(ப. அருளி அவர்களின் "வேரும் விரிவும் -1" என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)
பூதியல்
பொருள் மற்றும் ஆற்றல் இவற்றிற்கிடையிலான ஊடெழுவினைகள் பற்றியதும், பொருள்களோடு தொடர்புடையதுமாகிய ஆய்வியலாகிய "Physics" என்னப்பெறும் இவ் அறிவியற்பிரிவை - இங்கு "பௌதிக சாஸ்திரம்", "பௌதீக விஞ்ஞானம்" , "பௌதீகம்", "பௌதிகம்" என்றவாறான கொடுவடிவங்களிலேயே கேட்கும்படியான ஆரியவயப்பட்டிருந்த, ஒரு நூற்றாண்டுக்கும் முன்னரிருந்து நம்மவரைப் பின்னிக் கிடந்தது!.
பூதநூல்-பொருள்நூல் (சென்னை மாகணத் தமிழ்ச்சங்கம்:1936), பௌதிகம் (சென்னை அரசு கலைச்சொல் தொகுப்பு:1947), பௌதிகவியல் (1960), பௌதிக விஞ்ஞானம் (இலங்கை : அரச கரும மொழித் திணைக்களம்:1960), இயல்பில், இயற்பியல் (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்:1972), பூதவியல் (தமிழியக்கப் பசறை- காரைக்குடி: 1972)- என்றவாறு எழுவகைப்பட்ட வடிவங்களிலும் இவ்அறிவியற் பிரிவு, பெயர் வேய்ந்து கொண்டு அலைந்து- ஒருவாறு "இயற்பியல்" சொற்சுட்டுகொண்டு, இன்று அழுத்தம் பெற்று நிற்கின்றது.
இதன் தகுதிநிலை வரையறுப்புக்கும் முன்னீடாக- இத்துறை பற்றிய பெயரீட்டுக்கு அடிக்களனாக விளங்கும் நம் மரபு வழிப்பட்ட நோக்கில், சில பகுதிகளை விளக்கிச் சொல்வது தேவையான தெண்மைக்குத் (தெளிவிற்கு) தென்பூட்டமாகி நிற்கும்...!
பூ = விரிவடை, மலர்வுறு
("பூ" என்னுமிச் சொல்லாக்கத்திற்கும் முன்னீடாக , வேர்விளர்ச்சி நிலையுண்மைகள் உள! இங்கு அவை விரிவஞ்சி விடப்பெற்றுள்ளன)
பூத்தல்- விரிவடைதல், மலர்தல், தோன்றுதல், அகற்சியுறுதல் (அகலிதாதல்)
அகலிதாயிருத்தல் - (அகற்சியுற்றிருத்தல்- பரந்துபட்டிருத்தல்) என்னும் கருத்தடிப்படையிலேயே, இவ்வுலகம் தமிழில் - "பார்" என்னுமொரு சொல் கொண்டுங்குறிப்பிடப்பெற்றது.
பா=பரப்பு. "பாவடி யானை"
பா+அர்>பாஅர்>பார்= பரந்த நிலம்.
பார்+அகம்>பாரகம்=உலகம்.
பரந்து விரிந்ததாகிய இப் பாரகத்தை, -நனந்தலை, வியன்றலை, வியலகம், மலர்தலை என்றவாறெல்லாம், பல வடிவங்களிற் பயின்றுள்ளமையுள் - நம் தமிழினத்தவரின் கருத்துப்போக்கு ஒருமை- ஐயந்திரிபறப் பதிவெய்தியுள்ளது. இதே அடிப்படையிலேயே - பரந்துபட்ட இப்புலகைப் "பூ" என்றும் வழங்கியுள்ளனர்! "பூவுலகம்" என்னும் உலகவழக்குச் சொல்லும் பரப்படிப்டைக் கருவையே உருத்தி நிற்கின்றது! பூ=உலகம் (பிங்:3875)
ஆரியர் வருகைக்கு முன்னர், நாவலந்தேயம் முழுமையிலும் நத்தமிழரும், நம் இனப்பிரிவினருமே பரந்து வாழ்ந்தனர். அவர்கள் வட்டார வழக்கு மொழிகள் யாவும் தமிழின் திசைவு- திரிபு ஆகிய வழக்குக்களாலான தொகையங்களே. அவற்றில் ஒன்றில் ஒரு புதிய கூட்டுச்சொல் ஒன்று இருந்துள்ளது. அவ்-அரிய இனிய கூட்டுச்சொல்- "பூ-மண்" என்பதாகும்.
இப் "பூ-மண்" என்னும் அழகிய செப்ப வடிவத்தை, ஆரியர் தம் இருக்கு வேதம் என்னும் மறையோத்துக்குள்
"Bhuman" என்றவாறேயே நுழைத்து வைத்துள்ளனர். (Bhuman- the earth, world). கடைமறையாகிய அவர்களின் அதர்வண வேதத்துள், இப் "பூ மண்" என்ற வடிவத்தை "Bhuman என்று குறுக்கி- ஆள்புலம், தேசம், மாவட்டம் என்னும் பொருள்பட படிவித்துள்ளனர். பாலி மொழியுள், இப் "பூ மண்" என்பதன் திரிபுவடிவாகிய "Bhumma" என்பது - மண்ணை மட்டுமே குறித்துப் பயில்வது கூர்ந்து கருதுதற்குரியது.
இப் "பூ மண்" என்பது, - சமற்கிருதத்துள் "Bhuman" என்று நின்று பயில்வுற்ற பின்னர்- அருகிக் குறுகிக் கடைதிரிந்த நிலையிலாகி "Bhumi" என்றவாறு வழக்குறத் தொடங்கியது! இவ்வகைத் திரிபுச் சாரல்வழி, Bhum என்றவாறான வடிவுகளும், வடபால் மொழிகள் சிலவற்றுள் படிந்தன!
Pali : Bhumi = earth, ground
: Bhummi = soil
Prakrit : Bhumi, Bhummi = ground
Nidoc. : Bhuma - Land
Waigali : Bhum
Kashmiri : Bum
Old Gujarati: Bhuim
Kalasha : Bhum
Etc....
"பூ" என்றவாறு பரந்துபட்ட இவ்வுலகைக் குறித்த தமிழ்ச்சொல், வடபால் தமிழினப் பிரிவாரின் ஆட்சிக்கிடையே பூ>பூ+இ>பூயி என்றவாறு இடப்பொருளீறான ஐகாரத்தின் அடுத்த திரிபான "இ" சேர்ந்த நிலையிலாக வழங்கியுள்ளது.
[ஐ : ஓரிடப் பொருளீறு. (ஒ.நோ: கொல்லை, படப்பை, வேலை) இதன் மரபு நீட்சியே, ஊர்ப்பெயரைச் சுருக்கமாகக் கூறுகையில் - சுட்டுகையில் இக்காலும் பதிவெய்திப் பயில்வுறுகின்றது.
(காண்க: புதுச்சேரி>புதுவை
புதுக்கோட்டை>புதுகை
கோவன்புத்தூர்>கோவை
நெல்வேலி>நெல்லை
மாமல்லபுரம்>மல்லை
(கொல்+ல்+ஐ> கொல்லை = மரஞ்செடிகொடிகளை வெட்டியும் தீயிலிட்டும் அழிக்கப்பட்டு செப்பப்பெற்றதாகிய புன்செய் நிலம்)
கொல்லுதல் = அழித்தல்
ஒ.நோ: 1. "காடு கொன்று நாடாக்கி..."
2."இளைதாக முள்மரம் கொல்க| (குறள்)
மரத்தை அழித்து, அதனில் பொருள்களை உருவாக்கும் தச்சர், "மரங்கொல் தச்சர்" (மரங்கொஃறச்சர்)
என்கிறது மணிமேகலையின் (28:37) பதிவு. இக்கொல்லை என்பது "கொல்லி" என்றவாறு வழக்கில் பயில்வுறும் நிலையில் - இவ் ஐகார- இகரத் திரிபின் போங்கைக் காணலாம்.]
பூ>பூ+இ>(பூயி)
வடபால் மொழிகள் சிலவற்றில்,
Sindhi - Bhui
Lahnola - Bhoe
Awankari - Bhui
Punjabi - Bhui
Bengali - Bhui
Maithili - Bhuvi
Etc......
பூ>பூ+து = பூது = விரிவடை
பூதுதல்= விரிவடைதல்; பெரிதாதல்
பூதித்தல் >பூரித்தல் = விரிவடைதல், பெரிதாதல்
இறும்பூது = பெருவியப்பு ; பெருவியப்பாலேற்படும் மகிழ்வு; வியப்பு
" இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்" (மதுரைக்: 486)
பூது+அன்>பூதன் = பெரியோன்; பெருமைக்குரியவன்
பெருமைக்குரியவன் என்றவாறான பொருளில் வரும் - இப் "பூதன்" என்னும் பெயர், கழக இலக்கியங்களில்:
இளம்பூதனார், கரும்பிள்ளைப் பூதனார், காவன்முல்லைப் பூதனார், நப்பூதனார், குன்றம்பூதனார், சேந்தம்பூதனார், சாத்தன்பூதனார், பெரும்பூதனார், வெண்பூதன், ஈழத்துப்பூதன், பூதங்கண்ணனார், பூதப்பாண்டியன்.
பூதன் + தந்தை > பூந்தை
ஆதன் + தந்தை > ஆந்தை
"ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு பெயரொற் றகரம் துவரக் கெடுமே"
(தொல். எழுத்.உயிர்: 348)
பூது = பெருகு; விரிவடை; வளர்
>(சமற்கி) bhuta : become
(Pali) bhuta : grown, become
பூது+அம் >பூதம் = விரிவடைவது; விரிவடையும் தோற்றம் உடையது; விரிவுறுந் தோற்றத்துப் பெரும்பேய்
"கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடும்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோல்" (பெரும்: 235)
(நச்.உரை: துணங்கைக் கூத்தாடுகின்ற அழகினையுடைய பூதங்கள், வெள்ளிய துகிலையுடுத்து நின்றவைபோல்.....)
பூதம் >(சமற்கி) Bhuta = spirit, demon
(பாலி) bhuta = demon
பூதம் >(Greek)> Puthon : soothsaying demon
[Puthon>Python (Greek) a huge serpant or dragon killed by appollo]
> (English) Pythomers = Witch
விரிவுறும் இயற்கைக் கூறுகளாகிய நிலம், நீர், தீ, வளி, வெளி என்னும் ஐந்தும், "பூதம்" என்னும் பெயரால், பண்டைய தமிழ மாந்தரால் சுட்டப்பெற்றன!
1. "காலம் உலகம் உயிரே யுடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்" (தொல்.கிளவி: 58)
2."மண்டினிந்த நிலனும் - நிலனேந்திய விசும்பும் -
விசும்புதைவரு வளியும் - வளித் தலைஇய தீயும் -
தீமுரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல்"
(புறம் : 2:1-6)
3. "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்" (குறள்: 271)
4."வளியென வரூஉம் பூதக் கிளவியும்" (தொல். எழுத்.உயிர்: 242)
பூதம் >(Skt) Bhuta > bhautika
Bhautika Sastra : Physics
[ஒ.நோ: புத்ர>Pautra, புத்தம்>bauddha,
புராணிக>Pauranika, புருஷ>Paurusha,
குமார>Kaumara]
"பூ" என்னும் நம் தமிழ் வேரோலி, - கிரேக்க மொழியில் "phu" என்றவாறே படிந்து, பரத்தல் - விரிவடைதல் போலும் கருத்தடிப்படைகளையுடைய
பல சொற்களை, அங்கு கிளைக்கும் நிலைகளுக்கான வாய்க்காலிட்டுள்ளது!
[ (GK) phu = widespread
(GK) pu >phu> blow, inflate
(GK) phusa> (Latin) pusula> pussula>pustula> (old French) pustule>
(Eng) pustule = pimple (கொப்புளம், பரு)
காண்க: பக்:726. Ox.Dic of English Etymology.- C.T.Onions) ]
"பூ" என்னும் தமிழ்வேர் வழியிற் கிரேக்கமொழியிற் படிந்த "phu" என்னும் அடிச்சொல்லின் கிளைப்பாகவே, Phusis (=nature) (=இயல்பாகத் தோன்றி விரிவடைவதாகிய இயற்கை) என்றவாறான ஆக்கச் சொல்லும், அங்கு எழுந்தது!. "Phusis" என்னும் சொல்வழியில் "Phusikos" என்னும் பிறிதொரு வடிவந் தோன்றி, - அதுவே "Phusike" என்னுமாறு திரிபுற்று- இலத்தீனத்தில் Physica, Physicae என்னும் வடிவங்களிலும், பிரஞ்சில் Physique என்னும் வடிவத்திலும் படிந்து பரந்து பயில்வுற வலிகோலியது! இவையனைத்திலும் இயற்கையறிவியல் (natural science) என்னும் செப்பப்பொருளே கொள்ளப்பெற்றது!
"Physique" என்னும் பிரஞ்சு வழக்கு, மேலும் திரிந்து "fisique" என்னும் வடிவெய்தியது. இயற்கைப் பொருளினின்று கிடைக்கும் மருந்து(medicine) என்ற பொருளில், இவ்வடிவு பயில்வுற்றது.
[ (GK) Phusikos (phusis>phusi (kos- suffix)= nature , essence of a thing]
இத் தகுநிலைகளிலான தொடர்புறவுகளின் தாக்குரவாலேயே, இன்று "physics" என்று வழங்கும் ஆங்கிலச்சொல்,
1. இயற்கை அறிவியல் (natural
science)
2.மருந்து (medicine)
3. மருந்து உருவாக்கம் (Medicinal
preparation)
4. உடலை நலப்படுத்தும் கலை
(Healing art)
என்றவாறான நாற்பொருட்பாடுகளில் பயன்படுத்தப்பெறுகிறது என்பதையும், நாம் இவ்விடத்தில் கருதிப்பார்த்தல் வேண்டும்.
அறிவியற்கருத்துகளின் விரிவும் விளக்கமும் - தெரிவும் துலக்கமும் பெருகப் பெருகத் - தொகுபெயரில் அமைந்திருந்த தொடக்கப் பெயர் - வரையறையுடையதாகிய ஒரே ஒரு செப்பப் பொருட்பாட்டில் மட்டுமே வழங்கவும் - அதனின் நுண்பகுதிகளுக்குக்குரிய கூறுகள் பல்வேறு துறைப்பிரிவுகளாகத் தனித்தனியே வளர்ந்துவரவுமான முறைநிலையொழுங்கு, இக்காலத்தில் மிகத்தெளிவாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் "இயற்கை அறிவியல்" என்னும் பொதுப்பொருளில் வழங்கி நின்ற "physics" (=natural science) என்பது , - பொருள் மற்றும் ஆற்றல் இவற்றிற்கிடையிலான ஊடெழுவினைகள் பற்றியதும் - பொருள்களோடு தொடர்புடையதுமான ஆய்வியற்பிரிவு" - என்னும் தெளிந்த வரையறுப்புடைய பொருளில், இன்று நின்று நிலைகொண்டுள்ளது!
"Nature" என்றச் சொல்லுக்கு, - இயற்கை, இயல்பு (இயற்கைப் பண்பாகிய நடத்தை) என்றவாறான இருவகை அடிப்படைப் பொருள்கள் பரந்த பயில்வுநிலையில் உள்ளன. இதனுள் " இயற்கை" என்னும் பொருளடிப்படை மட்டுமே "physics" என்பதன் கருவகத்துள் உள்ளது என அறியாது மயங்கிய இயல்பினராய் - nature என்னும் சொல்லுக்கு அமைந்திருக்கும் "இயல்பு" என்னும் பிறிதொரு பொருளையுட்கொண்ட சிலர், ("இயல்பு" என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பதினாறு வகைப்பட்ட பொருட்பாடுகள் தமிழுள் உள்ளலவாதலின்- அவற்றின் வழியே பின்னர் நேரலாகும் மயக்கங்களையும் குழப்படிகளையும் எண்ணிப்பாரோதாராய்-)- மிகப் பிழையான பொருட்பாடு அமையுமாறு "இயல்பியல்" (=physics) என்றவாறு துறைப்பெயர்நிலையில் முட்டுக்கட்டைதனத்தோடு சுட்டவும் பயிலவும் தொடங்கினர்!
இது, இயல்பு பற்றிய இயலன்று என்று இடைநின்று சிந்நித்த சிலர், "இயற்பு" என்னும் சொல்வடிவை மீளவுஞ் சமைத்துக்கொண்டு, ('இயற்பு" என்னும் சொல்லுக்கு "இயக்கம்" என்னும் பொருட்பாடு மட்டுமே, முன்னர் வழக்கிலிருந்தது. (காண்க: இயற்பின்றி எல்லாம் இருள் மூடமாமே" திருமந்திரம் :2210) இயலை உடனிணைத்து "இயற்பியல்" என்றவாறு வழங்கிவரத் தலைப்பட்டனர்! (காண்க: செ.ப.க. ஆங்கிலம் - தமிழ் அகராதி. பக்: 733 & 216 ஆட்சி.அக)
"இயல்பியல்" மற்றும் "இயற்பியல்" என்பன- கிரேக்கச்சொல்லுக்குரிய பொருட்பாடுகளை அடியொற்றி அமைக்கப்பெற்ற குழப்பவடிவங்கள்!...
பௌதீகமும், பௌதீக (இயலும்), பௌதீக (விஞ்ஞானமும்), - இயற்கை வியல்வுப் பொருள் குறித்துச் செந்தமிழில் ஆக்கம் பெற்றிருந்ததும், நீணெடுங்காலமாக மிகப்பரவலாக இம்மண்ணில் தொடர்ந்து வழங்கப்பெற்று வருவதுமான (பூது+அம்)>பூதம் என்னும் சொல் கண்டு- கொண்டு கோணுறுத்திய நிலையிலாகப் புரட்டியெடுத்துப் பதித்துக்கொண்ட சமற்கிருத வழியிலாகிய சுட்டுகள்!......
"பூதநூல்- பொருள்நூல்" என்றவாறு, சென்னை மாநிலத் தமிழ்க்கழகத்தார் (சென்னை மாகணத் தமிழ்ச்சங்கம்) (1936)- குறித்ததுவும் - அதனை உற்று உள்நோக்கிப் - பற்றி அடியொற்றிய நிலையிலாகப் "பூதவியல்" என்றவாறு காரைக்குடித் தமிழியக்கப் பாசறையினர் (1972) மீண்டும் புதுக்கி வழங்கிப் பதித்ததுவும் - தமிழர் மரபையும் உணர்வையும் மதித்து உணர்ந்து வழிப்பட்டு இயங்கும் மானத்தகைமையுடையன!
பண்டைப் பேதையருட் சிலர், அறியாமை சான்ற மனவச்சக் கருத்தேற்றக் கோளாற்றால், -படிப்படியே விரிவடைந்து பருப்பமுறுவதாகக் கருதிக்கொண்டு சுட்டிய - பெயர்சூட்டலின் வழியே பெருக நின்றாடிய "பூதம்" என்னும் பேய்வகையுட் பேருருவாகிய ஓர் அல்லுருவை, இவ்விடத்தில் மீண்டும் தேவையில்லாமலேயே கருதி அச்சமும் மயக்கமும் கொள்ளுதற்கு மேலும் இடந்தரா நிலையிலாக [(பூதம்+இயல்)>பூதவியல் என்னும் மயக்கந்தருஞ் சொல்லமைவைத் தவிர்த்துவிட்டு-] - விரிவடைதற் கருத்தடிப்படையையுடைய அடிச்சொல்லான "பூது" என்னும் வடிவை மட்டுங்கொண்டு "இயல்" என்பதை அதனொடு இயல்பாகப் புணர்த்தி- (வேதியல் என்னும் வடிவுக்கு நேரிய வகையில்....)
"பூதியல்" (=physics) என்றவாறு ஏற்புற அமைத்துக்கொண்டு வழங்கத்தலைப்படுத்தலே - சரியாகும்!....
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
32 விடை 2051
[௩௨/०௫/௨०௫௧]
(14-06-2020)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக