தமிழர் இழந்த நிலம்-8
(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)
தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையில்... தமிழகத்திற்கு தந்தை பெரியார் செய்த துரோகத்தின் சம அளவு துரோகம், கம்யூனிஸ்டுகளாலும் நிகழ்த்தப்பட்டது.
தூக்குத் தண்டனைக்கு எதிராக உலகமெல்லாம் தன்னுடைய கண்டனக் குரலை பதிவு செய்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் முதல்-இன்றைய பிஜுமோள் வரை தமிழகத்திற்கு எதிரான துரோகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சர்வ தேசியம் பேசுகிற இந்திய கம்யூனிஸ்டுகள் எந்த அடிப்படையில்,இன்னொரு மாநில நலனுக்கு எதிராக செயல்பட முடிகிறது என்பதுதான் என்னை ஆச்சரியப்படுத்தக் கூடிய செய்திகளுள் முதன்மையானது.
தேவிகுளம்- பீர்மேடு பிரச்சினை தொடர்பாக சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், தமிழகத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, தமிழக கம்யூனிஸ்டுகளான தோழர்கள் ஜீவா, ராமமூர்த்தி போன்றோரை நடுநிலைமைபடுத்தவும் அவரால் முடிந்தது.
இதே வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு பிரச்சினை தீவிரமடைந்திருந்த நேரத்தில்,அணையை உடைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த கேரளமும் நடத்திய மனிதச்சங்கிலியில், கிருஷ்ணய்யர் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல், கொச்சியில்... கொட்டும் மழையில் கரம் கோர்த்து நின்று அணைக்கு எதிராக முழங்கியது இன்றளவும் என் கண்களை விட்டு அகலவில்லை.
ஆக 1956 களில் அவருக்கு இருந்த தமிழ் எதிர்ப்பு உணர்வு, 50 ஆண்டுகள் கடந்தும் கிஞ்சித்தும் குறையவில்லை என்பதுதான் உண்மை.இதற்கிடையில் அவர் மாநில அமைச்சராக இருந்திருக்கிறார், உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்திருக்கிறார்,,, இன்னும் சில சிறப்புப் பதவிகளையும் அவர் அலங்கரித்திருக்கிறார்.ஆனால் அத்தனை பதவிகளை வகித்த பின்னரும் அவருடைய நெஞ்சில் அணையாது இருந்த நெருப்பின் ஒரு வடிவம் "தமிழர் எதிர்ப்பு".
அதே நேரத்தில் மலையாள நாட்டில் ஆட்சியிலிருந்த, பட்டம் தாணுப்பிள்ளையோடு கரம் கோர்த்து நின்று, தேவிகுளம்- பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்குதான் வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து முழங்கியவர், கம்யூனிஸ்டுகளின் ஆகப் பெரிய தலைவராக இருந்த தோழர் ஏ.கே. கோபாலன் அவர்கள்.
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம், தோழரின் பெயரால்,ஏ.கே. கோபாலன் பவனம் என்றுதான் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.கேரளாவின் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமும் இவர் பெயரில்தான் செயல்பட்டு வருகிறது.
தேவிகுளம்- பீர்மேடு பகுதிகள், கேரளாவிற்கு போகவேண்டும் என்று, சென்னை மாகாண சட்டமன்றத்தில் அமைதி காத்து, நடுநிலைமை வகித்த தோழர் இராமமூர்த்தியின் பெயர் சென்னையில் உள்ள மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சூட்டப்பட்டு, அது பி.ஆர் நினைவகமாக இன்று செயல்பட்டு வருகிறது.
இதுபோக அன்றைக்கே டெல்லியிலே பண்டித நேருவின் நெருங்கிய சகாவாக விளங்கிய வி. கே. கிருஷ்ண மேனன்,
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கே.பி.எஸ். மேனன்,
உள்துறைச் செயலாளர் வி.பி. மேனன்,
துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன்,
அன்றைக்கு கேரள காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கோலப்பன்,,, அனைவரும் ஓரணியில் நின்று தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை, கேரளாவோதான் இணைக்க வேண்டும் என்று களத்தில் நின்றார்கள்.
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில்,அடித்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற, மார்சல் நேசமணி, தியாகி பி.எஸ் .மணி உள்ளிட்டவர்களை, வலுக்கட்டாயமாக கைது செய்து தேவிகுளம் சிறையில் அடைத்த, பட்டம் தாணுப்பிள்ளையின் எதேச்சதிகார அரசை கண்டித்து,09-08-1954 ல் தென் எல்லை முழுவதும் விடுதலை நாளுக்கு அறைகூவல் விடுத்திருந்தார் மரியாதைக்குரிய திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸின் மாபெரும் தலைவரான குஞ்சன் நாடார் அவர்கள்...
அந்தத் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் தோழர் ஜீவா.தோழர் ஜீவா இந்தக் கோரிக்கையை குஞ்சன் நாடாரிடம் வைப்பதற்கு காரணமாக இருந்தது, அன்றைய திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை என்று பின்னாட்களில் தியாகி பி. எஸ். மணி குற்றஞ்சாட்டுகிறார்.
ஜீவாவின் பேச்சை நம்பி 11- 08-1954 க்கு விடுதலை நாளை மாற்றியதன் விளைவு, 11 அப்பாவித் தமிழர்களை பட்டம் தாணுபிள்ளை காவல்துறை சுட்டு வீழ்த்துவதற்கு காரணமானது...
நெருக்கடியான அந்த காலகட்டத்தில்
எங்கு தேடியும் தோழர் ஜீவாவை காணவில்லை என்று
வருந்துகிறார் பி. எஸ்
மணி...
நீங்கள் கேட்கலாம் எத்தனை அப்பழுக்கற்றவர் தெரியுமா ஜீவா என்று...
நானும் அதை மறுக்கவில்லை...
ஆனால் கம்யூனிஸ்ட் களுக்கு அவர்களுடைய நிலம் என்று எதுவுமில்லை என்று நான் நினைத்ததெல்லாம், பொய்யாய் போனதற்கு பின்னால் தோழர் ஜீவாவும் இருக்கிறார்...
ஈழத்தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் மகேந்திரன் போன்றவர்களெல்லாம் எடுத்தபோது உண்மையிலேயே அகமகிழ்ந்ததில் அடியேனும் ஒருவன்...
ஆனால் தோழர் மகேந்திரன் போன்றவர்கள், முல்லைப் பெரியாறு விடயத்தில் எடுத்த நிலைப்பாடு என்ன என்பதுதான் நம்முடைய கேள்வி.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில கமிட்டி. தமிழக கமிட்டியின் நிலைப்பாடு என்ன...?
இதற்கிடையில் இன்னொரு கூத்தையும் சொல்லி முடிக்கிறேன்...
பிரபல தமிழ் நாளிதழான
தினத்தந்தி அதிபரும், பின்நாட்களில் தமிழக சட்டமன்ற சபாநாயகராகவும், அமைச்சராகவும், நாம் தமிழர் கட்சியின் நிறுவனராகவும் இருந்த திரு சி.பா.ஆதித்தனார் அவர்கள், மொழிவழி பிரிவினை உச்சகட்டத்தில் இருந்தபோது, பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவர் என்கிறது வரலாறு...
இந்தப் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் முதல்வரான பட்டம் தாணுபிள்ளைதான் தேவிகுளம் பீர்மேடு பகுதியிலும், தென் எல்லையிலும், கேரள காவல்துறையைக் கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கிக் கொண்டிருந்தார்...
தன் கட்சியின் முதல்வரான பட்டம் தாணு பிள்ளையின் இந்த அரச ஒடுக்குமுறையை கண்டித்து, அக்கட்சியின் தலைவரான திரு லோகியா அவர்களே தன் பொறுப்பிலிருந்து விலகினார் என்றால்...
சி.பா. ஆதித்தனார் என்ன செய்திருக்க வேண்டும்...?
வரலாறு நீளும்...
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக