தமிழர் இழந்த நிலம்-21
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
குமரி மண்ணில் துப்பாக்கிச்சூடு...
திருத்தணியில் கலவரம்...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில், மலையாள காவல்துறையும், மலையாளிகளும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை...
என செய்திகள் வராத நாளே இல்லை எனும் அளவிற்கு,
வடக்கிலும், தெற்கிலும்,
மேற்கிலும் மொழிவழி பிரிவினையை முன்னிறுத்தி,, கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில்...
தந்தை பெரியார் செய்தது என்ன...?
எதற்காக நீங்கள் தேவிகுளம் பீர்மேடு என்றாலே பெரியாரை இழுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
நாங்கள் எங்கே அவரை இழுக்கிறோம்... அவர்தானே தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு போனது குறித்து எனக்கு எவ்வித கவலையுமில்லை என்று தினத்தந்தியிடம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்டவர்...
அதனால்தான் அவரையும் இந்தக் கதையில் நாங்கள் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதே கேரளாவிலுள்ள
வைக்கத்தில்... நெருக்கடி முற்றுகிறது என்று தெரிந்ததும், அங்கே ஓடோடிச் சென்று, ஆதிக்க வாதிகளுக்கு எதிராக, உரத்து முழங்கிய தந்தை பெரியாரின் குரல்,,, தேவிகுளம் பீர்மேடு என்றதும் பம்மிப்பதுங்கியது ஏன்...?
வைக்கத்தில் கோவில் நுழைவு மற்றும் அது சார்ந்த விடயங்களே பிரச்சனை,,,
ஆனால் தேவிகுளம் பீர்மேடு அப்படியல்ல..
இங்கே அடி, உதை, மிதி என, வன்முறையின் அத்தனை வடிவங்களும், திருவிதாங்கூர் கொச்சி காவல்துறையால், தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், தந்தை பெரியார், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை குறித்து கொண்ட அக்கறையென்ன...?
அன்றைக்கு தமிழக முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர், பெரியாருடைய கண்ணசைவில் கடமையாற்றிக் கொண்டிருந்தார்...
இந்தியா முழுவதுமுள்ள அத்தனை தலைவர்களாலும் அறியப்பட்ட ராஜகோபாலாச்சாரியார்,பெரியாரின் உற்ற நண்பராக இருக்கிறார்...
அழைத்தால் அன்றைக்கு தமிழகத்தில் இருந்த எத்தனை பெரிய தலைவரும், தேடி வந்து பார்க்குமளவிற்கு செல்வாக்குப் பெற்றிருந்த தந்தை பெரியார்,,, ஒரு கடிதம் மற்றும் இரண்டு அறிக்கைகளோடு தேவிகுளம் பீர்மேடு குறித்தான தன்னுடைய அக்கறையை நிறைவு செய்து கொண்டது ஏன் என்பதுதான் எங்களுடைய கேள்வி...?
கடிதம் எண் 1
நாள்-ஜனவரி 21 -1956
தந்தை பெரியாரால், தமிழரசுக் கழகத் தலைவர் ம பொ சி க்கு எழுதப்பட்ட இந்தக் கடிதம்,,,
தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை குறித்து சென்னை மகாஜனத்தில் நடக்க இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில், கூடுதலாக தான் வைக்கும் கோரிக்கையை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்பதை உள்ளடக்கமாக எழுதியிருந்தார்.
-வெறுமனே தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை பற்றி மட்டும் விவாதிக்கக் கூடாது...
-இந்தி மொழி திணிப்பு
-பாதுகாப்பு போக்குவரத்து வெளிநாட்டு உறவு ஆகியவற்றை தவிர்த்து, பிற அதிகாரங்களை தமிழகத்திற்கு தனியாக கோரிப் பெறுவது...
-சென்னை மாகாணம் என்று அழைப்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவது சம்பந்தமாக...
-எல்லைப் பிரச்சனை
என அனைத்துக்குமாகச் சேர்த்து, கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முடித்திருந்தார்.
அறிக்கை எண்-2
நாள்-26-01-1956.
தேவிகுளம் பீர்மேடு குறித்து தந்தை பெரியார் விடுத்த அறிக்கை இது...
இதில் கிளர்ச்சியை எப்படி நடத்துவது, யார் யார் பொறுப்பேற்பது...
கலந்து கொள்ளக் கூடிய தலைவர்கள் யார்...என்று ஆரம்பிக்கும் இந்த அறிக்கையில், ஒரு இடத்தில் "அடிமையாக வாழ்வதைவிட எதிர்த்து அழிந்துபோகும் வாழ்வே மேலானது" என்றும் பெரியார் உணர்ச்சி வசப்படுகிறார்.
ஆனால் இந்த அறிக்கையின் கடைசியில், நாலைந்து கோரிக்கைகளுக்காக நாம் அனைவரும் சேர்ந்து நடத்தப்போகும், இந்தக் கிளர்ச்சியில்...
பலாத்காரம்,
உயிர்ச்சேதம், நாசவேலை,
பொருள் நஷ்டம்,
பொதுஜன அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு இடமின்றி நடத்துவதோடு, எதிர்பாராமல் அவை நேரிடுமானால், சமாளிக்கும்படி இருக்குமே தவிர, ஓடும்படி இருக்காது என்று முடித்திருப்பார்.
அறிக்கையின் முதல் பாராவில் பெரியார் சொன்னதற்கும், கடைசி பாராவில் கிளர்ச்சிக்காக அவர் கொடுத்த விளக்கத்திற்கும், ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை உங்களுடைய பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
அறிக்கை எண்-3
நாள்-27-01-1956.
தன்னிடம் ஒப்புக் கொண்டபடி நான்கைந்து விடயங்களுக்காக கிளர்ச்சி நடத்தப்படாமல், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளின் பிரச்சினை மட்டுமே பிரதானமாக இருப்பதாலும்... தன்னால் கலந்து கொள்ள இயலாத நிலையை குறிப்பிடுகிறார் பெரியார்.
அதாவது ம பொ சி அவர்களால் தந்தை பெரியாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ம பொ சி யையும் தன்னையும் தவிர்த்து, கையெழுத்திட வேண்டிய அந்தோனிப்பிள்ளை சுயம் பிரகாசம் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது பி.டி. ராஜன் ஆகியோர் கையொப்பம் இன்றி வெறுமனே ம.பொ.சி மட்டும்
கையெழுத்திட்டு தனக்குக் கடிதம் அனுப்பி இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதோடு,,,
தட்சிணப் பிரதேசம் பிரச்சனை பலம் பெற்றிருப்பதால், தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை செத்துவிட்டது என்றே கருத வேண்டியதாகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
இதுதான் தேவிகுளம் பீர்மேடு குறித்தான தந்தை பெரியாரின் கடிதம் மற்றும் அறிக்கைகள்...
அன்றைய நிலையில் இந்திய அளவில் அறியப்பட்ட தந்தைபெரியார், போகிறபோக்கில் ம பொ சி என்கிற ஒரு தனிமனிதருக்காக,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை உதாசீனப்படுத்துவது அல்லது உதறித் தள்ளுவது ஏற்புடையதுதானா...?
ம பொ சி கிடக்கட்டும் ஒரு மூலையில்... இதோ நானே களத்தில் முன்னின்று தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு சேர்க்கிறேன் என்று களம் காண்பதற்கு பெரியாரை தடுத்தது எது...?
தன்னோடு ஆரம்பம் தொட்டு நின்று... தென் எல்லை விடுதலைக்காகவும், தேவிகுளம் பீர்மேடு விடுதலைக்காகவும், களம் கண்டு, போராடி சிறை சென்ற,,,
திரு நத்தானியேல்
திரு ஆர்.கே.ராம்
திரு பி எஸ் மணி ஆகியோர்,மொழிவழிப் பிரிவினை யுத்தம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசை விட்டு வெளியேறியதோடு,,,
எந்தக் கட்சிக்கு எதிராக கச்சைகட்டி இத்தனை ஆண்டுகாலம் நின்றார்களோ... அந்த கட்சியான பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் போய்ச் சேர்ந்தார்கள்.
மார்சல் நேசமணி என்கிற மகத்தான மனிதன் மயங்கி விழுந்து விடவில்லை. களத்தை இன்னமும்கூட கூர் தீட்டினான்...ஐயகோ தலைவர்கள் எல்லாம் தன்னை விட்டு போய் விட்டார்களே என்று ஒப்பாரி வைக்க வில்லை... ஓங்காரம் பெருக்கெடுக்க, முன்பைவிட உக்கிரமாக எழுந்தான்.
அதனால்தான் வெறும் நேசமணி மார்சல் நேசமணி ஆனார்...
மார்ஷல் நேசமணிக்கு இருந்த அந்த தைரியம் தந்தை பெரியாருக்கு ஏன் வரவில்லை...?
இறுதியில் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை குறித்து, சர்வகட்சி தலைமையில் நடத்த இருந்த போராட்டத்தை
ம பொ சி நிறுத்தும் அளவிற்கு போனது பெரியாரின் தந்திரம்...
ஒருவேளை ம பொ சி யிடம் குறைகள் கூட இருந்திருக்கலாம். நாம் மறுப்பதற்கில்லை.ஆனால் பிரச்சனை எத்தனை தீவிரமானது என்பதை, தந்தை பெரியார் எந்த நிலையிலும், ஆரம்பம் தொட்டு கடைசி வரை உணரவே இல்லை...
துரோகம் தொடரும்...
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக