை, உருளம்
         பழம்
1609. சப்போர்ட் - துணைவு
1610. சப்மெரின் - அகநீரோடி,
             அகநீர்க்கலம், மூழ்கியோடி
1610. சப்ளை - வழங்கீடு
1611. சப்ளையர்- வழங்கி
1612. சப்ஜெக்ட்- பாடம், பாடப்பொருள்,
             உட்பொருள்
1613. சபதம்- சூளுறவு, பந்தயம்
1614. சபரன்- வேடன்
1615. சபரி- வேட்டுவச்சி
1616.சபலம்(capala)-
           நிலையில்லாவுள்ளம்,
           அலையுளம், ஊசன்மை,
          அலைவாசை, மெலிவு
1617. சபா- அவை, மன்றம்
1618. சபாநாயகன்- அவை நாயகன்,
             அவைத்தலைவன்
1619. சபாபதி- அவைப்பதியன்,
              நடவரசன்
1620. சபாஷ் (உருது)- நனிநன்று, மிக
           நன்று
1621. சபித்தல்- சாவித்தல்,
            சாவமிடுதல்
1622. சபை- சவை, அவை
1623. சம்சா- கறிப்பொதி
1624. சம்சாரம்- மனைவி, வாழ்க்கை,
            குடும்பம்
1625. சம்சாரி- அகமுடையான்,
            இல்லறத்தான், வீட்டுக்காரன்
1626. சம்பத்து (sam-pad)- செல்வம்,
           பேறு, உடைமை, செல்வன்
1627. சம்பத்து (sampat)-பொன்
1628. சம்பந்தம்- தொடர்பு, நற்றொடர்பு,
          திருமண பந்தம், மணவழியுறவு
1629. சம்பந்தி- கோள்-கொடைப்
         பெற்றோர், கோட்கொடையுறவன்,
           தொடர்பன்
1630. சம்பவம்- நிகழ்ச்சி, நேர்வு, பிறப்பு
1631. சம்பவித்தல்- நிகழ்தல், நேர்தல்
1632. சம்பளங்கி (மலையம்)-
           நக்கவாரம் (நிக்கோபார் தீவு)
1633. சம்பளம்- பணிப்பணம்,
         வினைப்பணம், தொழிற்பணம்,
        திரளம், கூலி, வழியுணா,
         வழிப்பொருள், கரை
1634. சம்பாத்தியம்- பொருளீட்டம்,
    ஈட்டுகை, நல்லீட்டம், உழைத்தீட்டுகை
1635. சம்பாதித்தல்- ஈட்டுதல்,
         பொருளீட்டுதல், உழைத்தீட்டுதல்,
            திருப்பெறுதல்
1636. சம்பாரம்- கூட்டு, கூட்டுக் குழம்பு,
           நீர்மோர், அளை, கைமரந்தாங்கி
1637. சம்பாவனை- மதிப்பு, மதிப்புச்
        செலுத்தம், வெகுமதி, அன்பளிப்பு
1638. சம்பாஷணை- அளவளாவுகை,
           உரையாடல், கலந்துரையாடல்
1639. சம்பிரதாயம்- வழிவழி வழக்கம்,
        பழந்தொன்நெறிவழி, பழநெறி,
         மரபு வழக்கம்
1640. சம்பு- சிவன், திருமால், கதிரவன்,
             நான்முகன்
1641. சம்புத்தீவு- நாவலந்தீவு
1642. சம்பூரணம்- நிறைவு, முடிவு, நிறைவராகம், ஈற்றராகம், முற்றராகம், ஈற்றுப்பெண் (பல பெண் குழந்தைகளைப் பெற்றோர், சலிப்புற்று இதுவே கடைசிப் பெண்ணாகட்டும் என்று இடும் பெயர்)
1643. சம்பூரணராகம்- நிறைவராகம்,
           முற்றராகம், ஈற்றராகம்
1644. சம்போகம்- புணர்ச்சி, நற்கூடல்
1645. சம்மதம்- உடன்பாடு, நட்பு,
             கொள்கை, கருத்து
1646. சம்மதித்தல்- உடன்படுதல்,
         ஒப்புதல், நன்கு மதித்தல்
1647.சம்மர்-கோடை
1648. சம்மன்- அழைப்பாணை
1649. சம்மாரம்(samhara)- அழிவு,
             அழிப்பு, கொலை
1650. சம்மானம்- வெகுமானம்,
       வெகுமதி, மதித்துரைப்பு, மாணிய
             நிலம்
1651.சம்மேளனம்- இணைவகம்,
          கூட்டகம், ஒன்றகம், ஒன்றிப்பு,
           கலப்பு
1652. சம்ஸ்கிருதம்- கலப்புமொழி,
          கலவைமொழி, வடமொழி
1653. சமட்டி(samasti)-தொகுதி
1654. சமபந்தி- சமவரிசை,
             இணைவரிசை
1655.சமயாசாரியார்- சமயக்குரவர்,
               சமயக்குருக்கள்
1656.சமயோசிதம்- சமயப்பொருத்தம்,
            சமயப்பொருத்த நுட்பறிவு
1657. சமர்த்து- திறமை
1658. சமர்ப்பணம்- திருவளிப்பு,
            திருப்படையல், படைப்பு
1659. சமர்ப்பித்தல்- திருவளித்தல்,
       படையலிடல், அளித்தல், படைத்தல்,
        ஒப்படைத்தல்
1660.சமஷ்டி- கூட்டமைப்பு, தொகுதி,
           குழு
1661.சமஸ்தானம்- ஆள்புலம்,
            ஆட்சிநிலம், அரசாட்சியிடம்,
             அரசகம், ஆளகம்
1662. சமாசாரம்- செய்தி
1663. சமாதானம்- அமைதி, அமைவு,
             ஒப்புரவு, இணைவாகை
1664. சமாதி- கல்லறை,
           இறைக்கட்டளை, இறைவிருப்பு,
            நொசிப்பு
1665. சமாளித்தல்(கன்னட)-
                     நிறைவேற்றிவிடுதல்
1666. சமாஜம்- அவை, அவையம்
1667. சமிக்கை- செய்கை, சைகை,
                  உறுப்பசைப்பு, தெரிகுறி
1668. சமிதி- அவைக்கூட்டம்,
              அவைக்குழு, பொறுப்பகம்
1669. சமீபம்- அண்மை, நெருக்கம்,
                  அணுக்கம், கிட்டுகை
1670. சமுசயம்- ஐயம், ஐயுறவு
1671. சமுசாரம்- உலகவாழ்க்கை,
                குடும்பம், மனைவி
1672. சமுசாரி- அகமுடையான்,
             குடியானவன்
1673. சமுத்திரம்- கடல், ஆழி
1674. சமுதாயம்- குமுகாயம், மக்கள்
          திரள், பொருள் திரள், பொது,
          மக்களாயம், பொதுச்சொத்து,
          உடன்படிக்கை
1675. சமூகம்- குமுகம்
1676. சமேதார் (உருது)- படைதியன்
1677. சமை(ksama)- பொறுமை
1678. சமை(sama)- ஆண்டு
1679. சயந்தனம்- தேர்
1680. சயம் (jaya)- வெற்றி, கதிரவன்
1681. சயம்(caya)- கூட்டம், மாலை
1682. சயம்(svayam)- தானாக
1683. சயம்பு (svayambhu)-சிவன்,
             நான்முகன்
1684. சயரோகம்- என்புருக்கி நோய்
1685. சயலட்சுமி- வெற்றித்திருமகள்
1686. சயனம்- சாயனம், சாய்கை,
       படுக்கை, படுத்திருக்கை, புணர்ச்சி
1687. சயனித்தல்- படுத்தல்,
              உறங்குதல், புணர்தல்
1688. சர்க்கரை- சக்கரை
1689. சர்க்கஸ்- வட்டரங்கு
1690. சர்க்கார்(உருது)- அரசு,
                  ஆள்வோர்
1691. சர்க்கிள் இன்ஸ்பெக்டர்- வட்ட
               உண்ணோட்டகர்
1692. சர்க்குலர்-சுற்றறிக்கை, சுற்றுகை
1693. சர்ச்- திருக்குருவகம்,
                திருக்கோயில்
1694. சர்ச்சை- நேராட்டு, உறழாட்டு,
            ஆராய்ச்சி
1695. சர்சார்ஜ்- மேல்வரி
1696. சர்ட்- சட்டை
1697. சர்டிபிகேட்- சான்றிதழ்
1698. சர்த்தித்தல்- உமட்டலெடுத்தல்
1699. சர்தார்(உருது)- மீயதிகாரி
1700. சர்ப்பம்- அரவம், பாம்பு, நாகம்
1701. சர்பத்(உருது) - நறுமட்டு
1702. சர்வகலாசாலை- பல்கலைக் 
                                                   கழகம்
1703. சர்வ சாதாரணம் - மிகப் பொது,
                                             மிக எளிது
1704. சர்வ சுதந்திரம் - முழுவுரிமை,
           முழுவிடுதலை, அனைத்துரிமை
1705. சர்வம் - முழுவதும்
1706. சர்வர் - பணியாள்
1707. சர்வவியாபி - எங்கும்
            நிறைந்தான், கடவுள்
1708. சர்வாணி - சிவை, சிவன்
                      மனைவி
1709. சர்வாதிகாரி- முற்றதிகாரி, முழு
         அதிகாரி, அனைத்ததிகாரத்தன்
1710. சர்வீஸ் - பணி, ஊழியம்
1711. சர்வே - அளக்கை, அளப்பு
1712. சர்வேசுவரன்- இறைவன்,
                                     கடவுள்
1713. சர்ஜன் - அறுவை மருத்துவர்
1714. சரகம் (பாரசீ)- வட்டாரம்
1715. சரச சல்லாபம் - காதல்
      உரையாடல், காம விளையாட்டுரை
1716. சரசம் (sa-rasa)- இனிய பண்பு,
         பகடி, ஏகடியம், காமச் சைகைகள்,
           மலிவு, தேக்கு மரம், உண்மை
1717. சரசலீலை- காம விளையாட்டு
1718. சரசு (Saras)- நீர்நிலை
1719. சரசுவதி- கலைமகள், புலமகள்
1720. சரண்டர்- ஒப்புவிப்பு
1721. சரணாகதி- சரணம் புகல்,
           அடைக்கலம் புகுகை
1722. சரணியன்- காவலன்,
                       காப்பாளன்
1723. சரவணபவன்- நாணற்காட்டுத்
                     தோன்றல், முருகன்
1724. சரவணம் - நாணற்காடு,
            நாணல், கொறுக்கை,
             நாணற்காட்டுப் பொய்கை
1725. சரளம் - மிக்கெளிமை,
           இயல்பெளிமை, தடையின்மை,
            தொடரளம், ஒழுங்கு
1726. சராசரி (பாரசீ)- இணைமேனி,
            இணைக்கிணை, பொதிணை
1727. சரித்திரம்- வரலாறு, ஒழுக்கம்
1728. சரிதம் - வரலாறு
1729. சரீர சாஸ்திரம் - உடற்கூறு நூல், 
                  உடற்கூற்றியல்
1730. சரீரம்- உடல், ஆள்
1731. சருக்கரை- சக்கரை
1732. சருமம் - தோல், தோல் பாய்,
                       கிடுகு, மரப்பட்டை
1733. சரூர் (உருது)- விரைவு
1734. சரோஜா- தாமரை
1735. சல்லாபம் - விருப்பளாவுகை,
                 காமப்பேச்சு, வினா-விடை
1736. சல்லாபன் - காமியல் உரைஞன்
1737. சல்யூட்- வணங்கல், வணக்கம்
1738. சலக்கிரீடை- புனலாட்டு
1739. சலசம் (jala-ia)- தாமரை, முத்து,
                       பாசி
1740. சலதரம்- முகில்
1741. சலம் - நடுக்கம், அசையும்
    அம்புக்குறி, சுழற்சி, இயங்குதிணை
1742. சலவை(தெலுங்)- வெளுக்கை,
            ஆடை வெளுக்கை, வெளிது
1743. சலவைக்கல் (தெலுங்)-
          வெளுப்பக்கல், மழப்புக்கல்
1744. சலனம்- அசைவு, மனத்துயர்,
      துன்பம், கால், நெஞ்சச்சிவலிங்கம்
1745. சலாம்(உருது)- வணக்கம்
1746. சலூன்- கடையகம்
1747. சவ்வரிசி (உருது)- நெய்ப்பரிசி
1748. சவ்வாது(உருது)- புழுகு,
                    நறும்புழுகு, நறும்பூதி
1749. சவ்வாதுப்பூனை (உருது)-
                          புழுகுப்பூனை
1750. சவடால்(உருது)-திமிரம், வீம்பு,
                   பொய்வீறு, வீறார்ப்பு
1751. சவண்டிப் பார்ப்பான்-
                நற்பிண்டப் பார்ப்பான்
1752. சவரம் - மழிப்பு, மழிக்கை
1753. சவரன் (ஆங்கி) - இறைப்பணம்,
            பொலன்றுப்பணம், பொலன்று,
            கட்டளைத் தங்கம்
1754. சவரி- இடுமயிர், கவரிமுடி,
                 துணைமுடி, இணைமுடி
1755. சவாப்(உருது)- விடை
1756. சவாரி(உருது)- ஓட்டுகை,
               ஏறியோட்டுகை, செலுத்துகை,
                 வண்டி,  சுற்றுச்செலவு
1757. சவால் (உருது)- வினா, கேள்வி,
                   வெல்விளி
1758.சவால்சாப்பு (உருது)- வினா
              விடை
1759. சவான் (உருது)- படைஞன்,
                    ஏவலன்
1760. சவிதா- கதிரவன்
1761. சவுக்கு (உருது)- சவட்டை,
         சாட்டை, ஓச்சை, குச்சிலை மரம்
1762. சவுசம் - கால் கழுவுகை
1763. சவுமியம்- அமைதி
1764. சவுமியன்- பெருந்தகை
1765. சவேரியார்(ஆங்கி)-
                   திருமேவிசையர்
1766. சற்குணம்- நற்குணம்
1767. சற்குரு- நற்குரு
1768. சற்சங்கம்- நற்கழகம்
1769.சன்டே மார்க்கட்- ஞாயிற்றங்காடி
1770. சன்மம்- பிறப்பு
1771. சன்மார்க்கம்- நன்னெறி
1772. சன்மானம்- வெகுமதி
1773. சன்னிதானம்- திருமுன்பு,
               இறையகம், கோயிலகம்
1774. சன்னிதி- இறையிருப்பிடம்
1775. சன்னியாசம்- துறவு
1776. சன்னியாசி- துறவி
1777. சனகன்- தந்தை
1778. சனபதி- அரசன்
1779. சனம்- மக்கள், நரல், கூட்டம்
1780. சனனம்- பிறப்பு
1781. சனனி- தாய்
1782. சனாதன தர்மம்- தொன்னெறி
                   அறவொழுக்கம்
1783. சனார்த்தனன்- திருமால்
1784. சனி- காரிக்கோள்,
               காரிக்கிழமை, தீத்துன்பம்
1785. சனீஸ்வரர் - காரிக்கோள்
1786. சஸ்பென்ஸ்- இடைநிறுத்தம்,
                 தொங்கல், கமுக்கம்
1787. சஷ்டி- ஆறாம் நாள்
1788. சஷ்டி- அறுபது
1789. சஷ்டி பூர்த்தி-அறுபதாமகவை
                          நிறைவு
1790. சஜ்ஜஷன்-கருத்தேற்றம்
1791. சாப்ட்வேர்-மென்மியம்
1792. சாக்- சுண்ணக்கட்டி
1793. சாக்கியம்- அறிவன் மதம்
1794. சாக்கியர்- அறிவர், அறிவன்
                    மதத்தார்
1795. சாக்கிரதை- விழிப்பு, கவனம்
1796. சாக்கு- சணற்பை, முரட்டப்பை
1797. சாக்குக்கட்டி- சுண்ணக்கட்டி
1798. சாக்கலெட்- பழுப்பினியம்,
                 காவிக்கண்டு
1799. சாகசம்- துணிவு, திறவினை,
                   பாசாங்கு
1800. சாகரம் -கடல்
1801.சாகித்தியம்-செய்யுள், இசைப்பா
1802. சாகிப் (அரபி)- தோழன்
1803. சாங்கியம்- மரபு வழக்கம்,
                         சடங்கு வழக்கம்
1804. சாசன பத்திரம் -
    ஆணையாவணம், ஆவணவோலை
1805. சாசனம் - கட்டளை, ஆவணம்,
    அரசாணை ஆவணம், வரிப்பட்டயம்,
     இறையிலி நிலம், அதிகார
     அடையாளம், தண்டனை,
      வேட்டுவச்சேரி
1806. சாசனம் - இறையிலியூ,
                       வலையர் சேரி
1807. சாட்சாத்து - கண்கூடாக,
                 வெளிப்படையாக
1808. சாட்சி - கண்ட சான்றாளி,
            சான்றாளி, சான்று, கரி
1809. சாட்சியம் - கூற்றுச் சான்று,
                     சான்றாளன்
1810. சாட்ணி (உருது)- அழிவு
1811. சாணக்கியம் -
                நுண்சூழ்ச்சித்திறன்
1812. சாத்தான் (அரபி)- பேயிறை
1813. சாத்தியம் - இயல்கை,
             கைகூடுகை
1814. சாத்திரம் - நூல், அறிவு நூல்
1815. சாத்துக்குடி (உருது)- சாற்றுக்
                   கனி
1816. சாத்துவிகம்- பண்பிகம்,
                நன்முறை, நற்பண்பு
1817. சாத்விகன்- நிறை பண்மன்
1818. சாதக பலன்-பிறவிப்பண்பு,
                   பிறப்பியம்
1819. சாதகம்- பயிற்சி,
        துணைக்காரணம், உதவி, வசதி
1820. சாதகம் - மறைப்பு
1821. சாதம் - சோறு
1822. சாதவாகனன் - ஐயனார்
1823. சாதனம் - கருவி,
          துணைக்கரணம், ஏது, பயிற்சி
1824. சாதனம் - இடம், நகரம்
1825. சாதனை - தினவினை முடிப்பு,
         வினைத்திறம், வெற்றிப்பேறு,
         விடாப்பயிற்சி
1826.சாதா(உருது)-பொதுவான,எளிய
1827.சாதாரணம்-பொதுநிலை, எளிது
1828. சாதித்தல்(sadh)-
           நிறைவேற்றல்,
      வினைமுடித்தல், நிலை நாட்டுதல்,
      ஒட்டாரமாய்ச் சொல்லுதல், விடாது
      பற்றுதல்
1829. சாதித்தல்(sad)-அழித்தல்,
              வெல்லுதல்
1830. சாதித்தல் (Chad)- மறைத்தல்
1831.சாது- நல்லது, துறவி,
          அமைதியன், மென்மை
1832.சாதுரியம்- வினைத்திறம்,
          நுண்திறவினை, அறிவுத்திறம்,
            நாகரிகம்
1833.சாந்தம்- அமைதி, பொறுமை,
              அடக்கம்
1834.சாந்தமூர்த்தி-அமைதிநம்பி,
             அமைதியுருவன்
1835.சாந்தலிங்கம்-அமைதியிலங்கம்
1836.சாந்தன்- அமைதியன்,   
           பொறுமையன், அடக்கத்தன்
1837.சாந்தி- அமைதி, தணிவு,
        தணிவிப்புச் சடங்கு, திருவிழா,
        பூசை, முதல் இணை விழைச்சுச்
       சடங்கு, மாற்றுச் சீர், பணிவம்மை,
        அமைவம்மை
1838. சாந்தி முகூர்த்தம்-
             இணைவிழைச்சு முழுத்தம்
1839. சாப்ஸ்-குறம்பு, குறம்புக்கறி
1850. சாப்ஃட்- மெதுவான,
             மெத்தென்ற, மீ மெதுவான
1841. சாபம்(sapa)- சாவம், சாவமொழி
1842.சாபம்(saba)-விலங்கின் குருளை
1843.சாபம்(sapa)- விலக்கப்பட்டது
1844. சாம்பியன்- மல்லன்,
           வாகையன், மறமுதல்வன்
1845. சாம்பசிவன்- அம்மையப்பன்
1846.சாம்பமூர்த்தி- அம்மை நம்பி
1847.சாம்பவம்(sambhava)- சிவனியம்
1848. சாம்பவம்(Jambava)-நாவல்
1849. சாம்பார் (மராத்)- பருப்புக்
        குழம்பு, கூட்டம்பு, இளங்குழம்பு
1850. சாம்பிராணி(மலையம்)-
                 சுராலை, தூவப்பொடி
1851. சாம்பிள் - வகைக்கூறு
1852. சாம்ராஜ்யம்- நல்லரசாளகம்,
      முற்றிறையாண்மை, பெரும்பதவி
1853. சாம்ராட்- ஒரு தனி வேந்தன்,
               மாவேந்தன்
1854. சாமந்தம்- பக்கம்
1855. சாமந்தன்- சிற்றரசன்,
            படைத்தலைவன், அமைச்சன்
1856. சாமர்த்தியம்- திறமை, ஆற்றல்,
               வல்லமை
1857. சாமரம்- கவரிவிசிறி
1858. சாமளம்- கருமை, பசுமை
1859. சாமளன்- கருப்பன், காரி
1860. சாமளை- கரும்பச்சையம்மை,
            சிவை, மலைமகள்
1861. சாமான் (பாரசீ)- அறைகலன்,
                 பொருள்
1862. சாமானியம்- பொது, சமன்,
                எளிமை
1863. சாமானியன்- பொதுவன், சமத்
             தகுதியன், எளியன்
1864. சாமி (பிராகி)- உடையான்,
      கடவுள், முருகன், தலைவன், குரு,
      மூத்தோன்
1865. சாமிநாதன்- (பிராகி+சமஸ்)-
            இறைநம்பி, இறைக்குருவன்
1866. சாமியாடி (பிராகி)-
                தெய்வமேறி, மருண்டாடி
1867. சாமுகூர்த்தம்- தீமுழுத்தம்
1868. சாமுண்டி- கொற்றவை
1869. சாமுத்திரிகம்-
          உறுப்பிலக்கணம், உறுப்பமைவு
         நூல், நன்முத்திரை நூல்
1870. சாய்ஸ்- விருப்பத்தேர்வு,
             வாய்ப்புக்கூறு
1871. சாயா(மலையாள)- தேனீர்,
             கொழுந்து நீர், தேனீரிலை
1872. சார்- ஐயா, ஐயன்
1873. சார்ட்- விளக்க வரைபடம்
1874. சார்வாகம்- உலகியம்,
             உலகியமதம்
1875. சார்ஜ்- பொறுப்பு
1876. சார்ஜன்ட்- படையாளி
1877. சாரங்கபாணி-  திருமால்,
            விற்கையன்
1878. சாரங்கம்- மான், வானம்பாடி,
            வண்டு, வீணை
1879. சாரங்கி- வில்யாழ்
1880. சாரட்- குதிரைத்தேர்,
                பரியிழுவை, பரித்தேர்
1881. சாரணர்- ஒற்றர், தூதர், திறப்பேற்றாளர்,பொதுநலப் பணிஞர்,
             பொதுத்தொண்டர்
1882. சாரதா- கலைமகள்
1883. சாரதி- வலவன், தேர்வலவன்,
               தேர்ப்பாகன்
1884. சாரம்(மலையம்)- மூட்டி
1885. சாரம்(jara)-பரத்தமை
1886. சாரம்(ksara)-சாம்பல்
1887. சாரன்- கள்ளக்காதலன்
1888. சாராம்சம்- சாரப்பகுதி
1889. சாரி- வருத்தப்படுகின்ற
1890. சாரி(cari)-வட்டமாயோடுகை,
       ஊர்திமீது செல்கை, உலாவுகை,
        நடை, நடத்தை
1891. சாரி- சூதாடுகாய்
1892. சாரி(உருது)- சீலை, சேலை
1893. சாரிகை- வட்டமாயோடுகை, பரிசெலுத்தம், முன்னோக்கிய செலவு,
       சுழற்காற்று
1894. சாரியை- பரியின் சுற்றுவரவு,
            மறவனின் முற்செலவு
1895. சாரீரகம்- உடல் தொடர்பானது
1896. சாரீரம்- இசைக்குரல், குரல்,
            இயக் குரல்
1897. சாரு(caru)- எழில், கிளி
1898. சாருஹாசன்- எழில்நகையன்,
                கவின் சிரிப்பன்
1899. சாருவாகன்- உலகியமதத்தன்
1900. சால்வை(உருது)- கம்பளிப்
          போர்வை, முடிப்போர்வை,
          வெவ்வை
1901. சால்ஜாப்பு (உருது savaal
           Jawab)-  வினாவிடை, சாக்குப்
            போக்கு, திருக்கு வேலை
1902. சாலக்காரன் - வஞ்சகன்
1903. சாலம் (jaala)- மாயை, நடிப்பு,
         கூட்டம், அவை, வலை, அரும்பு,
        குறளை, கல்வி, மருத்துவநூல்
1904. சாலம் - மதில்
1905. சாலம் - அகலம்
1906.சாலியன்-நெயவன், நெயவாடை
1907. சாலியன்- ஆடை
1908. சாலினி - தேவரோட்டி
1909. சாலேசரம்(உருது)-
       வெள்ளெழுத்து, கிட்டப்பார்வை
         (நாற்பதாம் அகவையில் வரும்
          விழிமங்கல் கோளாறு)
1910. சாலை- அறமனை,
        வேள்வியகம், குதிரைக்கொட்டில்,
         யானை ஆலை, ஆக்கொட்டில்,
         பொதுமண்டபம், அரண்மனை
1911. சாவகாசம்- ஏந்தமையம்,
  வயக்காலம், வயப்போது, ஏந்துநேரம்
1912. சாவடி(மராத்)- வழிப்போக்கர்
     தங்ககம், ஊர்ப் பொதுவகம்,
      காவல் நிலையம், சதுர முகப்பகம்
1913. சாவி (போர்த்)- தாழ்க்கோல்,
        தாழக்கோல், திறவுகோல்
1914. சாவித்திரி- கலைமகள்
1915. சான்ஸ் - நற்பேறு, நல்வாய்ப்பு
1916. சானகி- மாந்தை,
      பொன்னாங்கண்ணி, கொன்றான்
1917. சானிடோரியம்- நலம் பேணகம்
1918. சானிடரி டவல்-விடாய்த் துண்டு,
        விடாய்க் கச்சை
1919. சாஸ்தா- சாத்தன், ஐயனார்
1920. சாஸ்திரம்- நூல், பனுவல்,
       மெய்யறி பனுவல், அறிவு நூல்
1921. சாஸ்திரி- நூலோன், பனுவலன்
1922. சாஸர் - தட்டகை
1923. சாஷ்டாங்க நமஸ்காரம்-
      நெடுஞ்சாண்கிடை, வீழ்ந்தேத்தல்,
      படுக்கைப் பணிகை
1924. சிக்கி முக்கி (துருக்)-
           நெருப்புண்டாக்கும் கல்
1925. சிக்குன் குனியா (சப்பா)-
                  எரிகுன்னியம்
1926. சிக்னல்-குறியாளம்
1927. சிக்னேச்சர்- கையெழுத்து,
           கையொப்பம்
1928. சிகண்டி- மயில், திருமால், அலி,
         தொல்லையன், இவறி, கருமி
1929. சிகரம்- மலையுச்சி, மலைமுகடு,
        மலை, உயர்ச்சி, கோபுரம், தலை,
         விற்படி
1930. சிகரம்- நீர்த்துளி, அலை, மயிர்க்
                      கூச்செறிவு
1931. சிகரெட்- வெண்சுருட்டு
1932.சிகாமணி- முடிமணி,
                சிறந்தோன்
1933. சிகிச்சை- பண்டுவம்
1934. சிகை- முடி, மயிர், குடுமி,
       தலையுச்சி, கொண்டை,
      தீக்கொழுந்து
1935. சிகை - நிலுவை
1936. சிங்கம்- அரி,  அரிமா,
             சீயம்,கோளரி, கோண்மா
1937. சிங்கம்- கொம்பு, வாழைக்கன்று
1938. சிங்களம்-இலங்கை
1939. சிங்காரி- புனைவெழிலன்,
               புனைவெழிலி
1940. சிசு- சேய், குழவி
1941. சிசுபாலன்- கருமகன், குழமகன்
1942. சிட்சை- தண்டனை, பயிற்சி
1943. சிட்டா (உருது)- குறிப்பேடு
1944. சிட் பண்டு- சிறுமுறி நிதியம்
1945. சித்த-சுத்தி- சித்தத் தூய்மை,
          மனத்தூய்மை
1946. சித்த சுவாதீனம்- சித்த
            வசப்பாடு, மனத்தெளிவு
1947. சித்தப் பிரம்மை- மனமயக்கம்,
                 பித்தியம்
1948. சித்தாந்தம்- சித்தமுடிபு,
    கொண்முடிபு, முடிந்தமுடிபு, ஒட்டாரம்
1949. சித்தார் (உருது)- நரப்பரம்
1950. சித்தார்த்தன்- சித்தப்
                பொருளன், அறிவன்
1951. சித்தித்தல் - கை கூடுதல்
1952. சித்தி - கைகூடுகை,
         வென்றிப்பேறு, செடில், எட்டி,
          நிலப்பனை, வழலை,
          பொன்னாங்கண்ணி,
         துறக்கப்பேறு, வீடு
1953. சித்திரவதம்- உடலூறு செய்தல்
1954. சித்திரை- பதினான்காம்
              விண்மீன், மேழம்
1955. சித்து- மாயவேலை, திறக்காட்டு
1956. சிதிலம் - சிதைவு
1957. சிந்தகி(பாரசீ)- சொத்து
1958. சிந்துரம்- யானை
1959. சிந்தூரம்- சிவப்பு, திலகச்
           செம்பொடி, செந்தாளத் தாது,
           யானைப்புகர் முகாம், வெட்சி,
           சேங்கோட்டை, செங்குடை
1960. சிப்பந்தி(உருது)-
            வேலைக்காரர், வேலையாள்,
           பணியாள்
1961. சிப்பாய் (பாரசீ)- படையாளி
1962. சிபாரிசு (உருது)- பரிந்துரை,
             வேட்புரை
1963. சிம்மம்- அரி, அரிமா ,சீயம்,
             கோளரி
1964. சிம்மாசனம்- அரியணை
1965. சிம்ட்டம்- அறிகுறி
1966. சிம்பிள்- எளிமை, கடுமையற்ற
1967. சிமிக்கி(உருது)- நாலுங்குடை
            (நாலுதல்= தொங்குதல்)
1968. சிமென்ட்- பைஞ்சுதை
1969. சிரச்சேதம்- தலைவெட்டல்
1970. சிரசம்- தலைமயிர்
1971. சிரசு- தலை
1972. சிரஞ்சீவி- நல்லுயிரன்,
          நெட்டாயுளான், காகம், இலவு
1973. சிரத்தை- அன்பு, நம்பிக்கை, 
          ஊற்றம், கடுமுயற்சி
1974. சிரம்- தலை, உச்சி, மேன்மை
1975. சிரமம் - களைப்பு, உழைப்பு,
             கடுமை, கருவிப்பயிற்சி
1976. சிராத்தம்- நீர்ப்பிண்டப் படையல்
1977. சிராவணம்- மறைக்கேள்வித்
                 தொடக்கம்
1978. சிராவணம்(தெலுங்)- சாவணம்
1979.சிரீ- திரு
1980. சிரீதரன்- திருமால்
1981. சிருங்காரம்- காதலுணர்வு,
              காதலெண்ணம்
1982.சிருதி(sruthi)- செவி
1983. சிருஷ்டி- படைப்பு,
        படைப்புத்தொழில்,
       படைப்புப்பொருள்
1984. சிருஷ்டித்தல்- படைத்தல்,
              கற்பனை செய்தல்
1985. சிருஷ்டி கர்த்தா- படைப்பாளி
1986. சிரேசு(sreyas)-செல்வம்
1987. சிரேஷ்டம்- தலைசிறந்தது
1988. சிரோமணி- தலைமணி
1989. சில்க்- பட்டு
1990. சில்வர்- வெள்ளி
1991.சில்மிஷம்- குறும்பு
1992. சிலாகித்தல்- புகழ்தல்
1993. சிலாகை- புகழ்ச்சி
1994. சிலாதலம்- பாறை, கல்மேடை
1995. சிலாதன்- பாறையன்
1996. சிலாபிஷேகம்- கன்முழுக்கு,
            நடுகல் நீராட்டு
1997. சிலிண்டர்- உருளை
1998. சிலிப்(slip)-நறுக்கம்
1999.சிலுவை(சிரியக்)- குறுக்கை,
              குறுக்கத்தூண்
2000. சிலேட்டு- கற்பலகை

மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
30 கும்பம் 2051
[௩०/०௨/௨०௫௧]
(13-03-2020)


2 கருத்துகள்:

  1. சிறப்பான பணி. இதனைப் பலரிடம் கொண்டு செல்ல மின்னூலாகவோ எக்சல் வடிவிலோ கொண்டு வரலாம்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பணியை தொடர வேண்டாம் என்று அருளியாரின் மகன் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகையால் நானும் அயற்சொல் அகராதியை மின்னெழுத்தில் வடிப்பதை விட்டுவிட்டேன்.
    நீங்களும் இதனை படியெடுத்து வேறு தளத்தில் பகிராதீர்கள்.

    பதிலளிநீக்கு