தமிழர் இழந்த நிலம்-13
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
இலங்குளம் மணக்கல் சங்கரன் நம்பூதிரி பாட் அல்லது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்...
இந்திய பொதுவுடமை சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக பொதுவுடமை சரித்திரத்திலும் அசைக்க முடியாத ஒரு பெயருக்கு சொந்தக்காரர் தோழர் ஈ.எம்.எஸ்...
உலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஜனநாயக முதல்வர் என்பதைவிட, இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மந்திரி சபையை ஒரு மாநிலத்தில் அமைத்த அளப்பரிய பெருமைக்கு சொந்தக்காரர்...
எழுத்தாளர்
பேச்சாளர் சிந்தனையாளர்
மக்கள் பணியாளர் என தோழர் ஈ எம் எஸ் க்கு பல முகங்கள் உண்டு...
நவீன கேரளத்தை உருவாக்கிய சிற்பி இந்த ஈ எம் எஸ் என்றால் அது மிகையல்ல...
ஆனால் நவீன கேரளத்தை உருவாக்குவதற்கு முன் ஐக்கிய கேரளம் என்கிற ஒற்றைச் சொல்லுக்கு பின்னால் கேரளத்தை அணிதிரள வைத்த பெருமை இந்த ஈ.எம்.எஸ் க்கு உண்டு...
இந்தியாவில் இருக்கும் கட்சிகளிலேயே விசித்திரமான கட்சி என்றால் அது ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிதான்.
ஒரு சாமானியனால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நடவடிக்கைகளை, அந்தக் கட்சி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
2011 ம் ஆண்டு முல்லைப் பெரியாறு பிரச்சனை தீவிரமடைந்தபோது குமுளி எல்லையில் நான் கண்ட காட்சிதான் அதற்கான சான்று...
தமிழக கேரள எல்லையான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியின், கேரள எல்லையில் நின்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்...
"பொட்டிப்போம்
பொட்டிப்போம்...
பெரியாறு டேமை பொட்டிப்போம்" என்று மலையாள மொழியில் பெருங்குரலெடுத்து முழங்கியபோது,,,
"காப்போம் காப்போம் பெரியாறு டேமை காப்போம்" என்று தமிழக எல்லையில் நின்று ஒரு கூட்டம் முண்டியடித்து முழங்கியது...
திரும்பிப் பார்த்தால்
இந்த முழக்கத்துக்கு சொந்தக்காரர்கள் தமிழக மார்க்சிஸ்டுகள்...
அதாவது கேரள மார்க்சிஸ்டுகள் உடைக்கச் சொல்லும் ஒரு அணையை, காக்க போவதாக முழங்கியது தமிழக மார்க்சிஸ்ட் தோழர்கள்...
இதையேதான் அவர்கள் 1956 மொழிவழி பிரிவினையின் போதும் செய்தார்கள்...
ஐக்கிய கேரளம் என்கிற கோஷத்தை முன்வைத்து தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் கேரளாவே அணிதிரண்டு, ஊர்வலங்களையும் மாநாடுகளையும் நடத்திய நிலையில்...
விசால ஆந்திரா கேட்டு தோழர் பி சுந்தரையா தலைமையில் அங்கும் ஊர்வலங்களை நடத்தினார்கள் தோழர்கள்...
தமிழகத்திலும் அவர்கள் சும்மா இருக்கவில்லை. தோழர் பி ராமமூர்த்தி மற்றும் ஜீவா தலைமையில் இங்கும் அவர்களுடைய போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கத்தான் செய்தது.
ஐக்கிய கேரளம் அமைப்பு முன்வைத்த தீர்மானங்களில் ஒன்று,இன்றைய கூடலூர், உதகை, மசினகுடி,சேரம்பாடி,எருமாடு, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்பதாகும்.
முற்றிலும் தமிழகத்திற்கே சொந்தமான கூடலூர் உதகை உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பது தமிழக மார்சிஸ்ட்களுடைய நிலைப்பாடு...
ஆனால் ஐக்கிய கேரளத்தை உருவாக்குவதில் தோழர் ஈ எம் எஸ் தலைமையிலான மலையாள மார்க்சிஸ்டுகள் நிகழ்த்திய எந்த மாயாஜாலத்தையும், தமிழகத்து மார்க்சிஸ்டுகள் நிகழ்த்தவில்லை...
தங்கள்
மண் மீதும், மொழி மீதும், கலாச்சாரத்தின் மீதும் அளப்பரிய பற்று கொண்டிருந்த மலையாள மார்க்சிஸ்டுகள்... நிலவியல் ரீதியாக தங்கள் மாநிலத்தை கட்டமைப்பதற்காக எவ்வளவு கீழே இறங்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு இறங்கினார்கள்.
ஆனால் தமிழகத்து மார்க்சிஸ்டுகள், சென்னையில் பல்லாயிரம் பேரை திரட்டி ஒரு பேரணி நடத்தி, தடியடியோடு அதை வெற்றிகரமாக நிறைவு செய்து ஓய்வுக்கு சென்றுவிட்டார்கள்.
ஆனால் தோழர் ஈ எம் எஸ் அவர்கள் ஒவ்வொரு நொடியும், ஐக்கிய கேரள கனவில் மிதந்து கொண்டே இருந்தார்.
Kottayam election tribunal 1957 ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி ரோசம்மாள் புன்னூஸின், வெற்றி செல்லாது என்று அறிவித்தபோது ஆரம்பத்தில் திகைப்பு ஏற்பட்டது தோழர் ஈ எம் எஸ் க்கு...
உடனடியாக தேவிகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலையும் அறிவித்தது கோட்டயம் எலக்சன் டிரிப்யூனல்...
தோழர் ஈ எம் எஸ் நினைத்திருந்தால்,
இப்போதாவது ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளியை, அப்பாவி தமிழச்சி ஒருத்தியை தேவிகுளம் இடைத்தேர்தலில் நிறுத்தி இருக்க முடியும். விடயம் என்னவென்றால் அதுதான் இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டமன்ற இடைத்தேர்தல்...
மறுபடியும் தோழர் ரோசம்மா புன்னூசை களத்தில் இறக்கிய தோழர் ஈ எம் எஸ்,தேவிகுளம் இடைத்தேர்தலுக்கு எந்த மந்திரியும் செல்லக்கூடாது என்று அறிவித்ததோடு...
தேர்தல் வெற்றிக் கனியை பறித்து வரும் பொறுப்பை மரியாதைக்குரிய தோழர் வி எஸ் அச்சுதானந்தனிடம் ஒப்படைத்தார்...
எதற்காக தோழர் ஈ எம் எஸ் அவர்கள், மந்திரிகளை தேவிகுளத்திற்கு அனுப்பவில்லை என்றால்,தமிழர்கள் நிறைந்த தேவிகுளம் தொகுதியில், மலையாளம் பேசும் மந்திரிகளால், தங்களுடைய வேட்பாளருக்கு பின்னடைவு வந்துவிடக்கூடாது என்கிற பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுதான் அது...
தோழர் வி எஸ் அச்சுதானந்தனும் சாதாரண நபர் இல்லை.தனக்கு கொடுக்கப்பட்ட செயல் எதுவாக இருந்தாலும் அதை முரட்டுத்தனமாக செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார். அன்றைக்கு ஒடுக்கப்பட்டு கிடந்த ஈழவ சாதியில் பிறந்தவர் என்பதால், தோழர் அச்சுதானந்தனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது... காரணம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் நிறைந்து கிடந்தது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தமிழ்மக்கள் என்கிற ஒற்றை அஜெண்டா.
(பின்னாட்களில் செங்கோட்டை அருகே மேக்கரை கிராமத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த, அடவி நயினார் கோவில் அணைக்கான நீரை, அச்சன்கோவில் ஆற்றிலிருந்து தமிழகம் திருடுவதாக குற்றச்சாட்டு சுமத்தியதோடு,நேரடியாக தன்னுடைய படை பரிவாரங்களுடன்... சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல்... மேக்கரை கிராமத்திற்கே வந்து, அணைப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை தாறுமாறாக பேசியதோடு, அணைக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட்டு,,, மாவட்ட நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கையின் பேரில் திரும்பிச் சென்றவர் தான் இந்த தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்)
திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி மூணாறுக்கு சென்ற தோழர் வி எஸ் அச்சுதானந்தன் கண்களில் முதலில் பட்டது,,, அன்றைக்கு தமிழ் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன்...
ஒரு படப்பிடிப்பிற்காக மூணாறு சென்றிருந்த எம் ஜி ராமச்சந்திரனை, இரவோடிரவாக சந்தித்தார் தோழர் வி எஸ் அச்சுதானந்தன்...
பிறப்பால் மலையாளியான புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன், தான் ஒரு பரம்பரை காங்கிரஸ் கட்சிக்காரன் என்று சொல்லியும் கதை நடக்கவில்லை...
ஒரு சினிமா நடிகரை பார்ப்பது என்றால் செத்துக் கிடக்கும் இந்தக் காலத்தை விட, அந்தக் காலத்தில் அவர்களுக்கு மவுசு அதிகம்...அதுவும் மேக்கப் போடாமலேயே அழகாக இருக்கும் எம்ஜிஆர் என்றால் கேட்கவா வேண்டும்...
பாவலர் வரதராஜன் தலைமையிலான இசைக்குழு முன்னால் பாடிக்கொண்டு செல்ல, பின்னால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு கேட்டு சென்றது புரட்சி நடிகர் எம் ஜி ஆர்... அன்றைக்கு இளையராஜாவுக்கு வயது 14...
பாவலர் வரதராஜன்+புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன்=தேவி குளத்தில்,தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி.கே. நாயரை விட,7,089 வாக்குகள் வித்தியாசத்தில் ரோசம்மா மகத்தான வெற்றி பெற்றார்.
தமிழர்களை எதைக்கொண்டு அடித்தால் வீழ்வார்கள் என்கிற மகத்தான பார்முலாவை தேவிகுளத்தில் அறிமுகப்படுத்தியது மகத்தான தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள்...
மொழிவழி பிரிவினையால் தமிழகத்திடமிருந்து வஞ்சகமாக பெற்ற தேவிகுளத்தில், இப்படி மலையாள அட்டூழியம் நடக்கிறதே என்று தமிழக மார்க்சிஸ்டுகள் முண்டா தட்டி இருக்கவேண்டும்... மாறாக ரோசம்மாவின் வெற்றியை வெடி போட்டு கொண்டாடியது தமிழக கம்யூனிஸ்ட் கட்சி.
மொழி வழியாக இந்தியா பிரிய வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியினுடைய மோசடிக்கு எதிராக நின்றிருக்க வேண்டும் இந்த கம்யூனிஸ்டுகள். அல்லது மொழிவழியாக நடக்கவிருக்கும் பிரிவினைக்கான பொது அஜெண்டா ஒன்றை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியிருக்க வேண்டும். காரணம் இந்தியாவின் முதல் பிரதான எதிர்க்கட்சி அவர்கள்தான்.
ஆனால் இவற்றில் எதையும் முறையாகச் செய்யாத இவர்கள், 1938 ஆம் ஆண்டிலிருந்தே மொழி அடிப்படையில் நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருந்த தோழர் ஈ எம் எஸ் ன் நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் நில உச்சவரம்பு சட்டம், உள்ளபடியே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
கொடுமை என்னவென்றால் தோழர் எம் எஸ் தன்னுடைய முதல் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த எந்தச் சீர்திருத்த சட்டமும், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் அமல்படுத்தப்படவில்லை என்பதுதான்.அப்படி அமல்படுத்தப்பட்டதாக தோழர்கள் எவரேனும் நிரூபிக்க விரும்பினால், தயவுசெய்து சான்றுகளோடு வாருங்கள்.
தோழர் ஈ எம் எஸ் கேரள நாட்டை ஆண்ட போதுதான், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் 18 மணி நேரம் தேயிலை காடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லி திருவனந்தபுரத்திலும், எர்ணாகுளத்திலும் கம்யூனிஸ்டுகள் முழக்கமிட்டு ஊர்வலம் சென்றபோது, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த அப்பாவி தோட்டத் தமிழ் தொழிலாளிகள் நாதியற்று கிடந்தார்கள்...
குத்தகை விவசாயிகளை பாதுகாப்பதற்காக தனிச்சட்டம் கொண்டு வந்து அவர்களுக்கு ஆறுதல் அளித்த தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்டினுடைய அரசு, கூலித் தொழிலாளர்களை பாடாய் படுத்திய தேயிலை கம்பெனிக்காரனுக்கு சர்வ சுதந்திரம் வழங்கியது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை காமராஜரோடு இணைந்து, தோழர் ஈ எம் எஸ் நிறைவேற்றியதாக பெருமை பீற்றிக் கொள்வார்கள் தமிழகத்து மார்க்சிஸ்டுகள்...
ஆனால்
பரம்பிக்குளம் பெருவாரிப்பள்ளம் தூணக்கடவு ஆகிய மூன்று அணைகளுடைய கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, மலையாளிகள் இன்றளவும் ஆடும் ஆட்டம் சொல்லிமாளாது.
இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது 1969 ஆம் ஆண்டு உபரி நிலங்களை ஏழை நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தினார் தோழர் ஈ எம் எஸ்...
அந்த இயக்கம் கேரளாவிலுள்ள அத்தனை குக்கிராமங்களுக்கும் பயணித்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டது.
மறந்தும்கூட அந்த இயக்கம் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு கடைசிவரை வந்து சேரவேயில்லை.
மலையாள மார்க்சிஸ்டுகளின்
ஏடான "தேசாபிமானி யின்" ஆசிரியராக இருந்து, தோழர் ஈ எம் எஸ் எழுதிய கட்டுரைகளை 100 நூல்களாக தொகுத்திருக்கிறார்கள்.அந்த 100 தொகுப்புகளில் ஒன்றாவது தேவிகுளம் பீர்மேடு அப்பாவித் தமிழர்களைப் பற்றி பேசியதா...?
மக்கள் திட்டம்
கேரள இலக்கிய இயக்கம்
என்ற பெயரில் அதிகாரத்தை பரவலாக்குவதற்காக, இயக்கம் நடத்திய தோழர் ஈ எம் எஸ் அவர்கள், கவனமாக தேவிகுளம் பீர்மேட்டை தவிர்த்தார்.
இத்தனைக்கும் அவரது கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கம், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் இரண்டாவது மிகப்பெரிய தொழிற்சங்கம்... ஆனாலும் தமிழ்க்கூலிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு தெளிவாகவே தெரிந்தது.
தோழர் ஈ எம் எஸ் ன் சகாவான,வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள்,
1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு, நடந்த பொதுத் தேர்தலில், கூத்துபரம்பா சட்டமன்றத் தொகுதியில், இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
அந்தக் காலம்தான் மொழிவழி பிரிவினை குறித்தான இயக்கங்களும் அமைப்புகளும் உருவான காலகட்டம்...
அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில், வி.ஆர். கிருஷ்ணய்யர் பேசிய பேச்சுக்கள் இன்னமும் அவைக்குறிப்பில் இருக்கிறது...
தேவிகுளம், பீர்மேடு, கூடலூர், ஊட்டி, செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீஸ்வரம்...உள்ளிட்ட பகுதிகளை எதற்காக கேரளாவோடு சேர்க்க வேண்டும் என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆற்றிய உரை முற்று முழுவதுமாக,வடவேங்கடம் ஆயிடை தென்குமரி என்று தொல்காப்பியன் கண்ட கனவுக்கு எதிராகவே இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
ஐக்கிய கேரளத்தை அமைப்பதில் வி.ஆர். கிருஷ்ணய்யர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு பரிசாகவே, தான் 1957-ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும்,,,
சட்டம் நீர்ப்பாசனம் உள்துறை என முக்கிய துறைகளுக்கு வி.ஆர். கிருஷ்ணய்யரை அமைச்சராக்கி அழகு பார்த்தார் தோழர் ஈ எம் எஸ்...
ஒருகட்டத்தில் தோழர் ஈ எம் எஸ் ன் சிந்தனைகளை செயல்படுத்துவதில் கெட்டிக்காரராக விளங்கும் அளவிற்கு, கொடிகட்டிப் பறந்தார் கிருஷ்ணய்யர்.
1948 ஆம் ஆண்டு நீதியரசர் தார் தலைமையிலான, திரு. இராமலிங்கம் மற்றும் திரு.ராமகிருஷ்ணராசு ஆகியோர் அடங்கிய குழு,..
""மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் அமைவது கூடாது"" என்று சிபாரிசு செய்தபோது,அதை முதலில் எதிர்த்ததோடு, மொழிவழி மாநிலங்களின் பிரிவினை குறித்து பக்கம் பக்கமாக எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரர் தோழர் ஈ எம் எஸ்.
கேரளா முழுவதும் உள்ள ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்காக காலமெல்லாம் வக்காலத்து வாங்கிய தோழர் ஈ எம் எஸ் அவர்களால்...மறந்தும்கூட தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த அப்பாவித் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பற்றி சிந்திப்பதற்கு நேரமின்றி போய்விட்டது...
நிலவியல் அடிப்படையில் தேவிகுளமும் பீர்மேடும் வேண்டும்...
ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைப்பதற்கு அப்பாவி தமிழ்க்கூலிகள் வேண்டும்...
ஆனால் உரிமை என்று வந்துவிட்டால் அது கோட்டயம் தாண்டி முண்டக்காயத்தோடு நின்றுவிடும்...
நிலவியல் அடிப்படையிலும்...
மக்கள்தொகை அடிப்படையிலும்...
மொழிவழி பிரிவினை குழுவின் சட்டத்தின் அடிப்படையிலும்...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தமென்று...
கொஞ்சம் கூட உறைக்கவில்லையா தமிழகத்துத் தலைவர்களான தோழர்கள் பி.இராமமூர்த்தி மற்றும் ஜீவாவிற்கு...
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று சென்னையில் மாநாடு நடத்தினால் போதுமா...
எங்கள் நிலம்
எங்கள் மக்கள் என சட்டத்தின் அடிப்படையில் அது எங்களோடுதான் சேர வேண்டுமென்று களத்தில் நின்று முண்டாதட்டியிருக்க வேண்டாமா...?
குறைந்தபட்சம் தமிழகத்து கம்யூனிஸ்டான தோழர் பி ராமமூர்த்தி அவர்கள்...
தொலைபேசியில் கூட தோழர் ஈ எம் எஸ் சிடம் உரையாடி இருக்கலாமே...
இத்தனைக்கும் அன்றைக்கு தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த கம்யூனிஸ்டுகளான வி.பி .சிந்தன்,
உமாநாத்,
பாப்பா உமாநாத்,
போன்றவர்களெல்லாம் கேரளாவின் காசர்கோடு பகுதியில் இருந்துதான் தமிழகத்தில் வந்து பொதுவுடமை அரசியல் செய்தார்கள் என்கிறது வரலாறு...
கீழத் தஞ்சையில் பண்ணையார்களிடம் உரிமை கேட்டு களத்தில் நின்ற கூலித்தொழிலாளிகளுக்கு தலைமை தாங்குவதற்கு, எங்கோ கர்நாடகாவிலிருந்து தோழர் சீனிவாசராவை இறக்குமதி செய்த கட்சி...எதற்காக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் உள்ள தமிழ் தொழிலாளிகளுக்கு பணி செய்வதற்காக, தமிழகத்திலிருந்து தோழர் ராமமூர்த்தியை யோ அல்லது ஜீவானந்தத்தையோ கேரளாவிற்கு அனுப்பவில்லை என்று கேட்க நினைக்கிறேன்...
துரோகங்கள் தொடரும்...
-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக